ஐந்தாம் திருநாள் இரவு
மகா ரிஷப வாகன சேவை
மாபெரும் திருக்காட்சி (விசேஷ உற்சவம்)
சிவாலயங்களில் ஐந்தாம் திருநாள் இரவு பொதுவாக சுவாமி தன்னுடையவாகனமாக வெள்ளை இடப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இக்கோவிலிலும் அவ்வாறே சுவாமி மட்டுமல்ல பஞ்ச மூர்த்திகளும் இடப வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர். இவ்வற்புத காட்சிகளைக் கண்டு களியுங்கள். பல ஆலயங்களில் இச்சேவையை வெள்விடைக் காட்சி என்று அழைக்கின்றனர்
ருத்ராட்சத்திலான சிவலிங்கம்
சிவபெருமான் திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் தன்னைத்தானே வழிபட்டார் என்பது ஐதீகம், ஐந்தாம் திருநாள் இரவு பிரதான சிவாச்சாரியார் தன்னை சிவபெருமானாகவே பாவித்து பூசை செய்தார் அதற்காக தனித்தொப்பி அணிந்து இந்த ருத்ராட்ச லிங்கத்திற்கு முதலில் பூசை செய்து பின்னர் இந்த ருத்ராட்ச லிங்கத்தை தலையில் அணிந்து பூசைகளை செய்தார்.
பக்த கணபதி
இவ்வருடம் பஞ்ச மூர்த்திகளுக்கும் தலை மாலை மற்றும் அமர்ந்த கோல அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது ஒரு தனி சிறப்பு.
ருத்ராட்ச லிங்கத்திற்கு பூசை
ருத்ராட்ச லிங்கத்துடன் பாரத்வாஜேஸ்வரரருக்கு பூஜை
சிறப்பு தீபவழிபாடு
சுமார் 108 தீபங்களினால் சுவாமிக்கு ஆராதனை நடைபெற்றது .
திருமுறைகள் ஓதுகின்றார் ஓதுவார் மூர்த்திகள்
பஞ்ச மூக தீப வழிபாடு
பாகம் பிரியா அம்பாள்
சுவாமி கண்ணாடி சேவை
சுவாமி புறப்பாடு
சொர்ணாம்பாள் அலங்காரம்
அம்மையின் பின்னழகு
மயில் போன்று சடையலங்காரம்
அம்பாள் கண்ணாடி சேவை
ரிஷப வாகனத்தில் சொர்ணாம்பாள்
சுப்பிரமணீயர்
ரிஷப வாகனத்தில் சுப்பிரமணியர்
சண்டிகேஸ்வரர்
ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்
மலர் அலங்காரத்துடன் கூடிய பஞ்சமூர்த்த்களின் ரிஷப வாகனசேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
அற்புதத் திருக்காட்சிகள் தொடரும் ......
No comments:
Post a Comment