தவன உத்ஸவம்
திருத்தேரின் முன்னழகு

சூரனுடன் போருக்கு செல்வதால் முருகனின் வேற்படை வில்லில் உள்ளதை கவனியுங்கள்.
திருத்தேரின் பின்னழகு
வள்ளி நாயகி திருத்தேர்
தெய்வ நாயகியின் திருத்தேர்
அதிகாலையில் நல்ல முகூர்த்த வேளையில் தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி வலம் வந்து மதியம் தேர் நிலைக்கு வந்து விடுகின்றது பின்னர் பக்தர்கள் தேரில் சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர். இரவு சிறப்பு அலங்காரத்துடன் சூரனை வென்ற வெற்றி வீரராக முருகப்பெருமான் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார். இந்த உத்ஸவம் தவன உத்ஸவம் என்றழைக்கப்படுகின்றது.
ஆணவம் கன்மம் மாயை என்னும் தாருகன், சிங்கமுகா சூறன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுக்கு பெரு வாழ்வு அளித்து( சம்ஹாரம் செய்து), சூர பத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் தனது கரத்தில் ஏந்தி தேவ சேனாபதி முருகர் வெற்றி வீரராக திருக்கோவிலுக்கு திரும்பும் அழகு.
இப்போது வெற்றி வீரர் என்பதால் வலக்கரத்தில் வேலை ஞான சக்தியாகவும், இடக்கரத்தில் சேவல் கொடியையும் தாங்கி வருவதைக்காணுங்கள் அன்பர்களே.
முழுவதும் மலர்களாலே உருவாக்கப்பட்ட மயில் வாகனம்
(இப்பதிவில் உள்ள படங்கள் முந்தைய வருடத்தியவை. )
அழகன் முருகனின் அற்புத அலங்காரங்கள் தொடரும்..........
2 comments:
அற்புதமான படங்கள்...
மிக்க நன்றி தனபாலன் ஐயா.
Post a Comment