பகல் பத்து - எட்டாம் நாள்
இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்அத்யயன உற்சவத்தில் பகல் பத்தின் எட்டாம் நாள் நம்பெருமாள் சாய் சவுரி, கொண்டை முத்துச் சரம், அரி நெல்லிக்காய் மாலை, வைர அபய ஹஸ்தம், பவள மாலை, திருமார்பில் பெருமாள் தாயார் பதக்கம், வைர நெற்றிப் பட்டை, கீர்த்தி, மஹரி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அர்ஜுன மண்டபம் எழுந்தருளி சேவை சாதித்தார்.
திருமொழித் திருநாள் எட்டாம் நாள் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் ஐந்து மற்றும் ஆறாம் பத்துகள் சேவிக்கப்படுகின்றன.
பரகாலர் ஆலிநாடன், அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன் என்ற விருதுகள் கொண்ட பாயிரம் பாடிகொண்டார்.
திருவரங்கன் ஆணைப்படி அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம், விமானம், பிரகாரம் முதலிய பணிகளை செய்தருளினார். திருமதில் கட்டும்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை கட்டிவந்தவிடம் நேர்பட அதனையொதுக்கி கட்டிவித்தார்.
பகல் பத்தின் எட்டாம் நாள் திருபுள்ளபூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகர், திருநறையூர் ஆகிய திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.
திருவரங்கத்து ஒரு பாசுரம் அபிநயம் – *பண்டை நான்மறையும்*
இன்று இரண்டாம் அரையர் சேவை: அம்ருதமதனம் (கூர்ம அவதாரம்)
No comments:
Post a Comment