Monday, October 14, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 10

கோசை என்றழைக்கப்படும் கோயம்பேடு ஆலயத்தின் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் மாலை குதிரை வாகன சேவை காட்சிகள் மற்றும் சூர சம்ஹாரத்தன்று முருகன் கோலம் இப்பதிவில் இடம் பெறுகின்றது. 




குதிரை வாகனத்தில் குறுங்காலீஸ்வரர்


வெளிப்பிரகாரத்தில்  அம்மன் சன்னதிக்கு எதிராக நான்கு கால் ஊஞ்சல் மண்டபம்.  இம்மண்டபத்தின் தூண்களிலும் அருமையான சிற்பங்கள் அமைந்துள்ளன. நந்தவனம், கோசாலை, கன்னி மூலையில் வில்வ விநாயகர், மடப்பள்ளி, தல மரங்களான  மா, பலா அமைந்துள்ளன. 





குதிரை வாகனத்தில் சூர சம்ஹார கோலத்தில் முருகர் 




அருகில்  கனகவல்லி தாயார் சமேத வைகுண்ட வாசப் பெருமாள்  ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில்   குசனும் லவனும் அருகில் இருக்க .வால்மீகி முனிவர்   தவம் இருக்கும்  ஒரு சிலா   விக்கிரகம்   உள்ளது.  இதன் அருகிலேயே  கர்ப்பவதியாக  சீதை நின்று கொண்டிருக்கும்  மற்றொரு சிலா விக்கிரகமும் காணப்படுகிறது. மேலும் இராமன் இலக்குவன் மற்றும் அனுமன் இல்லாமல் சீதாதேவியுடன் அருள் பாலிக்கின்றார். இராமர் மரவுரியுடனும், சீதா தேவி கோடாலிக் கொண்டையுடனும் உற்சவர்களாக எழுந்தருளியுள்ளது ஒரு சிறப்பு.


வால்மீகி முனிவர் தவம், சீதை கானகம் அடைதல், லவ குசர்கள் ஜனனம்,  அஸ்வமேத குதிரையை பிடித்து செல்லும் சுதைச் சிற்பங்கள்.



மேலும் இக்கோவிலின் பிராகாரத்தில் இரண்டு வில்வ மரங்களுக்கு இடையில் ஒரு வேப்பமரம் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கிறது. வேப்பமரம், பார்வதி. வில்வமரங்கள் சிவனும் விஷ்ணுவும், அதாவது விஷ்ணு தன் தங்கையை சிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையே இந்த மரங்கள் மெய்ப்பிப்பதாக நம்பிக்கை. திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் இம்மரங்களை ஸ்வயம்வர பார்வதி என்று வழிபடுகின்றனர்.

தல தீர்த்தம்: லவகுச தீர்த்தம். இரண்டு ஆலயங்களுக்கும் பொது.  சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம் உள்ளிட்ட பல திருவிழாக்கள் இத்திருத்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

சமயம் கிடைக்கும் போது வந்து அறம் வளர்த்த நாயகி   உடனுறை   குறுங்காலீஸ்வரரையும்,   கனகவல்லி உடனுறை வைகுண்டவாச பெருமாளையும் தரிசியுங்கள். 


Sunday, October 13, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 4

சென்னை காளி பாரியில் (  கல்கத்தா காளி  கோவில்) நடைபெற்ற துர்கா பூஜை மற்றும் விட்டலன்(பாண்டு ரங்கன் கொலுவின் சில காட்சிகள்)



கல்கத்தா காளி அன்னை 



திருக்கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்த துர்க்கையம்மன்

உடன் லக்ஷ்மி -சரஸ்வதி

விநாயகர் - கார்த்திகேயர்

(பிரபையில் சிவ பெருமான் திருமுகங்கள்)




பாண்டுரங்கன் கோலம்


பண்டரிநாதன் - ருக்குமாயி

விட்டல விட்டல பாண்டு ரங்கா
பாண்டு ரங்கா பண்டரி நாதா


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தெய்வத்தை மையப்படுத்தி கொலு வைக்கின்றனர் இவ்வருடம் பாண்டுரங்கன்.


