Tuesday, March 10, 2020

மாசிக் கடலாடல்

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.



சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் 

மாசி மகத்தன்று கிராதக வேடர் கோலம் 


மாசி மாதத்தை   மாதங்களின் சிகரம் என்றும் கும்பமாதம் என்றும் கூறுவர்.  மாசி மாதத்தில் மக நட்சத்திரத்துடன் பௌர்ணமியுடன் கூடி வரும் நாளே மாசி மகம்,  மகம் நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நட்சத்திரம்.  மாசி மகத்தன்று நீர் நிலைகளுக்கு  பெருமான் எழுந்தருளி தீர்த்தம் வழங்கி அருள் பாலிப்பார். சென்னை கடற்கரைக்கு எழுந்தருளிய எம்பெருமான்களின் தரிசனம்  கண்டு களியுங்கள்.


ஜாம்பஜார் பிரசன்ன விநாயகர்  சித்தி புத்தியருடன்

**********


புளியம்தோப்பு சுப்பிரமணியர்

***********



கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி

வள்ளி தெய்வானை

*********

திருமயிலை காரணீஸ்வரர்

கண்ணாடி சேவை

அஸ்திர தேவர் கடலாடல்

*********


********



**********

திருவேட்டீஸ்வரர் வெள்ளி ரிஷப சேவை

***************


ரேணுகா பரமேஸ்வரி அம்மன் 

அம்மன் பின்னழகு

****************


ஸ்ரீநிவாசர் -இராயப்பேட்டை

கருட சேவை


கடலாட்டுக் கண்ட சுதர்சனாழ்வார்

***************


****************



வீட்டில் ஆராதனை செய்யும் மூர்த்திகளுக்கு ஆலயத்தில் செய்வது போலவே அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு கொண்டு வந்திருந்தார்  ஓர்  அன்பர். 

*************



திருமயிலை வெள்ளீஸ்வரர்





கடற்கரை தரிசனம் தொடரும் . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

மாசிக் கடலாடல் தரிசனம் மிக அருமை.
நேரில் கண்ட மன நிறைவு.
அம்மனின் பின் அழகு தரிசனம் மிக அருமை.
வீட்டில் வணங்கும் தெய்வங்களுக்கு கோவிலில் உற்சவர்களுக்கு செய்யும் அலங்காரம் செய்து கொண்டு வந்தது வியப்பு!
அவர் பக்திக்கு வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி.

S.Muruganandam said...

மிகவும் அருமையான தரிசனம் கிட்டியது இவ்வருடம்.

//வீட்டில் வணங்கும் தெய்வங்களுக்கு கோவிலில் உற்சவர்களுக்கு செய்யும் அலங்காரம் செய்து கொண்டு வந்தது வியப்பு!அவர் பக்திக்கு வாழ்த்துக்கள். //

அவர் பக்திக்கு தலை வணங்க வேண்டும்.