உதய்பூர்
இத்தொடரின் மற்ற பதிவுகள்
பருவக்காற்று அரண்மனை
அரண்மனையின் ஒவியம்
நவதுவாரகைகளில் ஸ்ரீநாத்ஜீ துவாரகை இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரையின் போது குஜராத் பகுதியின்
துவாரகைகளை தரிசனம் செய்த பிறகு
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே என்று நம்மாழ்வார் அறிவுறுத்தியபடி ஸ்ரீநாத்ஜீயை சேவித்து அவன் நாமம் பாட நாத்துவாராவிற்காக புறப்பட்டோம். வழியில் இராஜஸ்தானத்தின் ஒரு பெரிய
நகரான உதய்பூர் வருவதால்
அந்நகரில் சிறிது நேரம் செலவிடலாம் என்று
முடிவு செய்து, உதயப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன
என்று வண்டி ஓட்டுனரிடம் விசாரித்தோம், அவரும் எனக்குத் தெரிந்த
ஒரு வழிகாட்டி உள்ளார் அவரை அழைக்கின்றேன் அவர் உதய்ப்பூரை சுற்றிப் பார்ப்பதற்கு உதவுவார்
அவருடைய கட்டணம் ரூ.500/- ஆகும் என்றார். சரி அவரை அழையுங்கள்
என்று கூறினோம். அகமதாபாத்திலிருந்து உதய்ப்பூர் 250 கி.மீ தூரம், எனவே அடியோங்கள் உதய்ப்பூரை நெருங்கும் போது சுமார் 10:30 மணி ஆகிவிட்டது. வழிகாட்டி எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.
இராஜஸ்தான் மாநிலம் வீரத்திற்கும், கற்புக்கரசிகளுக்கும்,
கோட்டை கொத்தளங்களுக்கும், பிரம்மாண்டமான கலை அம்சம் நிறைந்த அரண்மணைகளுக்கும், அழகிய ஏரிகளுக்கும்
பெயர் போனது. இம்மாநிலம் இரண்டு பகுதிகளாக அதாவது பாலைவனப்பகுதி மார்வார் என்றும் ஆரவல்லி மலை மற்றும்
அதனுடன் இனைந்த பகுதி மேவார் என்றும் சரித்திர காலத்தில் அறியப்பட்டிருந்தது.
பளிங்கு தூண்கள்
அடியோங்கள் யாத்திரை சென்ற பகுதி மேவார்
ஆகும். 1559ல் மஹா ராணா உதய் சிங் அவர்களால்
உருவாக்கப்பட்ட இந்த உதய்ப்பூர் நகரிலும்,
பல அரண்மனைகள், மற்றும் ஃபதே சாகர் ஏரி, பிசோலா
ஏரி, ஸ்வருப் சாகர் ஏரி, ரங்சாகர் ஏரி, மற்றும் தூர் சாகர் என்னும் ஐந்து ஏரிகள் உள்ளன. எனவே இந்நகரம் கிழக்கத்திய
வெனிஸ் நகரம் என்றும் ஏரிகளின் நகரம் என்றும்
அழைக்கப்படுகின்றது. ஒருகாலத்தில் மேவார் பகுதியின் தலைநகராக
விளங்கியுள்ளது இந்நகரம்
.
.
அடியோங்கள் விஸ்தாரமாக உதயப்பூரை சுற்றி பார்க்க சமயம் இருக்கவில்லை, மலை
மேல் உள்ள ஒரு அரண்மணைக்கு மட்டும் சென்றோம். பறவைப்பார்வையில் உதயப்பூர் நகரை இரசித்தோம். ஃபதே சாகர்
ஏரி (Fateh Sagar Lake) இந்திய வரை படம் போல காட்சியளித்ததை கண்டு களித்தோம். பருவக்காற்று அரண்மனை
(Monsoon Palace) என்னும்
அவ்வரண்மணையில் அக்காலத்தில் மழைக் காலத்தில் பெய்யும் தண்ணீரை சேகரித்து, சேமித்து
வைத்து வருடம் முழுவதும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை பார்த்தபோது எவ்வளவு தொழில்நுட்ப அறிவு அக்காலத்திலேயே இருந்தது என்று வியக்காமல்
இருக்க முடியவில்லை. அவ்வரண்மனையை சஜ்ஜன் சிங் மஹாராஜா தனது
21 இராணிகளுக்காக கட்டிய உல்லாச மாளிகை என்றார் வழிகாட்டி. பளிங்குக்கல்
கொண்டு இழைத்திருந்தனர். அரண்மணையை முழுதுமாக சுற்றிப்பார்க்க
சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
பின்னர் வழிகாட்டி கலைப் பொருட்களை விற்கும் கடைக்கு அழைத்துச்
சென்றார். நினைவுப் பரிசாக சிறு பொருட்களை வாங்கினோம்.
