Showing posts with label செங்குந்தக் கோட்டம். Show all posts
Showing posts with label செங்குந்தக் கோட்டம். Show all posts

Monday, April 11, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 5

 மேற்கு சைதாப்பேட்டை 
காரணீஸ்வரம்

இப்பதிவில் இன்னும் இரு ஆலயங்களின் ஆருத்ரா தரிசனங்களை காண்போம்.







நடராஜர் தரிசனம் 

சிவகாமி அம்பாள்

***********

செங்குந்தக் கோட்டம் 

நடராஜர் தரிசனம் 

சிவகாம சுந்தரி 

சண்முகர் 

வரும் பதிவில் சென்னை மண்ணடி முத்தியால்பேட்டை நவநடராஜர் சந்திப்பு  தரிசனக் காட்சிகளைக் காணலாம். 


  தரிசனம் தொடரும் .  .   .  .  . 

Wednesday, February 27, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -11

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 2)


சிவ சுப்பிரமணிய சுவாமி



பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி





பச்சை மயில் வாகனத்தில் வள்ளி நாயகி




இந்த வருட பின் பக்க அலங்காரம் மயில் முருகன். இதுவும் முழுதும் பூக்களினால் செய்யப்பட்டது.



  சிவசுப்பிரமணிய சுவாமியின்  அருட் கோலங்கள்   தொடரும்.....

Tuesday, February 26, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -10

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 1)

தனி யாணை சகோதரனின் எழிற் கோலம்

மூஷிக வாகனத்தில் மூத்தவன் கணேசன்

அருமை குமரனுடன் அம்மையப்பர் 


இடப வாகனத்தில் பிரதோஷ நாயகர்


வெள்ளி மயில் வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி 


முருகப்பெருமான்

ஓம் என்னும் தாரக மந்திரம் சிவனுக்கு மொழிந்த குரு மூர்த்தி

அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்

முருகன் , குமரன், ஆறுமுகன், திருமால் மருகன்

சிவகுமாரன், ஸ்கந்தன், மலைமகள் பார்வதி பாலன்  

ஒளி பொருந்திய ஞான சக்தி வேலை  ஏந்தியவன்

கார்த்திகேயன், கஜ முகனுக்கு இளையவன்

குகன், மயில் ஏறும் பெருமாள்

சூரனை சம்ஹாரம் செய்த கருணை  வள்ளல்

சுப்பிரமணியன், தேவ சேனாதிபதி

கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன்

இச்சா சக்தி வள்ளி, கிரியா சக்தி தெய்வாணை மணவாளன்

செவ்வேள், காங்கேயன், சிலம்பன்

ஆயிரம் பெயர் கொண்ட  அழகன்

தூயவன் சேவற் கொடியோன்

ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் கூறுபவர் சிந்தை குடிகொண்டோன்

அழகன் முருகனை துதி செய்தால் நீங்களும் மலம் ஒழித்து மெய்ஞ்ஞான அருள் பெறலாம் 


ஓம் என்னும் பிரணவப் பொருளோன்

தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத சுவாமி  அந்த பிரணவ வடிவில் ( ஓம் என்னும் மலர் அலங்காரத்தை கவனியுங்கள்)  அன்பர்களால் 2003ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் ஆனந்தமாக எழுந்தருளி திருவீதி உலா வந்து அன்பர்க்கு அருளும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அன்பர்களாகிய தங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். தரிசனம் செய்து கந்தன் கருணைக்கு பாத்திரமாகும் படி வேண்டிக்கொள்கிறேன்.    

பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி



 பச்சை  மயில் வாகனத்தில் வள்ளி நாயகி



பின்புற அலங்காரம்


முழுவதும் மலர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த பலகை வெள்ளி மயில் வாகன சேவையின் போது பின் பக்க அலங்காரத்திற்கு பயன் படுத்தப் படுகின்றது.  இந்த வருடம் " யாம் இருக்க பயம் ஏன் என்று " கூறும் அபயக் கோலம். 

                                                                                                                     ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -9

ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
(மண்டப அலங்காரம்)

ஐந்தாம் திருநாள் காலை சிவிகை உற்சவம் 


அழகு முருகனின் அருட் கோலங்கள்  அதிகமாக உள்ளதால்  இந்த ஐந்தாம் நாள்  பதிவுகளை மூன்று பாகங்களாக பதிவிட உள்ளேன்.  இப்பதிவில் உள்ள கோலங்கள் எல்லாம் மண்டப காட்சிகள். ஐந்தாம் நாள் இரவு தொண்டை மண்டலத்தில் எப்போதும் விசேஷ  உற்சவம். பஞ்ச மூர்த்திகளும் தம்முடைய வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இவ்வாலயத்திலும் ஐந்தாம் நாள் இரவு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்திலும்,   முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், தேவியர் இருவரும்  பச்சை மயில் வாகனத்திலும். எல்லா நாட்களையும் விட சிறப்பு அலங்காரம் இன்றுதான். 


விநாயகர், சிவ சக்தி, வள்ளி நாயகி


தெய்வ நாயகி -  சண்டிகேஸ்வரர் 


சிவ சுப்பிரமணிய சுவாமி 




                                                                   தெய்வ நாயகி -  சண்டிகேஸ்வரர் 



சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கீழே உள்ள படம்  அச்சிட ஏதுவாக திருத்தப்பட்ட படமாகும்.


ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....

Sunday, February 24, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -6

மூன்றாம் திருநாள் இரவு மேஷ வாகன சேவை 


சிவ சுப்பிரமணிய சுவாமி மூலவர் தேவியருடன் அருள் பாலிக்கின்றார். அதே சமயம் தேவியர் இருவருக்கும் தனி சன்னதிகளும் ஐயனின் உள் பிரகாரத்திலேயே உள்ளது. வள்ளி நாயகியை

காமதேனு வாகனத்தில் வள்ளி நாயகி

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

வள்ளி அன்னையை வணங்கிப்பின் தெய்வ நாயகி சன்னதிக்கு செல்வதற்கு முன் சுவற்றில் அபிராமி அந்தாதி கல்வெட்டு, அபிராமி அம்பாளின் சுதை சிற்பம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

இடப்பக்கம் தெய்வ நாயகி சன்னதி   அன்னைக்கு முன்னால் யாணை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அன்னையை வளர்த்தது ஐராவதம் என்னும் யாணை தானே.  

காமதேனு வாகனத்தில் தெய்வ நாயகி 
ஞான சக்தியான தேவ சேனாவை
சங்கரி தன் மருமகளை சங்கரி தன் மகளைச்
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் எனும் தயலை
வெங்கரிதங் பிடியை விண்ணவர் கோன் சுதையை
     விண்ணவர்கள் பணிந்தேத்தும் விண்ணுலகத் தணங்கை
பைங்கழு நீர் விழியாளை பைங்கழுநீர் நிழமே
     படைத்தாளை பைங்கழிநீர் செங்கரம் கொண்டாளை
செங்கமலை தரும் அமுதைக் கந்தர்  இடத்தருளும்
     தெய்வயாணையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.

இந்த இரு துதிப்பாடலும் தணிகாசல புராணத்தில் இடம் பெற்றது கல்வெட்டுகளாக அன்னையர்களின் சன்னதியின் அருகில் அமைத்துள்ளனர். பள்ளியறையும் இப்பிரகாரத்த்ஹில்தான் அமைந்துள்ளது. கோஷ்டத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு எதிரே துக்க நிவாரணி அஷ்டகம் கல்வெட்டு உள்ளது. இதுவரை இத்திருக்கோவிலை வலம் வந்து வணங்கினோம்.  இனி மூன்றாம் நாள் இரவு மேஷ வாகன சேவை காட்சிகளை இப்பதிவில் காணலாமா அன்பர்களே.

