சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்
பஞ்ச மூர்த்திகள்
விநாயகப் பெருமான்
மூஷிக வாகனத்தில் விநாயகர்
கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச் கேம்பெல்லிடம், துபாஷியாக பணியாற்றிய ஆதியப்ப நாயக்கர்
1787ல் இவ்விரண்டு ஆலய‘ங்களை புதுப்பித்துள்ளார். அதனால் இவரது வம்சத்தினரே இன்றும் இவ்வாலயங்களை நிர்வகித்து வருகின்றனர். அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீவரர் கோவிலுக்கு செய்தளித்தவர் பொன்னுசாமி அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் செய்தளித்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர். இவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தை.கடந்த, 1901ல் அதிகார நந்தியையும், 1929ல் காமதேனுவையும் பொன்னுசாமி செய்தளித்துள்ளார். இந்த இரு வாகனங்களுடன் பூத வாகனமும் சேர்த்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசல் அருகில் உள்ள, மிகப் பெரிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஆதிபுரீஸ்வரர்
சோமாஸ்கந்தர்
அம்மையப்பர்
சென்னையின் சுற்றுவட்டாரத்தையே தனது பேரழகில் மயக்கி வைத்திருக்கின்ற இந்த அதிகார நந்தி வாகனம் வேலைப்பாடு மிளிரும் வாகனம் ஆகும், அதிகார நந்தி தேவர் மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் திருக்கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி உயரம் தற்போது உள்ளது இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்ததாகவும், அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் என்பதால், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாம்.
த்ரிபுரசுந்தரி அம்பாள்
வள்ளி தேவசேனா சமேத முருகர்
கலையழகு மிளிரும்
நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார். நேராக இல்லாமல் ஒயிலாக சாய்ந்திருப்பது
போல இருப்பதே ஒரு தனி அழகு ஆகும் அவரது மேனி முழுவதும் ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தலையலங்காரமும், தோளில் வாகுவளையங்களும், மார்பின் மாலைகளும், கரங்களில் கங்கணமும், காலில்
சிலம்பும் மிகவும் கலை நயத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளன. இவரது தாமரை மாலையின் அழகை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
சண்டிகேஸ்வரர்
ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்
இந்த அதிகார
நந்தி தேவரின் தனிச்சிறப்பே இவருடன் பொருத்தப்படும் பொம்மைகள் தான். வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. நான்கு பக்கமும் நான்கு துவார
பாலகர்கள், கந்தருவி பொம்மைகள் அலங்கரிக்கின்றன, பிரிட்டிஷ் காலத்தில் செய்யப்ப்பட்டதாலோ
என்னவோ கந்தருவி பொம்மைகள் சிறகுகளை விரித்த
தேவதைகள் (Angel) போன்று தோன்றுகின்றன.
*********************
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
அதிகார நந்தி சேவை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment