திருமொழித்திருநாள் என்றழைக்கப்படும் பகல்பத்தின் ஆறாம் நாள் அரங்கநகரப்பன் பாண்டியன் கொண்டை, புஜ கீர்த்தி, வைர அபய ஹஸ்தம், இரத்தினக்கிளி, மார்பில் லக்ஷ்மி பதக்கம், காசு மாலை, அர்த்தசந்திரன் அணிந்து எழிலாக சேவை சாதிக்கும் அற்புத தரிசனம்.
Wednesday, December 23, 2020
அத்யயனோற்சவம் - 7
Tuesday, December 22, 2020
அத்யயனோற்சவம் - 6
தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருபள்ளியெழுச்சி.
திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்
மதுர கவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் இன்று சேவிக்கப்படுகின்றன.
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அவரது முதல் பாசுரம் அமலனாதிபிரான் என்று ’அ’காரத்தில் துவங்குகின்றது இரண்டாவது பாசுரம் உந்தி ’உ’காரத்தில் துவங்குகின்றது. மூன்றாவது பாசுரம் மந்தி ’ம’காரத்தில் துவங்குகின்றது . அ+உ+ம = ஓம் ஆகவே திருப்பாணாழ்வாரின் பாசுரம் பிரணவத்தின் விளக்கம்.
பெருமாளைப் பாடாமல் தந்து ஆச்சாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடியவர் மதுரகவியாழ்வார். வேதங்களையும், சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்து செவிக்கினிய செஞ்சொற்கவி பாடுமாற்றல் பெற்று மதுரகவி என்று பெயர் பெற்றார். இவர் வட நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது தென் திசையில் ஒரு பேரொளி தோன்றியதைக் கண்டு அங்கே வந்து நம்மாழ்வாரை சேவித்து அவரது žடரானார். அவரது புகழை பரப்பினார். அவர் எழுதிய பாசுரம் கண்ணிநுண்சிறுத்தாம்பு.
அத்யயனோற்சவம் - 5
பகல் பத்து - நான்காம் நாள்
இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்
திருவரங்கத்தில் இன்று
அரையர் அபிநயம் & வியாக்கியானம்-
“கண்ணனென்னும் கருந்தெய்வம்” நாச்சியார் திருமொழி பாசுரம்
“இருளிரிய சுடர்மணி” பெருமாள் திருமொழி பாசுரம்
இன்றைய சிறப்பு – 2 அரையர் சேவைகள்
இரண்டாம் அரையர் சேவையில் இன்றைய நிகழ்வு: கம்சவதம்
Monday, December 21, 2020
அத்யயனோற்சவம் - 4
பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபய ஹஸ்தம், நெற்றியில் கலிங்க தோளா, முத்துச் சரம், அண்ட பேரண்ட பட்சி பதக்கம், இரத்தின பாதங்களுடன் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
ஸ்ரீநிவாசர் ஏணிக் கண்ணன் கோலம்
பூமாதேவியாரே ஆண்டாளாக அவதரித்து சரணாகதி தத்துவத்தை நமக்கு போதித்தார்.
திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸுதைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?
Sunday, December 20, 2020
அத்யயனோற்சவம் - 3
பகல் பத்து - இரண்டாம் நாள்
ஸ்ரீநம்பெருமாள் பகல்பத்தின் இரண்டாம் நாள் முத்து சாய் கொண்டை, வைர அபய ஹஸ்தம், தங்கக்கிளி, பவள மாலை, பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் சேவை சாதிக்கும் அற்புத காட்சி

இன்றைக்கு சேவிக்கப்படும் பெரியாழ்வாரின் 240 பாசுரங்களில் கண்ணனுக்கு முலை கொடுக்க அஞ்சுதல், கன்றின் பின் போக்கியதைக் குறித்து வருந்துதல், கண்ணன் காலிகள் பின் வருவதைக் க்ண்டு மகிழ்தல், கோவர்த்தன மலையை குடையாக எடுத்து ஆயர்கள், ஆநிரை காத்ததை சிறப்பித்தல், கண்ணின் வேய்ங்குழல் ஒசை சிறப்பை பாடுதல், கிருஷ்ணாவதார இராமாவதார சிறப்புகள், சிறிய திருவடி மாருதி அசோக வனத்தில் சீதாப் பிராட்டியாரிடம் கணையாழி அளித்தல் முதலியவற்றைப் பாடி, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், தேவப்ரயாகை, திருவரங்கம்,திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களின் சிறப்பையும் பாடுகின்றார்.
வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரையயோத்தி
இடமுதைவதரியிடவகையுடைய
எம்புருடோத்தமனிருக்கை என்று வட நாட்டு திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார் பெரியாழ்வார்.
மானிட சாதியில் தோன்றிற்று ஓர்மானிட சாதியை
மானிடசாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடை மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்மன்னை நரகம்புகாள். என்று மானிடர்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியாழ்வாரின் திருமொழிகளை இந்த பகல் பத்தின் இரண்டாம் நாள் சேவித்து நன்மையடைவோமாக.
அத்யயனோற்சவம் - 2
பகல் பத்து - முதல் நாள்
நம்பெருமாள் பகல் பத்து 10 நாட்களும் காலை புறப்பாட்டின்போது மூலஸ்தானத்திலிருந்து வெளியே வரும்போது ஒரு சிங்கத்தைப்போல் பாய்ந்து கொண்டு வெளியில் வருவார், இதற்கு சிம்ம கதி எனப்பெயர். அதேபோல் இரவு மூலஸ்தானத்திற்கு செல்லும்போது லேசாக ஒரு பாம்பைப் போல் வளைந்து நெளிந்து உள்ளே செல்வார் அதற்கு சர்ப்ப கதி எனப்பெயர்.
Saturday, December 19, 2020
அத்யயனோற்சவம் - 1
மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அந்த ஆதி மூலனின் முன் சேவை செய்யும் உற்சவமே அத்யயனோற்சவம்.






































