கண்ணார் அமுதனே போற்றி
திருவண்ணா மலையனே போற்றி போற்றி
காத்திகைதீபப் பெருவிழாவின் ஆறாம் நாளாகிய அன்று திருவண்ணாமலையார் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருக்கு அருளுகின்றார். இந்த இனியநாளில் மாணிக்கவாசகரின் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலைஅனுபவித்து விட்டு கிரிவலத்தை தொடரலாமா அன்பர்களே.
இச்சாழல் பதிகம் தில்லையில் மாணிக்க வாசகர் அருளியது, ஊமையாக இருந்த புத்த கொல்லி மழவன் மகளை இப்பதிகம் பாடி மாணிக்கவசகர் பேச வைத்து அவனை சைவனாக்கிய அற்புதப் பதிகம்.
பொருள்: ஏடீ, தோழி! உன் தலைவன் நான்முகனும் திருமாலும் அறியாமல் மயங்க, அக்னி சொரூபமாலி, பாதாளம் முதல் ஆகாயம் பொருந்தும்படி நின்றதற்கு காரணம் என்ன? எனத் தோழி( கொல்லி மழவன் பாவை) தலைமகளை( மணிவாசகரை) இயற்பழித்துக் கேட்க, ’ நில முதலாய மேல் அண்டங்களிலும் அதன் கீழ் அண்டங்களிலும் பொருந்த அங்ஙனம் அவர் நில்லாமற் போயிருந்தால் நான்முகன், திருமால் இருவரும் தமக்குள்ள வஞ்சனையால் அகங்காரத்தை விடார், சாழலோ! என தலைமகள் தோழிக்கு இயற்பட மொழிந்தாள்.
அலரவனும் , மாலவனும், அறியாமே அழல் உருவாய்
நிலம்முதல், கீழ் அண்டம்உற, நின்றதுதான், என்னேடீ!
நிலம்முதல், கீழ் அண்டம்உற, நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ!இச்சாழல் பதிகம் தில்லையில் மாணிக்க வாசகர் அருளியது, ஊமையாக இருந்த புத்த கொல்லி மழவன் மகளை இப்பதிகம் பாடி மாணிக்கவசகர் பேச வைத்து அவனை சைவனாக்கிய அற்புதப் பதிகம்.
பொருள்: ஏடீ, தோழி! உன் தலைவன் நான்முகனும் திருமாலும் அறியாமல் மயங்க, அக்னி சொரூபமாலி, பாதாளம் முதல் ஆகாயம் பொருந்தும்படி நின்றதற்கு காரணம் என்ன? எனத் தோழி( கொல்லி மழவன் பாவை) தலைமகளை( மணிவாசகரை) இயற்பழித்துக் கேட்க, ’ நில முதலாய மேல் அண்டங்களிலும் அதன் கீழ் அண்டங்களிலும் பொருந்த அங்ஙனம் அவர் நில்லாமற் போயிருந்தால் நான்முகன், திருமால் இருவரும் தமக்குள்ள வஞ்சனையால் அகங்காரத்தை விடார், சாழலோ! என தலைமகள் தோழிக்கு இயற்பட மொழிந்தாள்.
வெள்ளி இரதத்தில் வேழ முகத்தான்
அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் வாசலில் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து கிரி வலத்தை முடிக்க வேண்டும் என்பது நியதி. எங்கிருந்தும் தொடங்கலாம் ஆனால் எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றோமோ அந்த இடத்தில் வந்து முடிப்பது நல்லது. பாதியில் நிறுத்தி விட்டு செல்வதை தவிர்க்கவும். கருணையே வடிவமான மலையை இற்றை நாளில் முழு நிலா நாளான பௌர்ணமி தோறும் வலம் வருதல் புதுப்பெருமை பெற்றதல்ல சிவப்பிரகாசர் அற்றை நாளில் மலை வலம் வருவதற்காகவே சோண சைல மாலையைப் பாடியுள்ளார். அப்பாடல்களை பாடிய வண்ணம் கிரி வலம் வருவது பெரும் பயனை நல்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு முறை கிரி வலம் வந்தால் சம்சாரக் கடலைக் கடக்கும் தோணியாக அமையும்.
ஒருவன் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருந்தாலும் தீப நாளில் ஐந்து முறை சுற்றினால் பாவ விமோசனம் உண்டு. திருவண்ணாமலையை வலம் வந்த ஒருவர் இறந்து போனால் அவர் கைலாயத்தில் நுழையும் போது சந்திரன் வெள்ளைக் குடை பிடிப்பான் என்றும் சூரியன் கையில் விளக்கேந்தி வருவான் என்றும் இந்திரன் மலர் தூவுவான் என்றும், குபேரன் தண்டனிட்டு பணிந்து வரவேற்பான் என்றும் அருணாசல தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்
மாலை மயங்கும் நேரத்தில் எழில் கொஞ்சும் அண்ணாமலை
கற்பக விருக்ஷ வாகனத்தில் எழில் குமரன்
ஞாயிறன்று கிரி வலம் செய்தால் சிவ பதம் நல்கும்.
திங்களன்று கிரி வலம் செய்தால் உலகை ஆளக்கூடிய வல்லமை உண்டாகும்.
செவ்வாயன்று கிரி வலம் செய்தால் ஏழ்மை நீங்கும், கடன் அகலும், சுபிட்சம் உண்டாகும், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை.
புதனன்று கிரி வலம் செய்தால் கலைகளில் தேர்ச்சி அடைவர்.
வியாழனன்று கிரி வலம் செய்ய ஞானிகளுக்கு ஒப்பாவர்.
வெள்ளியன்று கிரி வலம் செய்ய விஷ்ணுபதம் நல்கும்.
சனியன்று கிரி வலம் செய்ய நவக்கிரக வழிபாட்டுப்பலன் கிட்டும்.
கிரிவலம் செய்யும் போது அந்த நாளுக்குரிய ஆடை அணிந்து அல்லது ஆடை தானம் செய்வது சிறந்த பலனைத் தரும்.
ஞாயிறு- ஆரஞ்சு,
திங்கள் -வெள்ளை,
செவ்வாய் - சிவப்பு,
புதன் - பச்சை,
வியாழன் - மஞ்சள்,
வெள்ளி - வெளிர் நீலம்,
சனி - கரு நீலம் அல்லது கறுப்பு நிற ஆடைகள் அணிவது நல்லது.
திருக்கார்த்திகைப்பெருவிழா
No comments:
Post a Comment