Monday, January 1, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -18

பம்பா கணபதி தரிசனம் 

அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு  (2018)  வாழ்த்துக்கள்


இப்பதிவுகளையும்  காணலாமே   : 

       4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17   18   19   20   21

பெருவழியில் செல்லும் பக்தர்களும், வாகனம் மூலம் பம்பை வந்து சேரும் பக்தர்களும் நீலிமலையில் ஏறும் போது முதலில் பம்பா கணபதியை வழிபடுகின்றனர். அதற்கு முன்னர் இணையம் மூலமாக தரிசனத்திற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் முன்பதிவு நிலையத்திற்கு சென்று அதற்கான  அனுமதி சீட்டை  பெற்றுக்கொள்கின்றனர். பெருவழியில் வருபவர்கள் சுவாமியை தரிசனம் செய்யும் வன்ணம் சபரிமலையிலும் செய்தால் ல்லது. திருப்பதியில் மலையேறி வருபவர்களுக்கு தனி வரிசை உள்ளது போல இங்கும் அமுல்படுத்தலாம். அதற்கான அடையாள சீட்டுகளை கரிமலை உச்சியில் அல்லது இறக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வழங்கலாம்..



பம்பா கணபதி சன்னதி


அனைத்து பக்தர்களும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக செல்வதற்கு முன் பம்பா கணபதியை தரிசிக்கின்றனர். இவ்வளாகத்தில் ஆதி மூல கணபதி, பகவதி (பார்வதி), இராமர் மற்றும் அனுமன் சன்னதிகள் இங்கு  அமைந்துள்ளன. அனுமன் இராமன் சன்னதிக்கிடையில் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு ஏதுவாக  மண்டபம் அமைத்துள்ளனர்.
இராமாயண காலத்தில் இராமபிரான் சபரிக்கு அருளிய போது அனுமனுக்கு கலிகாலத்தில் என்னை பார்த்தவாறு இங்கு எழுந்தருளியிருப்பாய் என்று அருளியபடி அனுமன் சபரி மலை ஐயப்பனை பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். 


இராமர் -  அனுமன் சன்னதிகள் 


கணபதியை தரிசித்து இருமுடிக் கட்டில் சுமந்து வந்த ஒரு தேங்காய்களில் ஒன்றை இங்கே சிதறு காயாக உடைத்து விட்டே பக்தர்கள் மலையேறுகின்றனர். அனுமன்,  இராமபிரான் கொடுத்த வரத்தின்படி ஐயப்பனைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளார். தற்போது பம்பையில் கட்டு நிறைப்பதற்கான வசதிகள் உள்ளன.  பந்தளராச வம்சத்தினரின் பிரதிநிதிகளை வணங்கி, தட்சணை கொடுத்து அனுமதி பெற்றுக்கொண்டு நீலி மலை ஏறத்தொடங்குகின்றனர்.





ஐயப்பன் ஜனனம் 

வன் புலி வாகனன்


பம்பையிலிருந்து சன்னிதானம் வரை சென்று வர டோலி வசதியும்  உள்ளது. முடியாதவர்கள்  மற்றும் வயதானவர்கள் இவ்வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். மலையேறும் போது ஐயப்பன் ஜனனம், வன்புலி வாகனனாக ஐயன் வரும் சுதைச்சிற்பங்களை தரிசித்துக்கொண்டே நீலி மலையேற்றத்தைத் துவக்குகின்றோம். 



சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம்: வெளிப்படையாக விநாயருக்கு சிதறு தேங்காய் உடைப்பது என்பது நம்து விகனங்கள்(தடைகள்) அனைத்தும் அந்த தேங்காய் உடைந்து சிதறுவது போல் மறையும் என்று பொருள் படும், ஆனால் அதன் உண்மையான தாத்பரியம் அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே உள்ள அமிர்தரசமாகிய இளநீர் இருக்கும் என்பதை உணர்த்துகின்றது. 




குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: