ஏழாவது ஆவரணம்
கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம்
தாமரை மலர்ச் சடை
சென்ற வருட அலங்காரம்
ஊஞ்சல் மண்டபத்தில் நவதானியக் கோலம்
மஹா மண்டபத்தில் திருவிளையாடற் புராண வரலாறு
***************
ஏழாவது ஆவரணம்
ராகம்: சஹானா தாளம்:திரிபுட
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகாயாம்
பக்திம் கரோமி
சிரித கல்ப வாடி காயாம் சண்டிகாயாம்
ஜகதாம்பிகாயாம் (ஸ்ரீ
கமலாம்பிகாயாம்)
அனுபல்லவி
ராகா சந்த்ர வதநாயாம் ராஜீவ
நயனாயாம்
பாகாரிநுத சரணாயாம்
ஆகாசாதி கிரணாயாம்
மத்யமம்
ஹ்ரீம்கார விபிந ஹரிண்யாம்
ஹ்ரீம்கார சுஸுசரீரிண்யாம்
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம் கௌர்யாம் (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம் கௌர்யாம் (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)
சரணம்
ஸரீர த்ரய விலக்ஷண ஸுகதர
ஸ்வாத்மாநு போகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்
மத்யமம்
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம். (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம். (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)
உலகத்திற்கே தாயாகவும், கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் உடையவளும், அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்ட வரங்களை கொடுப்பவளுமாகிய கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.
முழுமதியை
நிகர்த்த திருமுகத்தினள், கமல மலர் விழியாள், பாகன் என்ற அசுரனின் எதிரியான
இந்திரன் வந்து வணங்கும் சரணங்களை உடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய
பிரகாசத்தால் ஒளிர வைப்பவள், ஹ்ரீம் காரம் என்னும் நந்தவனத்தில் திரியும் பெண் மான், ஹ்ரீம் என்கிற பீஜாக்ஷரத்தை
தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த
மலர்போல் விளங்குபவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவள். பொன் நிறமான
வடிவுடன் கௌரி என்று அழைக்கப்படுபவள், இத்துணை பெருமை மிக்க ஸ்ரீகமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து
வணங்குகிறேன்.
ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான மேனிகளுக்கப்பால் ஆத்ம சரீரம் ஆனந்தமயமான உள்ளது. அப்படிப்பட்ட ஸ்வாத்மனுபவ போகமே அன்னை. சாதகனின் சிரசிற்கு மேலனுபவத்தில் சூக்கு பரையாக விளங்குபவள்.
பிரம்மா
,விஷ்ணு, மஹேஸ்வரன், ஹயக்ரீவர் முதலானோர்
அறிந்துகொண்ட ரஹஸ்ய யோகினி அவள்,
பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் ஸ்வரூபமான வசிநீ முதலான
வாக் தேவியர்களாகவும், சக்தி
தேவியர்களாகவும் பல வகையாகப் பிரிந்து இருப்பவளும் அவளே. சராத்மக பிரபஞ்ச
ரோகத்தை அழிக்கும் சர்வரோகஹர சக்கரத்தில் ஆரோக்கிய ராஜயோகினியாக
விளங்குபவள்,
திருக்கரங்களில்
வீணையை ஏந்தி இசைப்பவளும், கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில்
திகழ்பவளும், தேவர், மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும், குருகுஹனுக்கு வரங்கள்
வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்.
அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . .
No comments:
Post a Comment