Friday, December 29, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -17

பெரியானை வட்டம் 


இப்பதிவுகளையும்  காணலாமே   : 

       4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  18   19   20   21

கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார் 
சங்கடம் இன்றி ஏறிடுவார் 

ஐயனின் சன்னிதானம் அமைந்துள்ள சபரிமலை ஏறுவதற்கு முன்னர் தங்கும் தாவளம் பம்பா பள்ளத்தாக்கில் உள்ள பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் ஆகும். கங்கை தி போல் புண்ணிய தியாம் பம்பையில் முதலில் நீராடுகின்றனர். பம்பை தி ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் புண்ணிய தியாகும். ஐயப்பன் பாலனாக பந்தளராஜவிற்கு கிடைத்தது பம்பையின் கரையில்தான். மகிஷியை வதம் செய்ய ஐயன் காட்டிற்குள் வந்த போது தேவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் ஐயனுக்கு பொன் சிம்மாசனம் அமைத்து அதில் மணிகண்டனை அமர்த்தி அபிஷேகம் செய்வித்து பூசை செய்தனர் அந்த அபிஷேக தீர்த்தம் பம்பையில் ஓடியது. இன்றும் பம்பை பொன்னம்பல மேட்டில்தான் உருவாகின்றது.
இராமபிரான் பம்பையாற்றின் கரையில் தசரதருக்கு பித்ரு காரியம் செய்தார் என்பதால்  பல பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் அளித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.பம்பா விளக்கு 

பம்பையின் கரையில் சக்தி பூசை செய்கின்றனர். அன்னதானப் பிரபுவான ஐயப்பன் அன்னதானத்தில் இந் பம்பா சதய விருந்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். எனவே பல பக்தர் குழாங்கள் பம்பையின் கரையில் தங்கி  அன்னதானம் செய்கின்றனர். கன்னி சாமிகளுக்கு ஒரு அருமையான பாடம் இங்கு கிடைக்கின்றது. ஐயப்பன் தன் வலதிருக்கரத்தினால் காட்டும் முத்திரை அன்று சனகாதியர்களுக்கு மௌன குருவாக சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக காட்டிய சின்முத்திரை ஆகும். ஜீவான்மாகிய நாம் பரமாத்வாகிய இறைவனுடன் ஒன்ற வேண்டுமென்றால்  விட வேண்டியவை மூன்று மலங்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட வேண்டும். எனவே அடியார்கள் உண்ட இலையில் படுத்து உருளும் வழக்கம் முன்பு இருந்தது, இன்று இலைகளை தலையில் சுமந்து சென்று பம்பையில் விட்டுவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்ற அகங்காரத்தையும், தனது என்ற மமகாரத்தையும் விட்டொழிக்கின்றனர். மேலும் ஸ்தூல,  சூஷ்ம, காரண தேகாபிமானத்தையும் ஒழித்துக் கட்டுகின்றனர்.


பம்பையில் புனித நீராடல்இத்தாவளத்தில் தங்குவதற்கேற்ற பல விரிகள் உள்ளன. குளிப்பதற்கும்,  மல ஜலம் கழிப்பதற்கேற்ற  வசதி மற்றும் மூலிகை குடிநீர் வசதி, மற்றும் அன்னதானம் ந்து கொண்டிருப்பதால் உணவிற்கும் பஞ்சமில்லை எனவே பெருவழியில் வரும் அனைத்து பக்தர்களும் இங்கு தங்கிச் செல்கின்றனர்.

பெரியானை வட்டத்தில் தங்கி இருக்கும் போது கன்னி சாமிகள் 108  அடுப்புகளில் சாம்பல் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை வஸ்திரகாயம் செய்து  அதை பம்பா பஸ்மம் என்று பயன்படுத்துகின்றனர். 

பம்பையின் கரையில் தங்கி இருக்கும் போது கன்னி சுவாமிகள் பம்பா விளக்கும் ஏற்றுகின்றனர். மூங்கில் அல்லது குருத்தோலைகளால் ஒரு மிதக்கும் தேர் போன்ற அமைப்பில் ஒரு சிறு தோணி செய்து அதை வண்ண வண்ண  காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து அதில் விளக்கேற்றி இரவில் பம்பையில் மிதக்க விடுகின்றனர். மகர ஜோதிக்கு முதல் நாள்  சிறப்பாக நூற்றுக்கணக்கான பம்பா விளக்குகள்  ஏற்றப்படுகின்றன. அதைக் காண்பதே  ஒரு பெரிய பாக்கியம்.
சிறப்பு தரிசன  சீட்டு  வழங்கும் இட்ம் பம்பைக் கரையில் பெரியானை வட்டத்தில் தங்கும் போது அடுத்து மலையேறுவதற்கான ஓய்வும் கிடைக்கின்றது அடுத்து ஐயனை தரிசனம் செய்வதற்கு முன் பம்பா கண்பதியை தரிசிக்கலாம் அன்பர்களே. 
குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

2 comments:

தனிமரம் said...

அருமையான விளக்கம் ஐயா. தொடர்கின்றேன்.

Muruganandam Subramanian said...

சுவாமி சரணம் , தொடர்ந்து வாருங்கள்.