Friday, September 8, 2017

நவ துவாரகை யாத்திரை - 21

கோண்டால் சுவாமி நாராயண் ஆலயம் 

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1   2   3   4   5     6    7    8    9    10    11    12 

   13    14   15   16   17   18   19   20    21  22   23  24   25   26   27   28




கிர் காடுகளிலிருந்து மதிய நேரத்திற்கு அகமதாபாத் நோக்கி  புறப்பட்டோம்  வழியில் ஜெத்பூர் (Jetpur) என்ற ஊரில் பருத்தி சேலைகள் கிடைக்கும் என்று வண்டி ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். இப்பகுதி கரிசல் மண் பூமி என்பதால் பருத்தி அருமையாக விளைகின்றது. எனவே இவ்வூரில் வீட்டுக்கு வீடு சேலை நெய்யும் தறிகள் மற்றும் ஆலைகள் அதிகம் என்பதால் சேலை விற்பனை  நிலையங்களும் அதிகமாக உள்ளன. அங்கு இல்லத்தில் உள்ளவர்களுக்காக சில சேலைகளை தேர்வு செய்து வாங்கிக்  கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

மாலை கோண்டால் (Gondal) என்ற ஊரில் உள்ள சுவாமி நாராயண் ஆலயத்திற்கு சென்றோம். தலைகர் டில்லியில் உள்ள அழகிய அக்ஷார்தாம் என்றால் அனைவரும் அறிவோம். அவ்வாலயத்தின்  சுவாமி  நாராயண் அவர்கள் இங்கு குஜராத்தில் மிகவும் பிரசித்தம். இச்சுவாமியின்   சீடர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அதிகமான பக்தர்கள் குஜராத்தில்தான் உள்ளனர். இவர்களும் வைணவர்கள், விசிஷ்டாத்வத சித்தாந்தத்தை பின் பற்றுபவர்கள். தர்மம். அஹிம்சை, பிரம்மச்சரியத்தை கடுமையாக கடைப்பிடிப்பவர்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு தூய மனதுடன் சேவை செய்வதால் முக்தி அடையலாம் என்பது இவர்களது கொள்கை. பொதுவாகவே இவர்கள் ஆலயங்கள் நுணுக்கமான கற்சிற்பங்களைக் கொண்ட ஆலயங்களாகவே இருக்கும் இவ்வாலயமும் அவ்வாறே அருமையாக அமைந்திருந்தது.  மிகப்பெரிய ஆலயம் பளிங்குக் கற்களைக் கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஆலயம் அருமையாக அமைந்திருந்தது. 






பின்னர் ராஜ்கோட் வழியாக அகமதாபாத் வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இன்றைய தினம் மிகவும் நீண்ட பயணமாக அமைந்தது. வண்டி ஒட்டுனர் இராஜஸ்தான் செல்ல ஏதுவாக அகமதாபாதின் வட்டப்பாதையில் (Ringroad),  மோகன் இன் (Mohan Inn) என்ற தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்,  இரவு அங்கு தங்கினோம். பொதுவாக வெளி மாநிங்களில் பயணம் செய்யும் போது அங்ங்கு கிடைக்கும் உணவிற்கு  ம்மை ஒப்புக்கொடுத்து விடுவது அவசியம், இவ்வாறே இது வரை செய்தோம் ஆனால் இன்று எதிரே ஒரு உடுப்பி உணவகம் இருந்ததை கவனித்தோம் எனவே அங்கு சென்று தோசை சாப்பிட்டோம் மறு  நாள் இராஜஸ்தானத்தில்  யாத்திரை எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து  வாருங்கள் அன்பர்களே.

                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

எங்கே செல்கிறோமோ அந்த ஊரின் உணவு உண்பது சாலச் சிறந்தது.....

தொடர்கிறேன்.

S.Muruganandam said...

அது உண்மை ஐயா. குழுவினர் அனைவரும் பல மாநிலங்களில் பணி புரிந்தவர்கள் என்பதால் எப்போதும் உணவிற்கான பிரச்சினை வந்ததில்லை. அந்த அந்த ஊரின் உணவை கேட்டு வாங்கி உண்டோம். மிக்க நன்றி ஐயா.

venky said...

அருமையான விளக்கம்.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கி ஐயா.