கொடிக்கவி பெற்ற வரலாறு
ஆருத்ரா தரிசன விழா பத்து நாள் விழாவாக வெகு சிறப்பாக தில்லையிலே நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகின்றது. ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரு சமயம் உமாபதி சிவாச்சாரியாரின் பெருமையை உலகத்தோர்க்கு உணர்த்த எம்பெருமான் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் அதன் மூலம் நமக்கு கொடிக் கவி கிடைத்தது அந்த வரலாற்றை பார்ப்போமா?
கொடிக்கவி பெற்ற வரலாறு உண்மையான பக்தி ஒன்றத்தான் நம்மிடம் இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்த்திய வரலாறு இதோ. நாம் அவர்களுள் ஒருவர் என்று எம்பெருமனாலேயே திருவாய் மலந்தருளப் பெற்ற தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவராக பிறந்தார் உமாபதி சிவம். இவர் ஆரியமும் žரிய தமிழும் பயின்று ஆனந்த கூத்தருக்கு நாள் தோறும் சித்சபையிலே முறையாக பூஜை செய்து வந்தார். திரு மறை ஞான சம்பந்த சிவாசிரிய சுவாமிகளை இவர் குருவாக ஏற்றுக் பூஜை காண்டதால் மற்ற அந்தணர்கள் இவர் மேல் அசூயை கொண்டனர் எனவே இவரை சிற்றம்பலத்தில் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. அவரும் சிதம்பரத்தை விட்டு விலகி கொற்றவன் குடிக்கு சென்று குடில் அமைத்து அங்கே எம்பெருமானுக்கு ஆத்மார்த்த பூசை செய்து வரலானார். மற்ற அந்தணர்களுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பிய மன்றில் ஆடுவார் திருவாதிரை நாளின் முதல் நாளான துவஜாரோகணத்தன்று அவர்கள் கொடி ஏற்றிய போது கொடி ஏறாமல் செய்தார். அவர்கள் எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. பின் அசரீரியாக சித்சபேசர் " நாம் கொற்றவன் குடியிலுள்ள எம் அடிமைத் தொண்டனாகிய உமாபதி சிவாச்சாரியாருடைய பூசை பெட்டகத்தே எழுந்தருளி அவரது பூசனைகளை ஏற்று வருகிறோம் அவரை அழைத்து வந்து துவஜாரோகணம் செய்யுங்கள் என்று கூறியருளினார். தங்களது தவற்றை உணர்ந்த அவர்கள் கொற்றவன்குடி சென்று உமாபதி சிவாச்சாரியாரை தக்க மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேல் இடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள்கூடும் படாகொடி கட்டினனே
என்று தொடங்கி அவர் வந்து கொடிக்கவி பாடியவுடன் கொடியும் ஏறியது தன் அன்பனின் உணமையான பக்தியையும் உலகுக்கு உணார்த்தினார் எம்பெருமான். எல்லா சிவஸ்தலங்களிலும் இதனால்தான் இன்றும் பெருவிழாவின் கொடியேற்றத்தின் போது கொடிக்கவி பாடப்படுகின்றது.
4 comments:
தில்லையம்பிரானின் மகிமையே மகிமை...
நல்ல பதிவு..
வாருங்கள் ஸ்ரீகாந்த் அவ்ர்களே. வருகைக்கு நன்றி
ஆடலரசன் சிலம்பொலி அகிலமெங்கும் ஒலிக்கட்டும்!
அவனருள் அனைத்துயிரையும் காக்கட்டும்!!
உங்கள் அருட்சேவை என்றும் தொடரட்டும்!!!
தங்கள் வருகைக்கும் நல்ல ஊக்கத்திற்கும் நன்றி வரும் நாட்களிலும் வந்து தரிசனம் பெறவும்
Post a Comment