அம்மன் நவராத்திரி அலங்கார நாட்காட்டி
அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய ஸ்வரூபணியாய் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, முதலாகி சர்வசக்தி கொண்டு அனைத்து உயிர்களையும் தாயன்பு கொண்டு காத்திடும். அன்னையாய் அருள்மழை பொழிந்து வளம் பல சேர்த்திடும் தேவியாய் தருமமிகு சென்னை, தியாகராய நகர், தென்மேற்கு போக் சாலை, வெங்கடநாராயணா சாலை சந்திப்பில் அழகாய் கோவிலமைந்து ஸ்ரீ முத்து மாரியம்மன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நற் கருணை மழை பொழியும் அன்னைக்கு புதிதாக இராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி துவங்கப்பெற்று நடைபெற்று வருகின்றது. அன்பர்கள் இத்திருப்பணியில் தங்களால் முடிந்த அளவு நன்கொடை கொடுத்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
ஆடி வெள்ளி
சிறப்பு வளையல் அலங்காரத்தில்
முத்து மாரியம்மன்
இவ்வாலயத்தில் ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, வருடப்பிறப்பு, ஆடி நான்காம் வாரம் ஆகிய பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இப்பதிவில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சென்ற வருட ஆடிப் பண்டிகையன்று எடுக்கப்பட்ட படங்கள். அலகு தரிசனமும், தீ மிதி திருவிழாவும் இவ்வாலயத்தின் சிறப்பு நிகழ்வுகள் ஆகும்.
திருவிழா சிறப்பு அலங்காரம்
காமாக்ஷி, முத்துமாரி, மீனாக்ஷி
ஆடி மாதம் நான்காம் வாரம் மூன்று நாட்கள் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. வியாழக்கிழமையன்று இரவு அம்மன் பதி அமைக்கப்ப்டுகின்றது. வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு பால் குட அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரம் . சனிக்கிழமை காலையிலும் மாலையிலும் கரக ஊர்வலம். ஞாயிற்றுக்கிழமை காலை அலகு தரிசனம். மதியன் அம்மனுக்கு கூழ் வார்த்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று மாலை தீ மிதித்தலும் இரவு சகல மேளதாளங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் முத்து மாரியம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருதலும் சிறப்பாக நடைபெறுகின்றது.
இவ்வருடம் 10-08-2017 முதல் 13-08-2017 வரை சிறப்பாக நடைபெறவுள்ளது அதில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு வேண்டுகிறேன்.
பதி அம்மன்
அம்மன் - அலகு தரிசனம்
அலகு தரிசனம்
உற்சவர் அம்மன் திருவீதிப் புறப்பாடு
இராஜ கோபுர பணி நடந்து கொண்டிருக்கின்றது. இப்பதிவை காணும் அன்பர்கள் இத்திருப்பணியில் கலந்து கொண்டு அம்மன் அருள்பெறுங்கள்.
2 comments:
படங்கள் அழகு. திருப்பணி குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா.
Post a Comment