Saturday, December 31, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 20

                                                               பெரியானை வட்டம் 






கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார் 
சங்கடம் இன்றி ஏறிடுவார் 

இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    21     22     23     24     
 

ஐயனின் சன்னிதானம் அமைந்துள்ள சபரிமலை ஏறுவதற்கு முன்னர் தங்கும் தாவளம் பம்பா பள்ளத்தாக்கில் உள்ள பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் ஆகும். கங்கை தி போல் புண்ணிய தியாம் பம்பையில் முதலில் நீராடுகின்றனர். பம்பை தி ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் புண்ணிய தியாகும். ஐயப்பன் பாலனாக பந்தளராஜவிற்கு கிடைத்தது பம்பையின் கரையில்தான். மகிஷியை வதம் செய்ய ஐயன் காட்டிற்குள் வந்த போது தேவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் ஐயனுக்கு பொன் சிம்மாசனம் அமைத்து அதில் மணிகண்டனை அமர்த்தி அபிஷேகம் செய்வித்து பூசை செய்தனர் அந்த அபிஷேக தீர்த்தம் பம்பையில் ஓடியது. இன்றும் பம்பை பொன்னம்பல மேட்டில்தான் உருவாகின்றது.





பம்பையாற்றைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவான புளிச்சமலையில்  உற்பத்தியாகி ஆலப்புழை, பத்தனம்திட்டா வழியாக 176 கி.மீ தூரம் ஓடி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புன்னமடா, வேம்பநாடு ஏரியில் கலக்கின்ரது. கேரளத்தின் மூன்றாவது பெரிய நதி பம்பை.

புராணங்களின் படி சபரிமலைக் காட்டில் மதங்க முனிவர் தவம் செய்து வந்தார். இவரது சிஷ்யைதான் சபரி. இவரது பெயர்தான் சபரிம்லைக்கு சூட்டப்பட்டுள்ளது. சபரியைப் போலவே நீலி என்ற பெண்ணும் அவரது ஆசிரமத்தில் சேவை செய்து வந்தார். இராமரும், இலக்குவனும் சீதையை தேடி வரும் போது அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் பாக்கியம் இவருக்கு கிட்டியது. அப்போது இவர் இராமபிரானிடம் அடியாளுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று பிரார்தித்தாள்.  அதற்கு இராமபிரான், பெண்ணே! பூமியில் மனிதர்கள் பிறப்பது, புண்ணிய செயல்கள் புரிவதற்காகத்தான். நீ இந்த பூலோகத்தில் செய்ய வேண்டிய சேவை இன்னும் நிறைய இருக்கின்றது. உன்னை ஒரு நீருற்றாக மாற்றுகின்றேன். அதில் பொங்கி பெருகும் நீர் அருவியாக விழுந்து நதியாக பெருகி ஓடும். இந்த பூலோகம் உள்ள வரையில் நீ நதியாய் ஓடி, மக்களின் பசியும், தாகமும் போக்குவாய். பூலோகம் அழியும் போது நீ என் திருவடி வந்து அடைவாய். நீ நதியாய் பெருகி ஓடும் போது ஏற்படும் ஒலி இக்காடு முழுவதும் பம்பை ஒலி போல் கேட்கும். எனவே மக்கள் உன்னை பம்பை என்று செல்லப் பெயரிட்டு அழைப்பர். இங்கிருக்கும் தர்மசாஸ்தாவை தரிசிக்க வரும் பக்தர்கள் உன்னிடட்தில் பிதுர் காரியம் செய்து முன்னோரை மகிழ்விப்பர். உன் ஒரு துளி  அந்த பக்தர்கள் மீது பட்டாலும்  அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று வரமளித்தார்.
   

இராவண வதம் முடிந்து திரும்பி வரும் போது இராமபிரான் பம்பையாற்றின் கரையில் தசரதருக்கு பித்ரு காரியம் செய்தார்.  உதயணன் என்ற கொள்ளைக்காரன் மீது ஐயப்பன் தனது படைகளுடன் தாக்குதல் நடத்திய போது இறந்த படை வீரர்களின் ஆத்மசாந்திக்காக, ஐயப்பன் பம்பை நதிக்கரையில் பிதுர்கடன் நிறைவேற்றினார். இவ்வாறு இராமராலும், ஐயப்பனாலும் பிதுர்கடன் செய்யப்பட்ட புண்ணிய நதியான  பம்பையில்  பல பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் அளித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.




பம்பா விளக்கு 

பம்பையின் கரையில் சக்தி பூசை செய்கின்றனர். அன்னதானப் பிரபுவான ஐயப்பன் அன்னதானத்தில் இந் பம்பா சதய விருந்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். எனவே பல பக்தர் குழாங்கள் பம்பையின் கரையில் தங்கி  அன்னதானம் செய்கின்றனர். கன்னி சாமிகளுக்கு ஒரு அருமையான பாடம் இங்கு கிடைக்கின்றது. ஐயப்பன் தன் வலதிருக்கரத்தினால் காட்டும் முத்திரை அன்று சனகாதியர்களுக்கு மௌன குருவாக சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக காட்டிய சின்முத்திரை ஆகும். ஜீவான்மாகிய நாம் பரமாத்வாகிய இறைவனுடன் ஒன்ற வேண்டுமென்றால்  விட வேண்டியவை மூன்று மலங்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட வேண்டும். எனவே அடியார்கள் உண்ட இலையில் படுத்து உருளும் வழக்கம் முன்பு இருந்தது, இன்று இலைகளை தலையில் சுமந்து சென்று பம்பையில் விட்டுவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்ற அகங்காரத்தையும், தனது என்ற மமகாரத்தையும் விட்டொழிக்கின்றனர். மேலும் ஸ்தூல,  சூஷ்ம, காரண தேகாபிமானத்தையும் ஒழித்துக் கட்டுகின்றனர்.


பம்பையில் புனித நீராடல்



த்தாவளத்தில் தங்குவதற்கேற்ற பல விரிகள் உள்ளன. குளிப்பதற்கும், காலைக் கடன்களை முடிப்பதற்கும்   வசதி மற்றும் மூலிகை குடிநீர் வசதி, மற்றும்  எப்போதும் அன்னதானம் ந்து கொண்டிருப்பதால் உணவிற்கும் பஞ்சமில்லை எனவே பெருவழியில் வரும் அனைத்து பக்தர்களும் இங்கு தங்கிச் செல்கின்றனர்.

பெரியானை வட்டத்தில் தங்கி இருக்கும் போது கன்னி சாமிகள் 108  அடுப்புகளில் சாம்பல் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை வஸ்திரகாயம் செய்து  அதை பம்பா பஸ்மம் என்று பயன்படுத்துகின்றனர். 

பம்பையின் கரையில் தங்கி இருக்கும் போது கன்னி சுவாமிகள் பம்பா விளக்கும் ஏற்றுகின்றனர். மூங்கில் அல்லது குருத்தோலைகளால் ஒரு மிதக்கும் தேர் போன்ற அமைப்பில் ஒரு சிறு தோணி செய்து அதை வண்ண வண்ண  காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து அதில் விளக்கேற்றி இரவில் பம்பையில் மிதக்க விடுகின்றனர். மகர ஜோதிக்கு முதல் நாள் சிறப்பாக நூற்றுக்கணக்கான பம்பா விளக்குகள்  ஏற்றப்படுகின்றன. அதைக் காண்பதே  ஒரு பெரிய பாக்கியம்.


மகர விளக்கிற்கு முன்னர் ஆலங்காட்டு குழுவினரும், அம்பலபுழை குழுவினரும் எரிமேலியில் பேட்டை துள்ளிய பின்னர் பெரிய பாதை வழியாக பம்பையை அடைந்து அருமையான பம்பா சதய   அன்னதானம் செய்கின்றனர். இரவில் பம்பா விளக்கும் சிறப்பாக ந்டைபெறுகின்றது.




சிறப்பு தரிசன  சீட்டு  வழங்கும் இடம் 

(பம்பையில் வந்த வெள்ளத்தினால் இக்கட்டிடம் முழுதுமாக அடித்து செல்லப்பட்டு விட்டது)



பம்பைக் கரையில் 




இங்கு நடக்கும் அன்னதானத்தில் ஐயப்பசுவாமி ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம்.  என்வே அனைத்து  குழுக்களும் அன்னதானம்  செய்கின்றனர். 

பெரியானை வட்டத்தில் தங்கும் போது அடுத்து மலையேறுவதற்கான ஓய்வும் கிடைக்கின்றது அடுத்து ஐயனை தரிசனம் செய்வதற்கு முன் பம்பா கணபதியை தரிசிக்கலாம் அன்பர்களே. 
குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

//இங்கு நடக்கும் அன்னதானத்தில் ஐயப்பசுவாமி ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். என்வே அனைத்து குழுக்களும் அன்னதானம் செய்கின்றனர்.//

மெய்சிலிர்க்கும் அனுபவம். ஐயப்பசுவாமி அனைவருக்கும் இந்த புதுவருடத்தில் நலங்களை அருள வேண்டும்.

புதுவருட வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.

S.Muruganandam said...

சுவாமி சரணம். தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஐயன் அனைத்து நலங்களையும், வளங்களையும் அருளட்டும்.