பாண்டுரங்கன் ருக்குமாயி உற்சவர்கள்



பக்த விஜயத்தில்

கோராக்கும்பர் 



துக்காராம் 



ஞானேஸ்வர்



இப்பதிவுடன் நவராத்திரி பதிவுகள் நிறைவடைகின்றன வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றி.


Wednesday, October 9, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 3

சென்னை புலியூர் கோட்டம் பாரத்வாஜேஸ்வரம் 
சொர்ணாம்பிகை கொலு காட்சிகள்


நாராயணி அலங்காரம்  

 
கந்தவர்கள், மயில், யாழி, மயிற் பீலி விசிறி தாங்கிய தேவ மகளிர்களுடன் புஷ்பக விமானத்தில் எழிலாக அம்பாள்





அம்பாளுக்கு எதிரே நந்தி

Saturday, October 5, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 2

காரைக்கால் சௌந்தராம்பிகை சமேத கைலாசநாதர் ஆலய கொலுவை அன்பர் மனோகரன் அனுப்பியிருந்தார் அதில் சில காட்சிகள்.



செங்கோல் சிறப்பு
  






துர்காம்பிகை 


காஞ்சிபுரம் அத்திவரதர் 



ஞானசம்பந்தருக்கு பால் கொடுத்த திருநிலை நாயகி



சீர்காழி பிரம்மபுரீஸ்வரர்

Sunday, September 29, 2019

நவராத்திரி அம்மன் தரிசனம் - 1


 வடபழனி சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் ஆலயம்


சாந்தநாயகி அம்பாள்



வடபழனியாண்டவர் ஆலயம் 


 மீனாட்சி அம்பாள் 





சக்தி கொலு 

(பக்தர்கள் அளித்த பொம்மைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட  கொலு)







 பழனி மலை 








சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 9


சித்திரைத்திருவிழாவின் மூன்றாம் நாள் காலை  அதிகாரநந்தி சேவையை இப்பதிவில் கண்டு அருள் பெறலாம் அன்பர்களே.


குறுங்காலீஸ்வரர் அதிகார நந்தி சேவை 



இவ்வாலயத்தில் சுமார்  900 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அது நின்று போய் மொட்டையாக இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2000-ஆம் ஆண்டில் நூதன  7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்டு, திருப்பணிகள்  நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தூய்மையான- கம்பீரமான ஆலயம். புராண- வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே கொண்டு, கோயில் என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு, பாங்காக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலமாக குறுங்காலீஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது.   கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக 21 கல்வெட்டுகள் உள்ளன.



கற்பூர ஆரத்தி 


நாற்பது தூண்களுடன் கூடிய பிரமாண்ட முன் மண்டபம். நுழையும்போது நமக்கு வலப் புறம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காணப்படுகின்றன. சோமாஸ்கந்தர் தியாகராஜர் கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் யாகக் குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்த நிலையில் காணப்படும் குச - லவர்களின் கம்பீரமான காட்சி, கலைநயம் மிக்கது.இந்த மண்டபத்தில்தான் குசலவ புரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சந்நிதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தனி அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. ஐயன் குள்ளமாக, லவ –குசர்களுக்காக தன்னை குறுக்கிக்கொண்ட குறுங்காலீஸ்வரராக அருள் பாலிக்கின்றார். அவரை வணங்கி உட்பிரகார வலம்  வநதால் துவக்கத்தில் தெற்கு நோக்கி நடராஜர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிராகார வலம் வரும் போது சண்டிகேஸ்வரர் (கோமுக தீர்த்தம் விழும் இடத்தில்), விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சுப்ரமண்யர், சிவலிங்கம், லட்சுமி, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் ஆகியோரை  தரிசிக்கலாம். பிரகார சுவற்றில் சுதர்சன அஷ்டகம், துர்கா ஸுக்தம், சிவப்புராணம், ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் அமைத்துள்ளனர்




 அடுத்து அம்மன் சன்னதி   அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். திருவையாறில் அருள் பாலிக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள் இந்த அம்பிகை  .அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும். தீராத
 வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும்.