Sunday, January 7, 2018

சுவாமியே சரணம் ஐயப்பா -20

சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி

சபரிமலைதனை ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதி முகம் கண்டே வணங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா



இப்பதிவுகளையும்  காணலாமே 

        4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20   21



இரவு நேரக் காட்சி

மரக்ககூட்டத்தை  தாண்டியவுடன் நடைப்பந்தல் வருகின்றது. இம்மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் பதினெட்டாம் படி ஏறுவதற்காக பக்தர்கள் காத்து நிற்கின்றனர். இம்மண்டபத்தில் ஒரு மேடை உள்ளது அம்மேடையில் தர்மசாஸ்தா, வன் புலி வாகனன் மற்றும் கணபதி சிற்பங்கள் அமைத்துள்ளனர். நடைப்பந்தலில் இருந்து குழு குழுவாக பதினெட்டாம் படியேற  பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை சன்னிதானத்தை பார்த்தால் ஒரு கோட்டை போலவே அமைந்துள்ளது.  சன்னிதானத்தை அடைய சத்தியமான் பொன்னு பதினெட்டாம் படிகளில் ஏறிச் செல்லவேண்டும். இப்பதினெட்டு படிகளும் பதினெட்டு தேவர்கள் ஐயனை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்களின் விரதத்திற்கேற்ப பலன்களை வழங்குகின்றனர். 

பதினெட்டு படிகளும் தேவர்கள் என்பதால் சபரிமலையில் படிபூசை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. முறையாக விரதம் இருந்து இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படிகளில் ஏறிச் செல்ல முடியும்.  முற்காலத்தில் எத்தனையாவது தடவை சபரிமலை யாத்திரையோ அப்படியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இருந்தது. தேவ பிரசனம் கேட்டு பின் படிகளை பாதுகாகக பஞ்ச லோக கவசம் சார்த்தியபின் தற்போது படிகளில் தேங்காய் உடைப்பது இல்லை. பெரிய  கருப்புசாமி சன்னதிக்கு அருகில் உள்ள  சுவற்றில் தேங்காய் உடைத்து பதினெட்டாம் படி ஏறி ஐயனை தரிசித்து விட்டு பின் திரும்பும் போது சிறிய கருப்புசாமியின் சன்னதிக்கு அருகில் உள்ள சுவற்றில் தேங்காய் உடைத்து யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.. 

கருப்பசாமி சன்னதிகள், பதினெட்டாம் படிகள்

பதினெட்டு படிகள் கொண்ட வகையில் சபரிமலை கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தத்துவ விளக்கம் கொண்டது. மனிதனிடம் உள்ள தவறான  குணங்களை காட்டவே அப்படி அமைக்கப்பட்டுள்ளனபுறக்காரணங்கள் ஐந்து வகைப்படும். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகும். அககாரணங்கள்  நான்கு வகைப்படும். அவை மனம், புத்தி, சித்தி, அகங்காரம் ஆகும். இதில் மனம் சில சலனங்களுக்கு உட்படுகிறதுஅவை கோபம், காமம், குரோதம், மதம்மாச்சரியம், லோபம் என்ற ஆறு குணங்கள் உடையது. அடுத்தது ஞானம். முன்பு குறிப்பிட்ட தீய குணங்கள் நீக்கிவிட்டால் ஞானம் தோன்றும். அடுத்து சத்தியம்அதுதான் நிறைவு. அதற்குபிறகு சுவாமி ஐயப்பனோடு நாம் இணைந்து விடலாம்.

காமம்பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு துன்பமே ஏற்படுகிறது.

குரோதம்
ஆத்திரம் எனப்படும் கோபமே அழிவுக்கு காரணமாகிறது.

மதம்
வெறி வளர்ப்பதால் ஆண்டவனே நம்மை வெறுத்து விடுவார்.

லோபம்பேராசை ஏற்படுத்தி ஆண்டனை அடைய முடியாமல் செய்யும்.

சாத்வீகம்எதையும் எண்ணாது கர்மம் செய்தல்.

அகந்தை என்னால்தான் என்று எண்ணி இல்லாமல் போகும்.

டம்பம்பெருமை பேசியே நான் எனும் சிந்தனையை வளர்க்கலாகாது.

ராஜஸம்: அகங்காரம் எனும் அசுர குணம்.

தாமஸம்அற்பத்தனமான புத்தியை பற்றி கொண்டிருப்பது.

ஞானம்: பிறவி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுதல்.

மனம்: இறைவனை சதா நினைக்க வேண்டும்.

அஞ்ஞானம்உண்மை பொருளை அறியாமல் இருப்பது.

கண்இறைவனை காண துடிப்பது.

காதுபரநாதத்தை கேட்டு பரவசமடைவதற்கு.



கருப்பசாமி 

பதினெட்டாம் படிகளின் இருபக்கமும் ஐயனின் பரிவார தேவதைகளான பெரிய கருப்பசாமியும்,( வலிய கடுத்தசாமி) கருப்பாயி அம்மன் சமேத சிறிய கருப்பசாமியும் (கொச்சு கடுத்தசாமி) அருள் பாலிக்கின்றனர். இருமுடி தலையில் உள்ள பகதர்களை கருப்பசாமி காக்கின்றார். அடர்ந்த வனத்தில் நமக்கு காவல் கருப்பசாமிதான். எனவே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்னர் இவர்களை வணங்கி இவர்களின் உத்தரவைப் பெற்றே  பதினெட்டாம் படியில் ஏறவேண்டும். முதலில் வலது காலை வைத்து சரண கோஷத்துடன் ஐயனை தரிசிக்கப் போகின்றோம், விரதப் பலனைப் பெறப்போகிறோம்  என்று ஆனந்தமாக சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி ஏறுகின்றனர் பக்தர்கள். 



பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி-விஷாத யோகம்

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.
இரண்டாம் படி- சாக்கிய யோகம்
பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய 
யோகம்.
மூன்றாம் படி -கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி -ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி -சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது.
ஆறாம் படி -தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி -பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி -அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி -ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி -விபூதி யோகம்,
அழகு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது.
பதினொன்றாம் படி -விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி -பக்தி யோகம்
இன்பம்-துன்பம், ஏழை-பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது.
பதிமூன்றாம் படி -க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல்.
பதினான்காம் படி -குணத்ர விபாக யோகம்
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.
பதினைந்தாம் படி -தெய்வாகர விபாக யோகம்
நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
பதினாறாம் படி -சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது.
பதினேழாம் படி -சிரித்தாத்ரய விபாக யோகம்
சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது.


பதினெட்டாம் படி -மோட்ச சன்னியாச யோகம்
உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்த பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம்.
சத்த்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!



\\
ஹோம குண்டம்

பதினெட்டாம் படிக்கு முன்னர் இருக்க்கின்ற இம்மரத்தில்தான் தனக்கு எங்கு கோவில் கட்டவேண்டும் என்று பந்தள இராஜாவுக்கு உணர்த்த மணிகண்டன் விடுத்த அம்பு வந்து தைத்த இடம் ஆகும்.  வரும் பதிவில் ஐயனின் திவ்ய தரிசனம் பெறலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: