Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts

Sunday, September 4, 2016

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

பல்வேறு ஆலயங்களில்  அருள்பாலித்த கணேசரின்  அருட்கோலங்கள் 

தங்க கவசத்தில் விநாயகர்  

வைர அங்கியில் லம்போதரன் 

அற்புத கீர்த்தி வேண்டின்ஆனந்த வாழ்க்கை வேண்டின் 
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின் 
கற்பக மூர்த்தி தெய்வக் 
களஞ்சியத்திருக்கை சென்று 
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை.

பிள்ளையார் பட்டி என்னும்பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்திருவருள் வழங்கும் தெய்வம் 
கள்ளமில் பக்தர் தந்தை கற்பக மூர்த்தி போற்றி. -      கவிஞர் கண்ணதாசன்



பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  - கோலம் 
செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா! - ஔவையார் 







சித்தி புத்தி விநாயகர் 
( கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி போன்ற அலங்காரம்) 



மூஷிக வாகனத்தில் அருள் பாலிக்கும் ஏக தந்தர்






எங்கள் இல்லத்தில் அருள் பாலிக்கும் விநாயகர் 




விநாயகனே வெவ்வினையை  வேரறுக்கவல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில்  பணிமின் கனிந்து 






விநாயகர் சதுர்த்தியன்று கொலு 



உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலவனின் கருத்தில் நின்றாய்

நவரத்ன விநாயகர்கள் 



அம்மையப்பருடன் ஞானப்பழம் பெற்ற கணபதி 


அஷ்ட நர்த்தன கணபதி 



பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை

எள்ளு பொரித்த பொரியும் இடித்தவல் தன்னிற்கலந்து
வள்ளிக்கிழங்கை திருத்தி வாழைப்பழத்தை யுரித்து
உள்ளியபாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத்திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே

ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
நூறுகுடலை மாம்பழம் நொடிக்குமளவி லமுது செய்வல்ல பிள்ளாய்
ஆடல் பாடல் சங்கீதம்அடியேன் காண
நின்றாடாயே சண்டுபெருச்சாளி மீதேறிச்சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாயஇணங்கிய கொம்பேரிண்டூத அண்டத்தமரர் துதிக்கஅடைக்கலங்காத்த பிரானாரே
குண்டைக்கணபதி நம்பிகுதங்கையாற் சப்பாணி கொட்டாயே

பொழுது விடிந்துபொழுதுபோய்திருமலை மேலேற வேண்டும்
ஏறிமலர்ந்துபூ கொய்ய வேண்டும்கொய்து திருமுடி சாத்தவேண்டும் சாத்தியே கைகட்டி நிற்க வேண்டும்நின்று திருவிளக்கேற்ற வேண்டும் ஏற்றி அரகரா என்ன வேண்டும்

ஐயா கணபதி நம்பி ஆயிரநாமமுடையாய்பொய்யில்லாத மெய்யுரைப்பாய் போனதெள்ளாம் தருவாய்வெள்ளித்தாம்பூலம் பூசி வைத்து வேண்டும்படியே யிட்டுண்டுபல்ளிற்கேற்ப நதவாய் பாக்கியம் செய்த பிள்ளாய்பிள்ளாய் பிள்ளாய் பேருடையீர் பிரமனெனும் பேருடையீர்பிள்ளைகள் தங்கள் பிரானாரே இருந்தீரே பிரானேரே

எங்கள் மனது கலங்காதோ பள்ளித்தடுக்கும் கையேடும்படிக்கும் சுவடியும் பரித்தெடுத்து துள்ளித்திரியும் கால்தன்னைசுகமே நிறுத்தும் பிரானாரே ஒடாதே ஒளியாதேஇட்டதே சோறும் பெற்றாதே கறியும் உண்டு
தூங்கி பூசை முடித்துவெள்ளிமுளைக்கப் பள்ளிக்கு வாரும்.


கடலை மிட்டாய் பிள்ளையார்



Thursday, September 17, 2015

விநாயகர் கவசம்

விநாயகர் கவசம்


அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்



வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்த்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து
 காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க


தடவிழிகள் பாலசந்திரனார் காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
தாலங் கணக்கிரீடர் காக்க
அவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க



அனி வாக்கை விநாயகர் தான் காக்க
அவர் நகை துன்முகர் காக்க
அள்ளெழிற் செங்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறாதிளங்கொடிபோல் வளர்மணி நாசியைச் சித்திதார்த்தர் காக்க



காமருபூமுகங் தன்னை குணேசர் அனி காக்க
வாமமுறும் இரு தோளும் வயங்கு கந்தபூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணி முலை விக்கினவிநாசன் காக்க
இதயதன்னை தோமகலுங்  கணநாதர் காக்க



வகட்டினைத் துலங் கேரம்பர் காக்க
பக்கமிரண்டையுங் தராதரர் காக்க
பிருடத்தை பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க
விளங்கிஇலிங்கம் வியாளபூடணர் தாம் காக்க

தக்குய்ய தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க
ஊருமை  மங்கள மூர்த்தி உவந்து காக்க
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க


இருபதம் ஏகதந்தர் காக்க
வாக்கரங்கி பிரப்பிரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய்  ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க


கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க
அக்கினியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென்னாசை காக்க


மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும் திக்கதனில் காக்க
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க 

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க

இரவினுங்  சந்தி இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க

இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினிப் பேய் இவையாதி உயிர் திறத்தால் வருதுயரும் முடிவிலாத வேகமுறு  பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்து காக்க

மதி ஞானம் தவ தானம் மானம் ஒளி புகழ் குலம் வண் சரீர முற்றும் பதிவான தன தானியங்  கிரகம் மனைவி மைந்தர் பயில் நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க



காமர் பவுத்திரர் முன்னான விதியாருங்  சுற்றமெலாம் மயூரேசர் 
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றி சீவிதங்  கபிலர் காக்க
கரியாதி யெலாம் விகடர் காக்க



என்றிவ்வாறிதனை  முக்காலமும் ஓதிடினும் பால் இடையூறொன்னும்
ஒன்றுறா முனிவர்காள் அறிமின்கள் யார் ஒருவர் ஓதினாலும்
மன்றவாங்  கவர் தேகம்  பிணியற வச்சிர தேகம் ஆகி மன்னும்.