                                              ஆட்டுக்கிடா வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி 

முருகனுக்கு சூரனான மயில் மட்டுமா வாகனம் இல்லை , இல்லை தெய்வாணை அம்மையின் தந்தையான இந்திரன் அளித்த ஐராவதமாம் வெள்ளை யாணையும் திருமுருகனுக்கு ஒரு வாகனம். நாரதர் செய்த ஒரு வேள்வியின் போது மந்திர மாறுதல் காரணமாக ஒரு ஆட்டுக்கிடா தோன்றியது அது விண்ணையும் மண்ணையும் கதி கலங்கச்செய்தது. தேவர்கள் தேவ சேனாபதியாம் முருகனிடம் முறையிட வீரபாகுவை அனுப்பி முருகன் முன் கொண்டு வரச்செய்து அதன் திமிரை அடக்கி வாகனமாக கொண்டார்.  இதன் காரணமாக மேஷமும்( ஆட்டுக்கிடா) முருகனுக்கு உரிய வாகனமாகும்.

சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திம் மூன்றாம் திருநாள் இரவு முருகர் தனக்குரிய ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உடன் தேவியர் இருவரும் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.      
  






Friday, February 22, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -4

இரண்டாம் திருநாள் உற்சவம் 


வேத ஆகம-திருமுறை மண்டபத்தில் சண்முகர் சன்னதி மட்டுமல்லாது சிவபெருமானுக்கும் ஒரு தனி  சன்னதி உள்ளது. ஐயனின் திருநாமம் விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர், ஐயன் லிங்க ரூபமாகவும்  மிகவும் விசேஷமாக சோமாஸ்கந்தராக மூர்த்த ரூபத்திலும், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தூடன் அருள் பாலிக்கின்றாள்.விசாலாக்ஷி அம்பாள் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக தரிசனம் செய்கின்றார். கோஷ்ட தேவதைகள், சண்டிகேஸ்வரர், நந்தியெம்பெருமான் என்று எல்லா தேவதைகளும்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு ஸ்ரீ பிரதோஷ மூர்த்தியும் வெள்ளி  ரிஷப வாகனமும் பக்தர்களால் சமர்பிக்கப்பட்டு பிரதோஷம் தோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. சகல தோஷ நிவாரணத்தை அள்ளித்தரும் பிரதோஷ  விழாக்களில் ஏராளமான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொள்கின்றனர்.

பஞ்ச பர்வ உற்சவத்தின் பொதும் இவர் மாட வீதி உலா வந்து அருளுகின்றார்.  ஐயனை பாடிப்பரவிய தொண்டர்களான, அப்பர், திருஞான சம்பந்தர் சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமானும் ( இவரும் செங்குந்த இனத்தினர் என்பதாலோ?)   மூலவர் ரூபத்தில் ஒரு தனி கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளனர். ஐயனின் மஹா மண்டப முகப்பில் காஞ்சி காமாக்ஷி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி எழில் ஒவிய வடிவில் காட்சி தருகின்றனர். மேலும் பஞ்ச பூதத் தலங்களான, காஞ்சிபுரம், திருவாணைக்காவு, திருக்காளத்தி, திருவண்ணாமலை, சிதம்பரம் ஷேத்திரங்களின் ஐதீகம் ஓவிய வடிவில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.  மேலும் இம்மண்டபத்தில் அனுமனுக்கு ஒரு சன்னதியும், முப்பெருந்தேவியரான கலை மகள், அலைமகள், மலை மகள் ஆகியோருக்கும் தனி சன்னதி உள்ளது. இம்மண்டபத்தில் திருமுறை தொடர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கின்றது. 

இரண்டாம் திருநாள் காலை சூரிய பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி

வள்ளி நாயகி, தெய்வ நாயகி உடனுறை சண்முகர் சன்னதி இம்மண்டபத்தின்  கிழக்கில் உள்ளது  அருமையான மூர்த்தம் மயில் மேக் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி தேவியருடன் தரிசனம் தருகின்றார் ஆறுமுகப்பெருமான். இவரை
ஆறிரு தடந்தோள் வாழ்க!
     அறுமுகம் வாழ்க!  வெற்பை
கூறு செய் தணிவேல் வாழ்க!
      குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆணை
தன்  அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க
     சீரடியார் எல்லாம்.
என்று வாழ்த்தி வணங்குகிறோம். சண்முகர் சன்னதியிலும் கோஷ்ட தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வாகனமாக , ஐராவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது தெற்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபம். இம்மண்டபம் தேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டதால்  கருமாரி அம்மன் மற்றும் அவரின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகர் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றனஇம்மண்டபத்தில்தான் உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம்  மற்றும் பூசனைகள் நடைபெறுகின்றதுஇம்மண்டபத்தின் பக்தர்கள் ஐயனை தரிசிக்கும் பகுதியில் மேற்பகுதியில் ஆறு படை வீடுகளின் சுதை சிற்பங்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளனதிருப்பரங்குன்றுதிருக்கல்யாண முருகன், திருச்செந்தூர்ருத்ர முருகன்,  , திருவாவினன்குடிஞான முருகன், சுவாமி மலைஉபதேச முருகன், திருத்தணி- சினம் தனிந்த முருகன், பழமுதிர் சோலைஅருள் பாலிக்கும் முருகன் மற்றும் வள்ளி நாயகி  யானையை கண்டு விருத்தரை அனைத்துக் கொள்ளும் வள்ளி மலை தினைப்புனம் காக்கும் சிற்பம்  என்று சுதை சிற்பங்கள் உயிரோட்டமுடன் அழகாக அமைந்துள்ளன.

இரண்டாம் திருநாள் மாலை சந்திர  பிரபையில்
சிவசுப்பிரமணிய சுவாமி



இனி மூலவரை சென்று தரிசனம் செய்வதற்கு முன் இரண்டாம் திருநாள் அலங்காரம் என்ன என்று காணலாமா? காலையில்  அருள் முருகன் சூரியப் பிரபை வாகனத்திலும் இரவி சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி வலன் வந்து சாம்பவி தீக்ஷை அளித்து அருள் பாலிக்கின்றார். இந்த காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.














Tuesday, February 19, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -2

முதலாம் திருநாள் காலை கொடியேற்றம்


சிவசுப்பிரமணிய சுவாமி 


"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்றால் அவ்வைபாட்டி ஏனென்றால் திருக்கோவில்கள்  முழு  கிராமத்திற்கும் ஒரு பாதுகாப்பு அரணாக  விளங்கின உயரமான கோபுரத்தில் உள்ள கலசங்கள் மின்னலில் இருந்து கிராமத்தை காப்பாற்றுகின்றது.  அதில் இட்டு வைத்திருக்கும் வரகு முதலிய தானியங்கள் பஞ்ச காலத்தில் விதை தானியமாகவும் பயன்பட்டன. அதுவுமல்லாமல் கோவில் என்பது பலருக்கும்   வேலை வாய்ப்பை அளிக்கும் நிலையங்களாவே அன்றும் விளங்கின, இன்றும் விளங்குகின்றன.



வள்ளி நாயகி  தேவ சேனா நாயகி 
உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி 


அது போலவே திருக்கோவில்கள் கல்வி மையமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், அரங்கேற்றம் நடைபெறும்  இடமாகவும் அறக்கொடைகளால் வறியவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கும் ஒரு இடமாகவும் விளங்கி வருகின்றன. ஆகஏ இன்றும் நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த் இடத்தில் ஓர் ஆலயத்தை நிறுவி நிர்வகித்து வருகின்றோம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்றபடி, இத்திருக்கோவிலின் திருவிழாக்கள் அந்த காலத்தில் விவசாயம் இல்லாத காலத்தில் கிராமத்தினர் அனைவரும் ஒன்றாகக் கூடி இரை வழிபாடு செய்யவும் உதவின.

 கொடி

தர்மமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் பாடப்பட்ட சென்னை மாநகரின் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பல பழமையான ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் சில கூத்தாடும் பிள்ளையார், சித்தி புத்தி விநாயகர் என்று முழுமுதற் கடவுள் கணேசருக்கு பல ஆலயங்கள் உள்ளன, சிவபெருமான் இந்திரனுக்கு அருளிய  சொர்ணாம்பாள் உடனுறை காரணீஸ்வரப் பெருமானாகவும், திருமால் அலர்மேல் மங்கை உடனுறை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாளாகவும், அன்னை கடும்பாடி சின்னம்மனாவும், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான்  சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான் வள்ளி நாயகி தெய்வநாயகியுடன்  சிவசுப்பிரமணிய சுவாமியாக ஞான வேல் கரங்கொண்டு ஒங்கார ஸ்வரூபமாய்  எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஐந்து கோவிகளில் நடு நாயகமாக சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.  இதல்லாமல் எண்ணற்ற சிறிய கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. நாம் காணப்போகும் பெருந்திருவிழா சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மாத பெருந்திருவிழாவாகும்.











கொடி மரத்திற்கு அபிஷேகம் 


வாத்தியார் சுப்பிரமணி தெருவில் செங்குந்த கோட்டம் என்னும் இவ்வலயம் அமைந்துள்ளது. சென்னை நகருக்கேற்றார்ப் போல ஒரு உட்பிரகாரத்துடன் கூடிய ஆலயம்தான் இது. கோட்டம் என்றால் கோயில். அதிலும் குன்று தோறாடும் குமரன் மகிழந்து  உரையும் திருக்கோயில்கள் கோட்டம் எனப்படுகின்றன. கந்த புராணத்தை தமிழில் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அடி எடுத்துக் கொடுத்தவன்  காஞ்சி குமர கோட்ட குமரன், அது போல வள்ளலார் சுவாமிகளை ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் என்ற பாட வைத்தவன் வடசென்னை  கந்த கோட்ட முருகன். அது போல செங்குந்த மரபினரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்து வரப்படுகின்ற இக்கோவில் செங்குந்தக் கோட்டம் என்னும் பெயர் பெற்றது.  செங்குந்த முதலியார் என்னும் இவர்கள் சைவத்திற்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர். காரணீவரர் ஆலயமும் செங்குந்த இனத்தினரின் ஆலயம்தான். இப்பதிவில் முதல்நாள் காலை கொடியேற்றத்தின் சில காட்சிகளை கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.


வள்ளி நாயகி                                                                                                                                   தேவ சேனா நாயகி 

வீரபாகு

முதலாம் திருநாள் அன்று காலை நன் முகூர்த்த காலத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி நாயகி, தேவ சேனா நாயகி, வீரபாகு தேவர் மற்றும் சண்டிகேஸ்வரர். அஸ்திர தேவர்  கொடி மரத்திற்கருகில் எழுந்திருளி கொடியேற்றம் கண்டருளுகின்றனர்.  விக்னேஸ்வர பூஜை முடித்து கொடியேற்றி சகல தேவர்களையும் கொடி மரத்தின் அருகில் வந்து யதாஸ்தானம் கொண்டருளி பெருவிழா முடியும் வரை இருக்குமாறு வேண்திக்கொள்ள அனைவரும்  யதாஸ்தானம் கொள்வதாக ஐதீகம். பின் கொடி மரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆகி, பின்னர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி நடைபெற்று பின் கோவிலுக்கு வெளியே எழுந்தருளி அஸ்தமான கிரி விமானத்தில் கோவிலின் உள்ளே வர முடியாதவர்களுக்கும் காட்சி அளிக்கும் வகையில்  மாட விதி உலா வந்து அருளுகின்றனர் பஞ்ச முர்த்திகள்.