Showing posts with label சரஸ்வதி. Show all posts
Showing posts with label சரஸ்வதி. Show all posts

Friday, October 23, 2020

கோலாகல நவராத்திரி - 8


                                                

அன்ன வாகனத்தில் கற்பகாம்பாள் 

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.



சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

               


                

நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம் 

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம் ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் || 


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திரு உருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

                                  

காலராத்ரி துர்க்கா 

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலராத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி, கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் ,காலராத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள்

 

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர்சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள்

 

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள்.

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)



ஏழாம் நாள்

சப்தமியன்று  -  சரஸ்வதி

மலர்: தாழம்பு

நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்

நிறம்: நீலம்

கோலம் :  நறுமண மலர்களால்  கோலம்.

ராகம் : பிலஹரி  ராகம்

 ஸ்லோகம் :

ஓம்  வாக்தேவ்யை ச  வித்மஹே  விரிஞ்சி பத்தின்யை ச  தீமஹி |

தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத் ||

 

                                                                                                                                           அம்மன் அருள் பெருகும்  . . .

Tuesday, September 26, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 8


ஏழாவது ஆவரணம் 



கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் 










தாமரை மலர்ச் சடை 




சென்ற வருட அலங்காரம் 





ஊஞ்சல் மண்டபத்தில் நவதானியக் கோலம் 







மஹா மண்டபத்தில் திருவிளையாடற் புராண வரலாறு  



***************

ஏழாவது  ஆவரணம்

ராகம்: சஹானா                                                               தாளம்:திரிபுட

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி
சிரித கல்ப வாடி காயாம் சண்டிகாயாம்  ஜகதாம்பிகாயாம்            (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

அனுபல்லவி

ராகா சந்த்ர வதநாயாம் ராஜீவ நயனாயாம்
பாகாரிநுத சரணாயாம் ஆகாசாதி கிரணாயாம்

மத்யமம்
ஹ்ரீம்கார விபிந ஹரிண்யாம் ஹ்ரீம்கார சுஸுசரீரிண்யாம்
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம்  கௌர்யாம்     (ஸ்ரீ
 கமலாம்பிகாயாம்)

சரணம்
ஸரீர த்ரய விலக்ஷண ஸுகதர ஸ்வாத்மாநு போகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்

மத்யமம்
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர  விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம்.   
     (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

உலகத்திற்கே தாயாகவும், கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் உடையவளும், அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்ட வரங்களை கொடுப்பவளுமாகிய  கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

முழுமதியை நிகர்த்த திருமுகத்தினள், கமல மலர் விழியாள், பாகன் என்ற அசுரனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும் சரணங்களை உடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிர வைப்பவள், ஹ்ரீம் காரம் என்னும் நந்தவனத்தில்   திரியும் பெண் மான், ஹ்ரீம் என்கிற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவள். பொன் நிறமான வடிவுடன் கௌரி என்று அழைக்கப்படுபவள், இத்துணை பெருமை மிக்க  ஸ்ரீகமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான மேனிகளுக்கப்பால்  ஆத்ம சரீரம்  ஆனந்தமயமான உள்ளது. அப்படிப்பட்ட ஸ்வாத்மனுபவ போகமே அன்னை. சாதகனின் சிரசிற்கு மேலனுபவத்தில் சூக்கு பரையாக விளங்குபவள்.

பிரம்மா ,விஷ்ணு, மஹேஸ்வரன், ஹயக்ரீவர்   முதலானோர் அறிந்துகொண்ட  ரஹஸ்ய யோகினி அவள், பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் ஸ்வரூபமான வசிநீ முதலான வாக் தேவியர்களாகவும்,  சக்தி தேவியர்களாகவும் பல வகையாகப் பிரிந்து இருப்பவளும் அவளே. சராத்மக பிரபஞ்  ரோகத்தை அழிக்கும் சர்வரோகஹர சக்கரத்தில் ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,

திருக்கரங்களில் வீணையை ஏந்தி இசைப்பவளும், கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும், தேவர், மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும், குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்.


ந்த ஏழாம் ஆவரணத்தின் சக்ரம்  சர்வ ரோகஹர சக்ரம் ஆகும். இச்சக்ரம் எட்டு முக்கோணங்களாக (அஷ்ட கோணம்)  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுராசித்தா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி ரகசிய யோகினி. அவஸ்தை மனனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாக் தேவியர்கள் எண்மர்  ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், விருப்பங்கள் ஈடேறும், ஹ்ரீம் பீஜத்தின் சக்திகள் கிடைக்கப்பெறும், ஆத்ம போதம் தெற்றென விளங்கும், வாக் தேவியர்களின்  அருளால் அறிவு நலம் மேலோங்கும்  நோய்கள் நீங்கும்,


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு



                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Monday, October 10, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -9

சரஸ்வதி பூஜை 

காளியன்னை

பவதாரிணி காளிதேவி

நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைமஹா நவமி நாளான இன்று   கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே ஸதா||


ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:


படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி



************************

சுற்றிச்சுழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறும்
 மர வேரால் ஆன விநாயகர் 



பள்ளி கொண்ட சிவன் 


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

********************

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்


ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர
நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த    சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


பல்லக்கில் விநாயகர் 

  




                                                                                     ஸித்திதாத்ரி துர்க்கா                                               


நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில்   பாதி பாகத்தை  தேவிக்குக்  கொடுத்தார்.  இதனால்  சிவபெருமனும்,                          அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.) 


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |
யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

               தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர். 

**********************

கருமாரி திரிபுரசுந்தரி
அஷ்வாரூடா அலங்காரம்
***********
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

மாயா ஜனனக்கடற்காவனோ பிணிமலைக்காவனோ, வருந்தும் வாறனைச் சமுசார வேதனைக்காவனோ, வறுமைச்சனிக்காவனோ,

ஓயாத கோபக்கனற்காவனோ, கெட்டவொன்னலர் பகைக்காவனோ, ஒழியாத சஞ்சலப் படுகுழிக்காவனோ, ஊழ்வினை தனக்காவனோ,

நீயா தெரித்தென்னைப் பாதுகாத்தருள் செய்து நெடுநாட்படும் பாடெல்லாம்,
நீக்கியழியாத சுகமெய்தச் செய்தாலன்றி நீச்சுநிலை யில்லையம்மா,

வீயாத முக்கணத்திடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (9)

பொருள்: அடியேன் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வேனோ, நோய் வந்து வருந்துவேனோ, வருத்துகின்ற இந்த சம்சார வேதனைக்காவனோ, வறுமையில் உழல்வேனோ, கடுங்கோபத்தால்  துன்பமுறுவேனோ, பகைவர்களால் துன்பமுறுவேனோ, சஞ்சல மனத்தால் துன்பமுறுவேனோ, துரத்தும் ஊழ்வினையால் வரும் துன்பங்களினால் உழல்வேனோ  தெரியவில்லை. அம்மா கற்பகவல்லியே! . நீ ஆதரித்து என்னை பாதுகாத்து நாயேன் நெடுநாட்களாக படும் இத்துன்பங்களையெல்லாம் போக்கி சுகம் பெற செய்தாலின்றி வேறு புகலில்லை அம்மா. யாராலும் வெல்ல முடியாத முக்கண்ணை உடைய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே! பரிசுத்தமானவளே!  கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Wednesday, October 21, 2015

அன்னையின் நவராத்திரி - 9

                                                     ஒன்பதாம்   நாள்  கொலு

முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள் ,   நான்காம்நாள்,      ஐந்தாம்நாள்,     ஆறாம் நாள்,         ஏழாம் நாள்,                   எட்டாம் நாள்


முத்து மாரியம்மன் 
காளிகாம்பாள் அலங்காரம்


நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைமஹா நவமி நாளான இன்று அன்னையை கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.


கற்பகவல்லி  சிம்ம வாகனத்தில் 
 மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் 


ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யா


ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:


படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி



************************


ரக்தபீஜ சம்ஹாரி அலங்காரம்


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

********************

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்



ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர
நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)



                                                                                     ஸித்திதாத்ரி துர்க்கா                                               


நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.


காமாக்ஷியம்மன் பாயும் குதிரையில் 
மீனாக்ஷி அலங்காரம் 




ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.) 


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |
யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |
மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

               தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர். 

**********************


மூலிகைகளால் கோலம் 


நவதுர்கா ஸ்துதி


ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம
சாரிணி சந்தர கண்டினியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே
ஜெயஜெய கால ராத்ரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )

****************************



நவராத்திரியின் நிறைநாள் இரவு கற்பகாம்பாள் கம்பா நதிக்கரையில்  சிவ பூஜை செய்யும் கோலத்தில் கொலு தர்பார் காட்சி அருள்கின்றாள். ஒரு நாள் திருக்கயிலையில் அம்மை விளையட்டாக ஐயனின் திருக்கண்களை பொத்த அதனால் அகிலாண்டமும் பிறழ அதற்கு பிராயசித்தமாக அம்மை காமாட்சியாக காஞ்சி வந்து கம்பா நதிக்கரையில்  மணலால் சிவபூஜை செய்யும் வரும் போது ஒரு நாள்  ஆற்றில் வெள்ளம் வர அம்மை ஐயனை அனைத்துக்கொள்ள தன் உடலில்  முலைத்தழும்பும்   வளைத்தழும்பும் ஐயன் பெற்றார் என்பது ஒரு நாடகம். 

நாம் எல்லோரும் உய்ய சிவபூஜையின் சிறப்பை உணர்த்த, முப்பதியிரண்டு அறங்களையும் உணர்த்த அம்மை பூவுலகிற்கு வந்து இந்த நாடகத்தை நடத்தினாள். அற வழியில் பொருள் ஈட்டி சுகமடைந்து மோட்சம் அடைவோமாக.

இரவு சிறப்பு பூஜை முடித்தபின் அம்மன் திருக்கோவிலை வலம் வந்து யதாஸ்தானம் திரும்புகின்றாள்.

*********************





கமலாலய குளம் 


திருவாரூர் அறநெறி சன்னதியில் நமிநந்தியடிகள் 
கமலாலய நீர் கொண்டு விளக்கி எரித்த வரலாறு 

ஒருநாள் இரண்டுநாள் அல்ல நான் உலகத்து
உதித்த இந்நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு
உள்ளம் தளர்ந்து மிகவும்
அருநாண் அற்றிட்ட வில்போல் இருக்கும் இவ்
அடிமை மீதிற் கருணை கூர்ந்து
அஞ்சேல்எனச்சொல்லி ஆதரிப்பவர்கள் உனை
அன்றி இலை உண்மை ஆக;
இரு நாழிகைப்போதும் வேண்டாது நிமிஷத்து
இலக்கம் இலி புவனத்தையும் இயற்றி
அருளும் திறம் கொண்ட நீ ஏழையேன் இன்னல்
தீர்த்து அருளல் அரிதோ?
வரும் நாவ்லூர்ர் முதலோர் பரவும் இனிய புகழ்
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமிசுபநேமிபுகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமிஅபிராமிஉமையே! (5)

பொருள்திருநாவலூரராகிய சுந்தரர் போன்ற அருளாளர்கள்  போற்றிப் பரவும்   புகழ்மிக்க திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியேநலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளேபல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையேசிவபெருமான் மகிழும் தேவியேஅபரிமிதமான அழகுடைய அபிராமியேமலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்லஅடியேன் பிறந்த நாள் முதல் இன்று வரை கவலையால்முடிவில்லாத துன்பம் கொண்டுமனம் சோர்ந்துநாண் அறுந்த வில்லைப் போல் இருக்கும் அடிமையின் பால் கருணை  கொண்டு, “அஞ்சாதே” என்று சொல்லி ஆதரிப்பவர்கள் உன்னையன்றி யாருமில்லைஇது சத்தியம்ஒரு நொடிப்பொழுதில்  எண்ணற்ற புவனங்களைப் படைத்துக் காத்தருளும் வல்லமை மிக்க உனக்குஇந்த ஏழையின் துன்பம் தீர்த்து அருள் புரிவது இயலாத காரியமாஎன்று ஒரு சேய்  தன் தாயிடம் உரிமையோடு    கேட்பது போல கேட்கின்றார் அபிராமி பட்டர்.





எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேலும்
ஏறிட்டு ஒறுக்க அந்தோ!
எவ்விதம் உளம் சகித்து உய்குவேன்? இப்பொழுது
எடுத்திட்ட சன்ம்ம் இதனில்
நண்ணி எள் அளவில் சுகம் ஆனது ஒர நாளினும்
நான் அனுபவித்த்து இல்லை
நாடு எலாம் அறியும் இது கேட்பது ஏன்? நின் உளமும்
நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தில் செய்யாத
 புலையன் ஆனாலும்  நினது
பூரண கடாக்ஷ வீட்சண்ணீயம்  செய்து எனது
புன்மையை அகற்றி அருள்வாய்!
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் ப்ரவும் இசை
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி, புகழ்நாமி சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே! (6)

பொருள்: மானிடர்களும், தேவர்களும் தினமும் போற்றித் துதிக்கும் புகழ்பெற்ற திருக்கடவூர் என்னும் பதியில் வாழும் தேவியே! நலந்தரும் சக்ராயுதம் ஏந்தியவளே! பல திருநாமங்களால் போற்றப்படும் அன்னையே! சிவபெருமான் மகிழும் தேவியே! அபரிமிதமான அழகுடைய அபிராமியே! மலையரசனுக்கு ஒரு கன்னியாய் அவதரித்த மலை வளர் காதலி  உமையம்மையே!

கணக்கில்லாத துன்பங்கள் மேலும் மேலும் பெருகித் துன்புறுத்துகின்றன. இதை எவ்வாறு உள்ளத்தில் தாங்கி வாழ்வேன்? இப்ப்றவியில் துளியேனும் சுகத்தை  அடியேன் அனுபவித்த்தில்லைஇது உலகம் அறிந்த உண்மை. நின் உள்ளமும் இதை நன்றாய் அறியும். முற்பிறவியில் புண்ணியம் செய்யாத இழிவு பட்டவன் ஆனாலும்  உன்னுடைய பூர்ண அருட்பார்வையால் அடியேனை நோக்கி  அருள் புரிந்து அடியேனது சிறுமையை போக்கி அருள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்
(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி பட்டரின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)

                                                                                                                                  அம்மன் அருள் தொடரும். . . . ..