Saturday, September 23, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 4

மூன்றாம்  ஆவரணம்

திருமயிலை  கற்பகாம்பாள்   காமதேனு வாகனத்தில் 
மஹாகௌரி கொலு 


அன்னையின் பின்னழகு
( முத்து சடைகள், மலர் சடைகள்)

மஹிஷாசுர மர்த்தினி ரம்ய கபர்த்தினி ஷைலசுதே!


இவ்வருடம் புதிதாக அம்மையப்பரின் அருட்காட்சிகளை 
ஊஞ்சல் மண்டபத்தில் அமைத்துள்ளனர் 
உஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலை நாதர்
ருத்ராட்சத்தால் கோலம் **************

3வது ஆவரண கீர்த்தனை

ராகம் -  சங்கராபரணம்                                                                     தாளம் - ரூபகம்
பல்லவி

ஸ்ரீகமலாம்பிகயா கடாக்ஷிதோஹம் அம்ப
ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி          ( ஸ்ரீ கமலாம்பிகயா)

அனுபல்லவி

பாகசாஸநாதி ஸகல தேவதா ஸேவிதயா
பங்கஜாஸநாதி பஞ்ச க்ருத்யாக்ருத்-பாவிதயா

மத்யமம்
ஸோகஹர சதுரபதயா மூகமுக்ய வாக்ப்ரதயா
கோகநத விஜயபதயா குருகுஹ தத்த்ரைபதயா  (ஸ்ரீ கமலாம்பிகயா)

சரணம்
அநங்க குஸுமாத்யஷ்ட சக்த்யாகாரயா
அருணவர்ண ஸம்சோக்ஷாபன சக்ராகாரயா
அநந்த கோட்யண்டநாயக  ஸங்கரநாயிகயா
அஷ்டவர்காத்மக குப்ததரயா வரயா

மத்யமம்
அநங்காத் யுபாஸிதயா அஷ்டதளாப்ஜஸ்திதயா
தநுர் பாணதர கரயா தயாஸுதா-ஸாகரயா   (ஸ்ரீ கமலம்பிகயா)


ஸ்ரீ கமலாம்பிகையின் கடைக் கண் பார்வையால் ஆளானேன். அதனால் நான் பரிபூரண பிரும்மாக ஆகிட்டேன்எனது ஸ்வரூபம் சத்+சித்+ஆனந்தமாகும்.  அதாவது நான் என்றென்றும் அழிவின்றி நிலையாக இருப்பேன். ஞானமாக விளங்குவேன். ஆனந்தமாகவும் விளங்குவேன்.

 இந்திரன் முதலான  சகல  தேவர்களாலும் வணங்கப்பட்டவள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவள், பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால் கௌரவிக்கப்பட்டவள்.

துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவள், மூககவி போன்றவர்களுக்கு தன் மேல்  கவி மழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவள், செந்தாமரையை வெல்லும் செம்மாந்த  திருவடிகளை உடையவள், தந்தையின் தோள் மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கேஅஹம் ப்ரஹ்ம் அஸ்மி” என்ற பதங்களின் சொரூபீயாக இருப்பவள். அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்கொள்ளப்பட்டேன்.

அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டு சக்திகளாக விளங்குபவள். சிந்தூர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உறைபவள், (இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்), கோடானு கோடி  அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாக விளங்குபவள், க ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவள், மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகத்தியர், அக்னி, சூர்யன், இந்திரன், சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவள், எட்டு தளமுடைய ஸம்ஷோபன சக்ரத்தில் வசிப்பவள், வில், அம்பு போன்ற ஆயுதங்களை திருக்கரங்களில்  தரித்திருக்கும் சத்திரிய தேவதை, கருணை என்ற அமுத ப்ரவாகமாக இருப்பவள். அக்கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.

இம்மூன்றாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் ஆகும். இச்சக்ரம் அஷ்டதள பத்மமாக (எட்டிதழ் தாமரை) விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுரசுந்தரி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குப்ததர யோகினி. அவஸ்தை சுஷுப்தி ஆகும். இதில் விளங்கும் தேவதைகள்  அனங்க குஸுமா முதல் அனங்க மாலினி ஈறான எண்மர் ஆவர். இக்கீர்த்தனை மூன்றாவது வேற்றுமையில் அமைந்துள்ளது.  
                                
        முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

No comments: