Sunday, September 24, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 5

நான்காவது  ஆவரணம்


கற்காம்பாள் மஹா கௌரி அலங்காரம்


வடிவுடை அம்மன் வள்ளலாருக்கு உணவிட்ட லீலை







திருமயிலை ஐதீகம் 

ஆடும் மயிலாய் உருவெடுத்து அர்சித்த நாயகி




********



4 வது ஆவரணம்

ராகம்:      காம்போதி                                                                            தாளம்: அட

பல்லவி

கமலாம்பிகாயை  கனகாம் ஸுகாயை

கர்பூர வீடிகாயை நமஸ்தே நமஸ்தே     (கமலாம்பிகாயை)



அனுபல்லவி



கமலா காந்தாநுஜாயை காமேஸ்வர்யை அஜாயை
ஹிமகிரி தநுஜாயை ஹ்ரீம்கார பூஜ்யாயை


மத்யமம்
கமலாநகர விஹாரிண்யை கலஸமுஹ சம்ஹாரிண்யா
கமநீய ரத்ன ஹாரிண்யை  கலி கல்மஷ பரிஹாரிண்யை (கமலாம்பிகாயை)


சரணம்

ஸகல ஸௌபாக்யதாயகாம்போஜ சரணாயை
சம்ஷோபிண்யாதி ஸக்தி யுத சதுர் தாவரணாயை
ப்ரகட சதுர்தஸ புவந பரணாயை
ப்ரபல குருகுஹ ஸம்ப்ரதாயாந்த: கரணாயை
அகளங்க ரூப வர்ணாயை அபர்ணாயை ஸுபர்ணாயை
ஸூக ரத்ருத  சாப பாணாயை  ஸோப நகர மநு கோணாயை
மத்யம்
ஸகுங்குமாதி லேப நாயை சரா சராதி கல்ப நாயை
சிகுர விஜித நீல கநாயை  சிதா நந்த பூர்ண கநாயை (கமலாம்பிகாயை)


பொன் போல் மிளிரும் மேலாடையை அணிந்தவளும்  பச்சை கர்ப்பூர   மணம் கமழும்  தாம்பூலமணிந்து சிவந்த அதரங்களையுடைவளுமான கமாலாம்பிகைக்கு மீண்டும் மீண்டும் எனது  நமஸ்காரம்.

திருமாலின் சோதரியும், காமேஸ்வரரின் பட்ட மகிஷியும், பிறப்பற்றவளும். மலையரசன் இமவானின் பொற் பாவையும், ஹ்ரீம் என்ற மஹா மந்திரத்தால்  உபாசிக்கப்படுபவளும்,  கமலாநகரம் எனப்படும் திருவாரூரில் திகழ்பவளும், கொடியவர்களான அசுரர்களை வென்றொழித்தவளும், எழிலான் கான ரத்னமாலைகளை அணிந்து ஒளிவீசுபவளும், கலி காலத்தில் உண்டாகும் தோஷங்களுக்கு பரிஹாரமாக விளங்குபவளுமான கமலாம்பிகையை நமஸ்கரிக்கிறேன்.

சகல சௌபாக்கியங்களை தரவல்ல திருவடிகளை உடையவளும், சம்ஷோபிணீ, சர்வ வித்ராவிணி  முதலிய  பதினான்கு சக்திகளோடு  கூடிய நாலாவது ஆவரணம் உடையவளும், பதிநான்கு லோகங்களையும் தன்னுளடக்கியவளும், புகழ் மிக்க குருகுஹனின் ஸம்பிரதாயங்களுக்கு ஆதாரமாக உள்ளவளும், மாசற்ற நிர்மல  மேனியழகையுடையவளும், சிவனை குறித்து தவம் செய்யும் போது காய்ந்த இலைகளைக்கூட உண்ணாமல் விரதம் காத்து அதனால் அபர்ணா என்று பெயர் பெற்றவளும் ஸுபர்ணா என்ற தேவதையாக இருப்பவளும், அழகிய திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டவளும், சோபை மேலிடும் வகையாக மனு கோணம் போன்ற பதிநான்கு கோண சக்கரத்திற்கு நாயகியும்  குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி  முதலியவற்றின் மணங்கமழும் குழம்பை திருமேனியில் பூசியுள்ளவளும்,   அசையும் அசையாப் பொருள்களை படைத்தவளும், கருநீல முகிலை பழிக்கும்  கூந்தலை உடையவளும், சிதாநந்த பரிபூரண வடிவமாக  விளங்குபவளுமான கமலாம்பிகைக்கு வணக்கம்; வந்தனம்.


ந்நான்காம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வ சௌபாக்ய தாயக சக்ரம் ஆகும். இச்சக்ரம் பதினான்கு முக்கோணங்களாக  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுரவாசினி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி சம்பிரதாய யோகினி. அவஸ்தை ஈச்வர விசாரம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சம்ஷோபிணி, சர்வ வித்ராவிணி  முதலான பதினான்மர் ஆவர். 


 முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு


                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

No comments: