Friday, January 10, 2020

ஆருத்ரா தரிசனம்

இன்றைய ஆருத்ரா தரிசன அருட்கோலங்கள்


சென்னை அசோக்நகர் மல்லிகேஸ்வரர் ஆலயம்


ஓம் க்ருபா சமுத்ரம் சுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்  |

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி  ||

கருணைக் கடலானவரும்,  மங்கள திருமுகத்தினரும்,  முக்கண்ணரும்,  உமையன்னைக்கு இடது பாகத்தை அளித்தவரும், என்றும் மங்கள வடிவினரும், எல்லையற்ற  உருவங்களை தரித்தவரும், சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ருத்ரரை தியானிக்கின்றேன்.



ஆடல் வல்லான்




சிவானந்தவல்லி


மாணிக்கவாசகர்


*********************

சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் ஆலயம் 






தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி !!



ஆனந்த கூத்தர்


சிவகாம சுந்தரி


கண்ணாடி சேவை

******************

சென்னை சைதாபேட்டை சௌந்தரேஸ்வரர் ஆலயம்


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலஉலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

****************

சென்னை சைதாபேட்டை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்

விநாயகர்

அம்பலவாணர்

சண்முகர் 

மானாட  மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
 மாலாட நூலாட மறையாட திறையாட  மறைதந்த பிரமனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு னியட்ட  பாலகருமாட 
 நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட  நாட்டியப்பெண்களாட 

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை  விருதோடு  ஓடிவருவாய்
யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே


4 comments:

கோமதி அரசு said...

//வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஓடிவருவாய்
யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே//


ஆருத்ரா தரிசனம் கண்டு இந்த பாடலை பாடி நடராசனை வேண்டிக் கொண்டேன். நன்றி.


வெங்கட் நாகராஜ் said...

ஆருத்ரா தரிசனம் நாளில் பல ஊர்களிலிருந்து படங்கள். எங்களுக்கும் தரிசனம் கிடைத்த உணர்வு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.