நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -2
காலை வெள்ளித் தொட்டி உற்சவம்
தெய்வ நாயகி
வள்ளி நாயகி
முருகருக்கு பன்னிரண்டு திருக்கரங்கள் , இவை நமது தமிழின் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள், பதினெட்டு திருக்கண்கள் அவை பதினெட்டு மெய் எழுத்துக்கள், ஆறு திரு முகங்கள் அவை வ்ல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஆறு எழுத்துக்கள். முருகனது வேல் நமது ஃ என்னும் ஆயுத எழுத்து.
முருகு என்னும் முருகனது நாமமே "மு" என்னும் மெல்லின எழுத்து, "ரு" என்னும் இடையின எழுத்து, மற்றும் "கு" என்னும் வல்லின எழுத்தால் உருவானது தானே. ஆகவேதான் நாம் அவரை தமிழ்க் கடவுள் என்று போற்றுகின்றோம்.
காளீங்க நர்த்தனராக சிவ சுப்பிரமணிய சுவாமி
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு காளியன் மேல் நடனமாடிக்கொண்டே திருமுருகன் தரும் அற்புத காட்சியை தாங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். மேல் திருக்கரங்களில் விஷ்ணு அம்சமான சங்கு சக்கரங்களையும் புல்லாங்குழலில் உள்ள பதக்கங்களையும் காண படங்களை பெரிதாக்கிக் காணுங்கள் அன்பர்களே.
மன இருள், அறியாமை, துன்பம், ஆகியவற்றை நீக்குபவர் முருகன். பரமஞான மூர்த்தியான தந்தைக்கே உபதேசம் செய்த ஞான பண்டித சுவாமி. சக்தி ஆயுதம் ஞான வேல்
நாக வாகன சேவை
கோடிக்கோடி மன்மத லாவண்யம், ஞானத்தை மற்றவர்க்கு வழங்கும் குருநாதர்தான் சுப்பிரமணிய சுவாமி. அஞ்ஞான இருளுக்கு அப்பால் இருக்கின்ற ஞானஜோதிதான் சுப்பிரமணிய சுவாமி.
4 comments:
அருமையான படங்கள்...
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
சங்கு சக்கரத்தோடு கூடிய முருகனை தரிசிக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ஐயா
மருமகனுக்கு மாமன் ரூபம். மிக்க நன்றி LOGAN ஐயா.
Post a Comment