Thursday, October 31, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 67



சென்னை விமான நிலையத்தில்

இவ்வருடம் சென்னையிலிருந்து 25 அன்பர்களும், பெங்களூரிலிருந்து 15 அன்பர்களுமாக மொத்தம் 40 அன்பர்கள் யாத்திரை மேற்கொண்டோம். மூன்று மாதங்களுக்கு முன்பாகவே   டில்லி சென்று வர விமான சீட்டு, கேதார்நாத்திற்கு செல்ல ஹெலிகாப்டர்  சீட்டு மற்றும் பத்ரிநாத்தில் மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றுக்கான முன்பதிவை முடித்துக்கொண்டோம். வழக்கம் போல் சென்னையிலிருந்து டில்லி விமானம் மூலம் சென்று அங்கிருந்து டேராடூன் ஜன்சதாப்தி இரயில் மூலம் ஹரித்வாரை அடைந்தோம். முன்பு ஒரு முறை பௌர்ணமியன்று ஹரித்வாரை அடைந்தது போல இவ்வருடமும் அமைந்தது. குளிர் நிலவும், குளிர் தட்பவெப்பமும் எங்களை வரவேற்றது. இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம், ஹரித்வாரத்தில் உள்ள மத்வாஸ்ரமத்தில் தங்கினோம். இரவில் கங்கையில் தீர்த்தமாடினோம்.


சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் சில சிலைகள்























இவ்வருடம் மழைக் காலம் நீடித்தால் பத்ரிநாத் செல்லும் வழியில் சில நிலச்சரிவுகள் ஏற்பட்டதை அறிந்திருந்தோம். மேலும் ஒரு வாரம் முன்பு கோவிந்காட் என்ற இடத்தில் ஒரே சமயத்தில் அதிக மழை கொட்டியதால் வாகனங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது என்றும் படித்திருந்தோம். எனவே எப்படி அவர் நமக்கு அளிக்கின்றாறோ அதை ஏற்றுக் கொள்வோம் என்ற மன நிலையுடன்தான் யாத்திரைக்குப் புறப்பட்டோம்.

                                  தில்லி விமானப்பயணம்

தில்லி விமான நிலையத்தில் முத்திரைகள் 

பத்ரிநாத் செல்ல அடியோங்கள் வண்டிகளுக்கு முன் பதிவு செய்திருந்த வாகன ஏற்பாட்டாளர், கடைசி நேரத்தில் நிலச்சரிவின் காரணமாக பத்ரிநாத்தில் சில வண்டிகள் சிக்கிக்கொண்டன, முன்னர் கூறியது போல சிற்றுந்துகள் அளிக்க முடியாது, வேண்டுமென்றால்  40 பேர் செல்லக்கூடிய பெரிய பேருந்து தருகிறேன் என்று கையை விரித்தார்மலை பிரதேசத்தில் பெரிய வண்டிகளில் செல்வதை விட சிறிய வண்டிகளில் செல்வதே உத்தம்மானது என்பதால் வேறு வாகன ஏற்பாட்டாளர்களுடன் பேசி நான்கு சிறு வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புறப்பட்ட போதே சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாகி விட்டது. மேலும் வழியிலும் கால தாமதம் ஏற்பட்டது. பிரதம மந்திரியின் கனவுத்திட்டமான சார்தாம் பாதைகளை அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்ததால் பல இடங்களில் நின்று  செல்ல வேண்டி இருந்தது.


 

 ஹரித்வாருக்கு புகை வண்டிப்பயணம்


இப்பணிகளைப் பற்றிய சிறு விவரம், இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள்தான் மிக முக்கியமானது. இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில்  காற்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.


முழு நிலவன்று கங்கையின் கரையில்

ஹரித்வார் புகைவண்டி நிலையத்தில் உள்ள சிவன் சிலை

மத்வாஸ்ரமத்தில்


இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண்டும் அதற்கு நிறைய பக்தர்களை வரவழைக்க வேண்டும் என்று நினைத்த பிரதமர்,  உத்தரகாண்ட்  மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  இருவழி சாலைகளை 12,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.

கண்டம் என்னும் கடிநகர் புருஷோத்தமர் ஆலயம் 


மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது  இந்த சார்தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மத்திய அரசு நினைத்து அதற்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவாக்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பேருந்து  நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலையெங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது  அரசு. இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட திட்டமிட்டிருக்கின்றனர்.


                                                                                                                                                                                                                                                                                                                                                         யாத்திரை தொடரும் .....


5 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயணம் சிறப்பாக இருக்கிறது. உங்கள் பயணத்தின் மூலம் நானும் பயணிக்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.

S.Muruganandam said...

தொடர்ந்து வாருங்கள் ஐயா. மிக்க நன்றி.

கோமதி அரசு said...

. //இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட திட்டமிட்டிருக்கின்றனர்.//

இனி வரும் காலங்களில் சார் தம் யாத்திரை சுகமான யாத்திரை ஓம் என்று ஒலிக்கும் ஒலியை கேட்டு கொண்டு பயணிக்கலாம்.

மனகண் முன் காட்சியாக விரிகிறது.

படங்கள் செய்திகள் மனதுக்கு இதம்.

கோமதி அரசு said...

ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது //

மலை எங்கும் ஒலிக்கட்டும்.

S.Muruganandam said...

யாத்திரை சுகமாக முடிய இதன் மூலம் முடியும் என்று நம்புகிறேன். ஹர ஹர மஹாதேவா! ஓம் ஓம் ஓம்