Tuesday, April 3, 2018

பங்குனிப் பெருவிழா - 2

பங்குனி உத்திர கல்யாண விரத மகிமை:

மங்களங்களை நல்கும் சங்கரருக்கு மிகவும் பிரீத்தியானது இந்த கல்யாண விரதம் எனவே இவ்விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு  இறைவன் எல்லா வரங்களையும் வழங்குகிறார். அவர்கள் இம்மையில் எல்லா சுகங்களையும் பெறுவதுடன் முக்தியையும் அடைவர். மஹா லக்ஷ்மி இவ்விரதமிருந்துதான் விஷ்ணுவின் மார்பில் வீற்றிருக்கும் பேறு    பெற்றார். பிரம்மா சரஸ்வதியையும், இந்திரன் இந்திராணியையும், சந்திரன் 27 நட்சத்திரங்களையும் மணந்தது இவ்விரதத்தை அனுஷ்டித்துதான். அகஸ்திய முனிவர் லோபா முத்ராவை மணந்ததும் இவ்விரத மகிமையால்தான். மஹா விஷ்ணுவின் இரு மகள்களாகிய அமிர்த வல்லியும்,  சௌந்த்ர்ய வல்லியும், ஆறு முகங்கள் கொண்ட தேவ சேனாபதி முருகரை  வள்ளி, தேவசேனாவாக மணந்ததும் இவ்விரத பலனால்தான். நந்தி தேவரை வேதாங்க முனிவரின் புத்ரி சுகேசி மணந்ததும், பூரணா புஷ்கலா ஆகிய சத்யபூரண முனிவரின் புத்ரிகள் மஹா சாஸ்தாவை மணந்ததும் இவ்விரத மகிமையால். இரதிக்காக மன்மதனை  சிவபெருமான் எழுப்பித் தந்தது இந்நாளில் தான்இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் இளைஞர்களுக்கு நல்ல பெண் கிடைப்பாள், கன்னி பெண்களுக்கு  நல்ல வரன் அமையும், தம்பதிகளுக்கு  சந்தான பாக்கியம் கிடைக்கும் என்று ஸ்கந்த புராணத்திலே கூறப்பட்டுள்ளது.

மலிவிழா வீதி மடநல்லார் மாம்யிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தர நாள்
ஒலிவிழாக்காணாதே போதியோ  பூம்பாவாய்    =       என்று திருஞானாம்பந்தர் அன்று பாடியபடி இன்றும் திருமயிலையில் பங்குனி உத்திர நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.      

திருமயிலையில் முதல் நாள் கொடியேற்றத்தின் போது பஞ்ச மூர்த்திகள் கொடி மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே. 


 விநாயகப்பெருமான்



கபாலீஸ்வரர்





பவளக்கால் விமானம் 


கற்பகவல்லி அம்பாள் 






சிங்கார வேலவர் 

 சண்டிகேஸ்வரர் 
இடபக் கொடி 


 அஸ்திர தேவர் 


                                                                                                     பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

2 comments:

தனிமரம் said...

அருமையான பகிர்வு ஐயா!

S.Muruganandam said...

நன்றி ஐயா.