பின்னர் வண்டி ஓட்டுனர். நாம் வாங்கும்
பொருட்களின் மதிப்பிற்கேற்ப வழிகாட்டிகளுக்கு கடைக்காரர் சன்மானம் வழங்குவார் என்று கூறினார். இதற்குள் மதியம் ஆகிவிட்டதால் ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினோம். நடராஜ் என்றொரு குஜராத்தி
உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அருமையான குஜராத்தி உணவை சுவைத்தோம். குஜராத்தில்
கிச்சடி எனப்ப்டும் பருப்பு சாதம் மற்றும் கடி எனப்படும் மோர் குழம்பு அனைவரும் விரும்பி
சுவைக்கும் ஒரு உணவு வகை அது இவ்வுணவகத்தில் அருமையாக கிட்டியது சுவைத்து மகிழ்ந்தோம்.
கல்லாவில் ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஒரு சிலையும்
இருந்தது. கடைக்காரரிடம் நடராஜர் ஆலயம்
சென்றிருக்கிறீர்களா? என்று வினவினோம். அவர் இல்லை, எனது தாத்தா மதராஸில் நடராஜர்
ஆலயம் சென்று வந்த பின் சிறு கடையாக ஆரம்பித்து இப்போது இவ்வளவு
பெரிதாக வளர்ந்திருக்கின்றோம். சமயம் கிடைக்கும் போது செல்கிறேன்
என்றார். சிதம்பரம் என்ற ஊரில்தான் நடராஜர் அருள் பாலிக்கின்றார்.
சமயம் கிடைக்கும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள் என்று கூறிவிட்டு
உதயப்பூரை விடுத்து அடுத்த துவாரகையான ஸ்ரீநாத்ஜீ துவாரகைக்காக
புறப்பட்டோம்.
வண்டி ஓட்டுனர் சுமார்
இரண்டு மணி நேரத்திற்கும்
மேல் ஆகுமென்றார். வழியில் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ள ஏக்லிங்ஜீ (Eklingji) என்ற ஊரில்
உள்ள சிவாலயத்தை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். ஆலயம்
மூடியிருந்ததால் ஆலயத்தின்
இரு புறமும் அமைந்துள்ள அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளை
மட்டும் தரிசித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.
நாத்துவாராவை (Nathdwara) அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டது. முதலில் தங்குவதற்கான அறைகளை பெற்று கொண்டு காலையிலிருந்து பயணம் செய்த களைப்புத்தீர சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு, சிரமபரிகாரம் முடித்து பின்னர் ஸ்ரீநாதரை சேவிக்கச் சென்றோம். இத்துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . .
ஏக்லிங்ஜீ சிலைகள்
நாத்துவாராவில் அருள் பாலிக்கும் ஸ்ரீநாத்ஜீ
நாத்துவாராவை (Nathdwara) அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டது. முதலில் தங்குவதற்கான அறைகளை பெற்று கொண்டு காலையிலிருந்து பயணம் செய்த களைப்புத்தீர சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு, சிரமபரிகாரம் முடித்து பின்னர் ஸ்ரீநாதரை சேவிக்கச் சென்றோம். இத்துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . .
2 comments:
நாத்துவார் இரு முறை தரிசித்திருக்கிறேன். ஏக்லிங்க் ஜி - நாளில் மூன்றே முறை திறப்பார்கள் - அதுவும் சில நிமிடங்களுக்கு மட்டும்..... ராஜாவின் கோவில் என்பதால் தொடர்ந்து தரிசனம் கிடையாது.
உதைப்பூர் - அழகான ஊர். சஜன்கர் கோட்டை தவிர பார்க்க இன்னும் நிறைய இடங்கள் உண்டு.
தொடர்கிறேன்.
தகவல்களுக்கு மிக்க நன்றி வெங்கட் ஐயா. உதய்பூருக்கு அதிக நேரம் தரவில்லை என்பதால் கிடைத்த சமயத்தில் ஒரு அரண்மனையை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பி விட்டோம் ஐயா. இன்னொரு தடவை சென்றால் உதய்ப்பூருக்கு மட்டுமே இரண்டு நாட்கள் ஒதுக்க வேண்டும்.
தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி ஐயா.
Post a Comment