முதலாம் திருநாள் காலை கொடியேற்றம்
"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்றால் அவ்வைபாட்டி ஏனென்றால் திருக்கோவில்கள் முழு கிராமத்திற்கும் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கின உயரமான கோபுரத்தில் உள்ள கலசங்கள் மின்னலில் இருந்து கிராமத்தை காப்பாற்றுகின்றது. அதில் இட்டு வைத்திருக்கும் வரகு முதலிய தானியங்கள் பஞ்ச காலத்தில் விதை தானியமாகவும் பயன்பட்டன. அதுவுமல்லாமல் கோவில் என்பது பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும் நிலையங்களாவே அன்றும் விளங்கின, இன்றும் விளங்குகின்றன.
வள்ளி நாயகி தேவ சேனா நாயகி
உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி
அது போலவே திருக்கோவில்கள் கல்வி மையமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும்,
அரங்கேற்றம் நடைபெறும் இடமாகவும் அறக்கொடைகளால்
வறியவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கும் ஒரு இடமாகவும் விளங்கி வருகின்றன. ஆகஏ இன்றும்
நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த் இடத்தில் ஓர் ஆலயத்தை நிறுவி நிர்வகித்து
வருகின்றோம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்றபடி, இத்திருக்கோவிலின் திருவிழாக்கள்
அந்த காலத்தில் விவசாயம் இல்லாத காலத்தில் கிராமத்தினர் அனைவரும் ஒன்றாகக் கூடி இரை
வழிபாடு செய்யவும் உதவின.
கொடி
கொடி மரத்திற்கு அபிஷேகம்
வள்ளி நாயகி தேவ சேனா நாயகி
வீரபாகு
முதலாம்
திருநாள் அன்று காலை நன் முகூர்த்த காலத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி நாயகி,
தேவ சேனா நாயகி, வீரபாகு தேவர் மற்றும் சண்டிகேஸ்வரர். அஸ்திர தேவர் கொடி மரத்திற்கருகில் எழுந்திருளி கொடியேற்றம் கண்டருளுகின்றனர். விக்னேஸ்வர பூஜை முடித்து கொடியேற்றி சகல தேவர்களையும்
கொடி மரத்தின் அருகில் வந்து யதாஸ்தானம் கொண்டருளி பெருவிழா முடியும் வரை இருக்குமாறு
வேண்திக்கொள்ள அனைவரும் யதாஸ்தானம் கொள்வதாக
ஐதீகம். பின் கொடி மரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆகி, பின்னர் சிவசுப்பிரமணிய
சுவாமிக்கு கற்பூர ஆரத்தி நடைபெற்று பின் கோவிலுக்கு வெளியே எழுந்தருளி அஸ்தமான கிரி
விமானத்தில் கோவிலின் உள்ளே வர முடியாதவர்களுக்கும் காட்சி அளிக்கும் வகையில் மாட விதி உலா வந்து அருளுகின்றனர் பஞ்ச முர்த்திகள்.
2 comments:
புகைப்படத்திற்கும், சென்னை கோவில்களின் தகவல் களஞ்சியத்திற்கும் நன்றி ஐயா
மிக்க ந்ன்றி LOGAN ஐயா,
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
Post a Comment