Thursday, August 3, 2017

நவ துவாரகை யாத்திரை -14

சுதாமா துவாரகை


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்    

    1   2   3   4   5    6    7    8    9    10    11  


   12    13    15   16   17   18   19   20    21   22   23  24    25   26   27   28




அலங்கார வாயில்

விசாவாடா மூல துவாரகையை தரிசித்து பிறகு வண்டி ஓட்டுர் அடுத்து போர்பந்தரில் சுதாமா துவாரகையை தரிசிக்கலாம் என்று கூறினார். யார் அந்த சுதாமா என்று யோசிக்கின்றீர்களா?  தூய ட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன் -சுதாமா இதோ  இவர்களின் அற்புதக்  கதை. பாகவதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ள இக்கதையை காணலாம்.  நாம் இவரை  குசேலர் என்று அழைக்கின்றோம், வடநாட்டில் இவரை  சுதாமா என்றழைக்கின்றனர்.  குசேலர் என்பது காரணப்பெயர் வறுமை காரணமாக் கந்தல் துணிமணிகளை அணிந்திருந்ததினால் இவர் குசேலர் என்றழைக்கப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணர் சந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்  கல்வி பயின்றபோது உடன் கல்வி கற்றவர். கண்ணனின் சிறந்ண்பர்.  குருகுலம் முடிந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

கண்ணன் துவாரகைக்கு அரசனார். குசேலரோ திருமணம் முடித்து 27  பிள்ளைகளைப் பெற்று வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். இவரது மனைவி சுசீலை இவரை ஸ்ரீகிருஷ்ணர் தங்களின் பால்ய ண்பர் என்று சொல்கின்றீர்களே, அவரிடம் சென்று ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் என்று  அறிவுறுத்திக் கொண்டிருந்தார். மனைவியின் அறிவுரை மதித்து ஒரு சமயம் குசேலர் ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க சுதாமாபுரியில் இருந்து  துவாரகைக்குப் புறப்பட்டார். பரிசுப் பொருளாக கொண்டு செல்ல எதுவும் இல்லாதால் சிறிது அவலை ஒரு கந்தல் துணியில் கட்டிக்கொண்டு புறப்பட்டார். 

அவர் துவாரகையை அடைந்த போது முதலில் கோட்டைக் காவலாளிகள் இவரது உடையைப் பார்த்து இவரை  உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தன் ண்பன் வந்து கோட்டை வாசலில் நிற்பதை உணர்ந்த கண்ணன், ஒரு காவாலாளியை அனுப்பி அவரை சகல மரியாதைகளுடன் அழைத்து வருமாறு கூறினார். குசேலரை ஒரு உயரிய ஆசனத்தில் அமர வைத்து ருக்மிணிப் பிராட்டியார் நீர் வார்க்க பாத பூஜை செய்து வரவேற்றார். பின்னர் அவருக்கு விருந்தளித்தார்,  இருவரும் சிறிது நேரம் அளவளாவினர். கண்ணனின் செல்வ நிலையைப் பார்த்து  குசேலருக்கு தான் கொண்டு வந்த அவலை கொடுக்க மனம் வரவில்லை. மாயக்கண்ணன் அதை அறியமாட்டானா? என்ன. அவனாகவே எனக்காக எதுவும் கொண்டு வரவில்லையா என்று வினவி அவர் தோளில் இருந்த அந்த கந்தல் மூட்டையை இழுத்து பிரித்து அவலை எடுத்து தன் வாயில் இட்டான்.

சுதாமர் ஆலயம்

அடுத்த நொடி அங்கு சுதாமாபுரியில் பெரிய பிராட்டியாரின் அருளினால்  குசேலரின் குடிசை மாட மாளிகையாயிற்று, அம்மாளிகை முழுதும் செல்வத்தினால் நிறைந்தது. பரந்தாமனின் ஆசியினால் குசேலர் ஆனார் மாளிகைவாசி, இனி ஒட்டாது அவர் காலில் தூசி. கிருஷ்ணனின் அன்பில் திளைத்த குசேலர்  எதுவும் கேட்காமல் திரும்பி வந்தார். தன் வீட்டை அடைந்த போது அது மாளிகையாக மாறி இருப்பதையும், மனைவி மற்றும் பிள்ளைகள் பட்டுப் பீதாம்பரம், விலை உயர்ந்த ஆபரணங்களில் மிளிர்வதையும், மாளிகை முழுவதும் செல்வம்  நிறைந்திருப்பதையும் கண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு  மனதார ன்றி கூறினார். ட்பின் மேன்மையை கூறும் வரலாறு இது. “உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை  எல்லாம் கண்ணன்“ என்று சமர்ப்பணம் செய்பவர்களுக்கு அவன் அருளை வாரி வழங்குவதைக் கூறும் வரலாறு இது. அந்ண்பனுடன் கண்ணன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம் தற்போதைய போர்பந்தரில் அமைந்துள்ள சுதாமா துவாரகை.

துவாரகையிலிருந்து சோமநாத் செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 105  கி.மீ தூரத்தில் போர்பந்தர் அமைந்துள்ளது. ஊரின் மையமாக சுதாமா துவாரகை சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் டுவே ஆலயம் அமைந்துள்ளது.  ஆலயத்தின் முன்னர் சுதாமாபுரி என்று ஒரு அலங்கார வளைவு எல்லாரையும் வரவேற்கின்றது. அடியோங்கள் அங்கு சென்ற போது மாலை   நேரம் என்பதால் பறவைகள் எல்லாம் இவ்வாலயத்தில் உள்ள மரங்களில் உள்ள தம் கூடுகளுக்கு  திரும்பிக்கொண்டிருந்தன. அவைகள் எழுப்பிய ஓசை அருமையான பிண்ணனியாக விளங்க காயா மலர் வண்ணனை, குன்றமேந்தி குளிர் மழை காத்தவனை, காரொத்த மேனி என்பெருமானின் தரிசனம் பெற்றோம்.

ஆலயத்தில் குழுவினர் 

கர்ப்பகிரகம் நாகாரா விமானத்துடன் உள்ளது. ஒரே   ஒரு மண்டபம்,  அழகிய தூண்களுடன்  பிரம்மாண்டமாக இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு ண்பனுக்கு ஏற்றம் தருகின்றார் “கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான், குன்றதனால் மழை காத்து  குடமாடு கூத்தன் ஸ்ரீகிருஷ்ணன்“. 


ஸ்ரீகிருஷ்ணர் குசேலருக்கு

 பாத பூஜை செய்யும் சித்திரம் 



பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையையும் தரிசனம் செய்தோம். ஆலய வளாகத்தில் ஞான வாவி என்றழைக்கப்படும்  ஒரு கிணறும் அமைந்துள்ளது.  அன்றைய தினம் இவ்வாறு  ஐந்து துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.








2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பயணம். தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள் ஐயா.