Tuesday, July 4, 2017

ஆனி உத்திர தரிசனம்

 சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்

அதாவது
சித்திரை - திருவோணம்
ஆனி - உத்திரம்
மார்கழி - திருவாதிரை
மாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
ஆவணி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
புரட்டாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
( தனுர் - மார்கழி, யரி(சிம்மம்) - ஆவணி, கன்னி- புரட்டாசி)

என்று அம்பலவாணருக்கு ஒரு வருடத்தில் ஆறு அபிடேக தினங்கள். 

அதில் ஆனித்திருமஞ்சன்மாகிய ஆனி உத்திர அபிடேகம் சாயரட்சை எனப்படும்.  பிரதோஷ கால பூஜை ஆகும். 



காரணீஸ்வரர் ஆலயம் 

தில்லையில் நடைபெறும் இரண்டு உற்சவங்களில் ஒன்று இந்த ஆனி உத்திர தரிசனம் ஆகும். மாணிக்க வாசகர் இறைவனுடன் ஒன்றறக் கலந்தது ஆனி மாதத்தில்தான்.  


இப்பதிவில் ஐயன் இவ்வருட ஆனி உத்திர தரிசனக் கோலங்களை தரிசிக்கின்றீர்கள்.  முதலாவது சென்னை  மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வர ஆலய நடராசர் தரிசனம். 


*****************


இரண்டாவதாக தாங்கள் தரிசிக்கும் சிவானந்தவல்லி சமேத ஆனந்த நடராசர். வட திருநாரையூர் என்றழைக்கப்படும்  திரிபுரசுந்தரி உடனுறை சௌந்தரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஆனந்தக்கூத்தர் ஆவார். 


இவ்வாலயம் 2012ம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதற்குப்பின் ஆனி உத்திரத்தை தீர்த்த நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகின்றது. நாம் காண்பது பிரம்மோற்சவத்தின்  பத்தாம்  நாள் காலை நடராசர்  புறப்பாடு ஆகும். 


சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராரும் கடல்படைசூழ் வையமெலாம் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி. - உமாபதி சிவாச்சாரியார் 



பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளி விளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி - உமாபதி சிவாச்சாரியார் 

**********************




மேற்கு சைதாப்பேட்டை செங்குந்தக் கோட்டம்.


2 comments:

Test said...

Nandri Aiyya

S.Muruganandam said...

வாருங்கள் ஐயா. நிறைய நாட்கள் ஆகிவிட்டன? வருகைக்கு நன்றி