தங்கள் குழுவினர் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதிவிடுங்கள் என்று வேண்டிய ஸ்பார்க் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. ஐயா உங்களுக்காக இதோ அடுத்த பதிவு.
உத்தரகாசி சுற்றுலா மையம்
ஜீப்பில் கேதார்நாத்திற்கு புறப்படுகின்றோம் (12-09-10)
எனவே அன்றைய தினம் (11-09-10) வழிகாட்டியை அழைத்து பேருந்து வராவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது ஜீப் வழியாக எங்களை மேலே அழைத்து செல்லுங்கள் எப்படியாவது முழு யாத்திரையும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். யாத்திரை சுமுகமாக செல்லாமல் ஜான் ஏறினால் முழம் வழுக்குவது போல சென்று கொண்டிருந்ததால் அவருக்கும் ஒன்றும் சுரத்தில்லை. ஆயினும் அவர்களது துணை மேலாளரிடம் பேசி ஒப்புதல் வாங்கிக்கொண்டார். இன்னும் ஒரு சின்ன பிரச்னையும் தோன்றியது. உத்தர காசியில் நாங்கள் இருவர் தங்கும் அறையில் தங்குவதால் அதற்குண்டான அதிகப்படி வாடகையை நாங்கள் தர வேண்டும் என்று அதன் மேலாளர் கேட்க, இதில் எங்கள் தப்பு என்ன தங்கள் பேருந்து பழுதானதால் தானே நாங்கள் இங்கு தங்க வேண்டி வந்தது என்று கூறி அவரை சமாதனப்படுத்தினோம். எப்படியும் அடுத்த நாள் இங்கிருந்து சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் தூங்கசென்றோம்.
மலை வளம் மேகமூட்டத்தினூடே (12-09-10)
அடுத்த நாள் (12-09-10) காலையில் எழுந்து தயாராகி பேருந்து நிலையம் சென்று விசாரித்த போது தராசு செல்லும் வழி நாங்கள் வரும் போது மாட்டிக்கொண்ட அதே இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அடைபட்டுள்ளது எனவே வேறு வழியாக செல்ல வேண்டும் என்றார்கள். எனவே இரண்டு ஜீப்களில் பயணப்பட்டோம்.
JCB யந்திரம் நிலச்சரிவை சரி செய்யும் காட்சி
நிலச்சரிவின் பின்புலத்தில் பேருந்து செல்லும் காட்சி
உத்தரகாசியில் இருந்து கேதார்நாத் செல்ல இரு பாதைகள் உள்ளன அவை என்னவென்று முதலில் காணலாமா? அன்பர்களே
புறப்படும் இடம்
|
செல்லும் இடம்
|
தூரம் கி.மீ
|
உயரம் மீ
|
உத்தரகாசி
|
தாராசு
|
28
|
1036
|
தாராசு
|
தெஹ்ரி
|
37
|
770
|
தெஹ்ரி
|
தன்சாலி
|
65
|
976
|
தன்சாலி
|
சிர்வடியா
|
31
|
2134
|
சிர்வடியா
|
தில்வாரா
|
42
|
671
|
தில்வாரா
|
அகஸ்தியமுனி
|
10
|
762
|
அகஸ்தியமுனி
|
குண்ட்சட்டி
|
15
|
976
|
குண்ட்சட்டி
|
குப்தகாசி
|
5
|
1479
|
குப்தகாசி
|
நாலா
|
3
|
1475
|
நாலா
|
ஃபடா
|
11
|
1601
|
ஃபடா
|
ராம்பூர்
|
9
|
1646
|
ராம்பூர்
|
சோன்பிரயாகை
|
3
|
1829
|
சோன்பிரயாகை
|
கௌரிகுண்டம்
|
5
|
1982
|
கௌரி குண்டம்
|
கேதார்நாத்
|
14(நடை)
|
3583
|
இரண்டாவது வழி உத்தரகாசி – தெஹ்ரி - கடோலியா - கன்சாலி – குட்டு– பன்வாலி –மக்கு – த்ரியுக் நாராயண் – சோன்பிரயாக் – கௌரி குண்டம் –கேதார்நாத்.
நாங்கள் இன்றைய தினம் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடியாததால் மூன்றாவது வழியில் தெஹ்ரி அணையின் பின்பக்கமாக பயணம் செய்தோம். உத்தரகாசியிலிருந்து சௌரங்கி கால் என்னும் இடத்திற்கு பயணம் செய்தோம், பாதியில் குட்டீதி மாதா கோவில் உள்ளது. சௌரங்கி காலில் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கு ஒரு அருமையான சிவன் கோயில் இருந்தது அவரை வணங்கிப்புறபட்டோம். செல்லும் வழியில் தேவேந்திரனின் உடல் நிலை மேலும் மோசமாகியது, ஜீப்பில் குலுங்கி குலுங்கி பயணம் செய்ததால் சாப்பிட்ட கொஞ்சமும் வாந்தி ஆகிவிட்டது, எப்படியோ பயணத்தை தொடர்ந்தோம். இப்பாதை கிராமப்பாதை என்பதால் ஒரு வழிப்பாதைதான், நடு நடுவே கிராமங்கள் வந்தன, கீழே ஓடும் ஆறு செழுமையான நெல் வயல்கள் மலையின் சரிவில் என்று அற்புதமாக காட்சியை பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். போகப் போக தெஹ்ரி அணையின் நீர் அதிகமாகிக்கொண்டே வருவதைப் பார்த்தோம்,மலையில் ஏறு உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தோம் மேகங்கள் வந்து உரசி சென்றன, மழைச்சாரல் வேறு துவங்கியது. இவ்வாறு பயணம் செய்து கோடார், லம்ப்காவ் வழியாக ராஜாகேத் என்னும் ஊரை நோக்கிச்சென்றோம். மலை உச்சியை அடிந்து விட்டோம் அது வரை எந்த பிரசனையும் இருக்கவில்லை சுமார் 3 கி.மீ இருக்கும் போது மீண்டும் ஒரி நிலச்சரிவு. பயணம் தடைப்பட்டது. அங்கு ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது. ஒரு மணி நேரம் தங்கினோம். மேகங்கள் ஆட்டிய கண்ணாமூச்சி நாடகத்தையும் மழை பெய்யும் அழகையும், அந்தப் பகுதி மக்கள் எதுவும் நடக்காதது போல தங்கள் வயல்களில் பணி செய்வதையும், பெண்கள் மலையேறி சென்று, புல் மற்றும் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டு வருவதையும் பார்த்தோம். இன்னும் மூன்று கி.மீதான் இங்கு மாட்டிக்கொண்டேமே என்று வழ்காட்டி நொந்து கொண்டார். வேறு வழியில்லாமல் அந்த ஒத்தைக் கடையில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு உத்தரகாசிக்கே திரும்பி கிளம்பினோம். வரும் வழியில் ஜீப் ஓட்டிகளின் கிராமம் வந்தவுடன் அவர்கள் அதற்கு மேல் வரவிரும்பாமல் எங்களை அங்கேயே இறக்கி விட்டனர். வழி எல்லா இடங்களிலும் அடைபட்டு கிடப்பதால் யாரும் உத்தரகாசிக்கு வர தயாராக இருக்கவில்லை. கடைசியாக இரண்டு ஜீப்காரர்கள் வந்தனர் அதிக பணம் கொடுப்பதாக சொன்னபின், அவர்களும் வழியில் ஒரு குறுக்கு வழியில் செல்ல யத்தனித்தனர், அவர்களிடம் பேசி தாஜா செய்து சென்ற வழியிலேயே திரும்பி வந்து உத்தரகாசி அடைந்தோம்.
நிலச்சரிவு காட்சிகள்
உத்தரகாசியில் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்று வந்து இறங்கிய போது நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டோம் என்பார்களே அது போல்தான் இருந்தது எங்கள் நிலை. ஒரு நாள் முழுவதும் சுற்ரியும் பயன் இல்லாமல் போனது, அதுவும் இல்லாமல் இரண்டு நாட்கள் வீணாகப்போனது. தேவேந்திரன் உடல் நலம் மோசமானதால் சிலர் இனி எங்கும் செல்ல வேண்டாம் இப்படியே ரிஷிகேஷ் சென்று விடலாம் என்று கூற ஆரம்பித்தனர். எப்படியோ அவர்களை சமாதனம் செய்து கேதார்நாத் செல்ல வேண்டாம், பத்ரிநாத் மட்டும் செல்லலாம், பேருந்து கோவில் வரையில் செல்லும் என்பதால் அதிக பிரச்னை இருக்காது, மேலும் உடல் நலம் இலலாமல் யாத்திரை வந்த கோபால் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது பேருந்து ஓடுனரிடமிருந்து போன் வந்தது, வண்டி சரியாகி விட்டது காலையில் உத்தரகாசி வந்து விடுவோம் என்று கூறினார். இனி அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதோ என்று தூங்கச்சென்றோம்.
தெஹ்ரி அணையின் சில காட்சிகள்
அடுத்தநாளும் (13-09-10) விடிந்தது காலை உணவை முடித்தோம், பேருந்தும் வந்து சேர்ந்தது, மிக்க மகிழ்ச்சியுடன் அதில் ஏறி , நல்ல பாதையிலேயே பயணம் செய்து சம்பா சென்று விடலாம் என்று புறப்பட்டோம், முதலில் உத்தரகாசியின் சுரங்கபாதையை கடந்து தராசு அடைந்தோம். அங்கிருந்த நிலச்சரிவு சரிசெய்யப்பட்டிருந்தது. சின்யாலி சௌர் நோக்கி சென்றோம் அங்கே ஒரு நிலச்சரிவு, ஒரு ஜீப் மாட்டிக்கொண்டிருந்தது. JCB யந்திரம் வந்து நிலச்சரிவை சரி செய்து கொண்டிருந்த போது எங்களுடன் மாட்டிக்கொண்ட இரண்டு இராணுவ லார்களில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் போர் வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன் சென்ற ஒரு பேருந்தின் உள்ளேயே ஒரு பாறை வந்து விழுந்ததில் ஒரு பயணி காயம் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டோம். அங்குள்ள மக்கள் சிலர் காலில் GUM BOOT அணிந்து கொண்டு அந்த சேற்றில் நடந்து கடந்து சென்றனர். இவர்களைப் பார்த்து ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த நிலச்சரிவு சரி செய்யப்பட்டது. பின்னர் கண்டிசௌர் என்ற இடத்தில் மதிய உணவை உண்டோம்.
அதற்கு பிறகு பயணம் மெதுவாகவே இருந்தது, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு என்பதால் பாதை ஒருவழிப்பாதை ஆகிவிட்டது. மேலும் அதிக நிலச்சரிவில் மாட்டவில்லை. அதற்குள் மாலையாகி விட்டது. அந்தி வானம் செந்நிறமாகி எல்லாவற்றையும் செக்க சேவேல் ஆக்கியதை புகைப்படம் பிடித்தோம். சிறிது சூரிய வெளிச்சம் வந்ததால் ஈரம் மேகமாகி மேலே சென்று மழையாக பொழியும் நிகழ்ச்சியை இரசித்தோம். எப்படியும் சம்பா அடைந்து விடவேண்டும் என்று ஓட்டுனர் இரவிலும் வண்டியை ஒட்டினார். இரவில் மலைகளின் பல இடங்களில் கிராமங்களில் மின் ஒளியில் ஒளிரும் அழகை கண்டு இரசித்தோம். காலையில் புறப்பட்ட நாங்கள் இவ்வாறு பல தடங்கல்களை கடந்து இரவு 8 மணியளவில் சம்பா அடைந்து, மிகவும் தேவைப்பட்ட ஒய்வெடுத்தோம். அடுத்த நாள் என்ன நடந்தது பத்ரிநாத் செல்ல முடிந்ததா? என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.
அந்தி நேர செக்கர் வானம்
ஒரு அழகிய மலர்
12 comments:
இமயமலையில் ஒரு இனிய யாத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது.
இறைவனை பார்க்க எத்த்னை சிரமங்கள்!
அவன் அருளால் தான் அவனை வழி பட முடியும் போல.
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
//உத்தரகாசியில் இருந்து கேதார்நாத் செல்ல இரு பாதைகள் உள்ளன அவை என்னவென்று முதலில் காணலாமா? அன்பர்களே//
//உத்தரகாசியில் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட என்று வந்து இறங்கிய போது நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டோம் என்பார்களே அது போல்தான் இருந்தது எங்கள் நிலை.//
//அவர்களிடம் பேசி தாஜா செய்து சென்ற வழியிலேயே திரும்பி வந்து உத்தரகாசி அடைந்தோம்.//
தங்களின் ஆன்மிக பயணத்தை சிறு பாலகர்களுக்கு தமிழ் ஆசிரியர் பாடம் நடத்துவதை போல மிக அழகான சொற்களுடன் விவரித்துள்ளீர்கள் ஐயா.
தெஹ்ரி அணையின் சில காட்சிகள் - மிக அருமையான பாடம் பிடித்துள்ளீர்கள்
//அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.//
வாருங்கள் கோமதி அரசு, அவனருளால்தான் அவன் தாள் வணங்கமுடியுன் என்பது நிதர்சனமான உண்மை.
//தங்களின் ஆன்மிக பயணத்தை சிறு பாலகர்களுக்கு தமிழ் ஆசிரியர் பாடம் நடத்துவதை போல மிக அழகான சொற்களுடன் விவரித்துள்ளீர்கள் ஐயா.//
எழுதும் போது மன்தில் அவன் தோற்றுவிப்பவை அவன். எல்லாம் அவன் செயல்.
தங்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். Logan ஐயா.
தொடர்ந்து வருகிறேன்,,,,,,,,,,,, தெஹ்ரி அணையின் புகை படங்கள் அருமை ,,,,,,,,,,,,,
தங்களுக்காகவே அவசர அவசரமாக பதிவிட்டேன். மிக்க நன்றி கார்த்திகேயன்.
எனக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி ஐயா
தங்களின் ஆர்வம் என்னை உற்சாகபப்டுத்துகின்றது.
Happy New Year Wishes to you and your Family Sir
Wish you the same.
சிறப்பான புகைப்படங்களுடனும், அருமையான வர்ணனைகளுடனும் அழகாக இருக்கிறது..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி சங்கர் ஐயா.
Post a Comment