Sunday, September 4, 2016

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

பல்வேறு ஆலயங்களில்  அருள்பாலித்த கணேசரின்  அருட்கோலங்கள் 

தங்க கவசத்தில் விநாயகர்  

வைர அங்கியில் லம்போதரன் 

அற்புத கீர்த்தி வேண்டின்ஆனந்த வாழ்க்கை வேண்டின் 
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின் 
கற்பக மூர்த்தி தெய்வக் 
களஞ்சியத்திருக்கை சென்று 
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை.

பிள்ளையார் பட்டி என்னும்பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்திருவருள் வழங்கும் தெய்வம் 
கள்ளமில் பக்தர் தந்தை கற்பக மூர்த்தி போற்றி. -      கவிஞர் கண்ணதாசன்



பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  - கோலம் 
செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா! - ஔவையார் 







சித்தி புத்தி விநாயகர் 
( கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி போன்ற அலங்காரம்) 



மூஷிக வாகனத்தில் அருள் பாலிக்கும் ஏக தந்தர்






எங்கள் இல்லத்தில் அருள் பாலிக்கும் விநாயகர் 




விநாயகனே வெவ்வினையை  வேரறுக்கவல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில்  பணிமின் கனிந்து 






விநாயகர் சதுர்த்தியன்று கொலு 



உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்

நவரத்ன விநாயகர்கள் 



அம்மையப்பருடன் ஞானப்பழம் பெற்ற கணபதி 


அஷ்ட நர்த்தன கணபதி 



பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை

எள்ளு பொரித்த பொரியும் இடித்தவல் தன்னிற்கலந்து
வள்ளிக்கிழங்கை திருத்தி வாழைப்பழத்தை யுரித்து
உள்ளியபாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத்திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே

ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
நூறுகுடலை மாம்பழம் நொடிக்குமளவி லமுது செய்வல்ல பிள்ளாய்
ஆடல் பாடல் சங்கீதம்அடியேன் காண
நின்றாடாயே சண்டுபெருச்சாளி மீதேறிச்சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாயஇணங்கிய கொம்பேரிண்டூத அண்டத்தமரர் துதிக்கஅடைக்கலங்காத்த பிரானாரே
குண்டைக்கணபதி நம்பிகுதங்கையாற் சப்பாணி கொட்டாயே

பொழுது விடிந்துபொழுதுபோய்திருமலை மேலேற வேண்டும்
ஏறிமலர்ந்துபூ கொய்ய வேண்டும்கொய்து திருமுடி சாத்தவேண்டும் சாத்தியே கைகட்டி நிற்க வேண்டும்நின்று திருவிளக்கேற்ற வேண்டும் ஏற்றி அரகரா என்ன வேண்டும்

ஐயா கணபதி நம்பி ஆயிரநாமமுடையாய்பொய்யில்லாத மெய்யுரைப்பாய் போனதெள்ளாம் தருவாய்வெள்ளித்தாம்பூலம் பூசி வைத்து வேண்டும்படியே யிட்டுண்டுபல்ளிற்கேற்ப நதவாய் பாக்கியம் செய்த பிள்ளாய்பிள்ளாய் பிள்ளாய் பேருடையீர் பிரமனெனும் பேருடையீர்பிள்ளைகள் தங்கள் பிரானாரே இருந்தீரே பிரானேரே

எங்கள் மனது கலங்காதோ பள்ளித்தடுக்கும் கையேடும்படிக்கும் சுவடியும் பரித்தெடுத்து துள்ளித்திரியும் கால்தன்னைசுகமே நிறுத்தும் பிரானாரே ஒடாதே ஒளியாதேஇட்டதே சோறும் பெற்றாதே கறியும் உண்டு
தூங்கி பூசை முடித்துவெள்ளிமுளைக்கப் பள்ளிக்கு வாரும்.


கடலை மிட்டாய் பிள்ளையார்



No comments: