ஆறாம் திருநாள் உற்சவம்
காலை உற்சவத்திற்குஎழுந்தருளும் பெருமான்
ஆறாம் திருநாள் காலை பச்சை மயில் வாகனத்திலும் இரவு யாணை வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சிவ சுப்பிரமணிய சுவாமி.
காலை பச்சை மயில் வாகன சேவை
தெய்வ நாயகி
அகில புவன சக்கரவர்த்தியாக வெள்ளை யானையாம் ஐராவதத்தில் எழுந்தருளுகின்றார் முருகப்பெருமான். தன் மகள் தெய்வ நாயகிக்கு ஐராவதத்தை அனுப்புகிறான் இந்திரன் எனவே மயில், ஆட்டுக்கிடாவுடன் யாணையும் முருகனுக்குரிய வாகனம் ஆகும். இவ்வாலயத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகருக்கு முன் யாணைதான் வாகனமாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
சுவாமி கையில் வேலை பிடித்திருக்கும் அழகைப் காணுங்கள், அதுவே அங்குசம் ஆக தெரிகின்றதா? தேவியர் இருவர் காலை மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் அந்த அழகையும் படத்தை பெரிது படுத்தி காணுங்கள் அன்பர்களே.
மாலை யாணை வாகன சேவை
6 comments:
அருமையான படங்கள்... நன்றி...
this photo's are 2012. not 2013
நன்றி தனபாலன்
ஆம் பெயரில்லா நண்பரே. 2009 முதல் எடுத்த புகைப்படங்கள் இப்பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து இடுகைகளையும் பார்த்தால் தங்களுக்கு உண்மை விளங்கும். அடியேனுடைய இடுகைகளில் இவை முதல் தடவை இடம் பெறுகின்றன.
கந்தர் அலங்காரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது ஐயா
அழகன்முருகனுக்கு அற்புத அலங்காரம்தான் LOGAN ஐயா.
Post a Comment