சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்
அதிகார நந்தி தேவர்
அதிகார நந்தி தேவர்
அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சென்னையில் உள்ள பல ஆலயங்கள் மிகவும் தொன்மையானவை. இன்றைய தர்மமிகு சென்னை நகரின் இப்பகுதிகள் சிறு கிராமங்களாக இருந்த போது உருவான ஆலயங்கள் இவை. அவற்றுள் ஒன்றுதான் சிந்தாதிரிப்பேட்டை.ஆதி கேசவப்பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் ஆலய வளாகம் ஆகும்.
இவ்வாலயங்களின் மூல மூர்த்திகள் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை. இன்றும் இவ்வாலயங்களில் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவ்விழாக்களில் தொன்மை வாய்ந்த கலை நுணுக்கம் மிக்க வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இத்தகைய 200 வருடங்கள் பழமையான ஒரு அற்புத அதிகார நந்தி வாகன இப்பகுதியின் ஆதிபுரீஸ்வரரின் அதி அற்புத அதிகார நந்தி சேவையைத்தான் நாம் இப்பதிவில் தரிசிக்க உள்ளோம்.

அதிகார நந்தி தேவரின் முன்னழகு
( விநாயகர் இந்திரன் அக்னி, ஈசானன், நாரதர், தும்புரு பொம்மைகள் முன்புறம் அமைந்துள்ளன. )
(துவார பாலகர்கள் மற்றும் கந்தருவி பொம்மைகள் அருமை)
முன்புற பொம்மைகள்
சிந்தாதிரிப்பேட்டையில் சிவ விஷ்ணு ஆலயங்கள் இரண்டும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. சிவாலயத்தில்
திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபூரிஸ்வரராய் சிவபெருமான் இவ்வாலயத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மேலும் கணபதி, சுப்பிரமணியர், பழனி முருகர், சண்முகர், நடராஜர் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன.
வலப்பக்கம்
வலப்பக்க பொம்மைகள்
இடப்பக்கம்
இடப்பக்க பொம்மைகள்
எவ்வளவு உயரமான குடைகள்
திரிபுர சுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரருக்கு சித்திரை மாதம் பெரு விழா நடைபெறுகின்றது. இப்பெருவிழாவின் மூன்றாம் நாள் காலை சுவாமி பூத வாகனத்திலும், இரவு அதி லாவண்யமான அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திரிபுர சுந்தரி காமதேனு வாலனத்திலும், வள்ளி, தேவசேனா சமேத முருகர் பூத வாகனத்திலும் , விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
அதிகார நந்தி தேவர் பின்னழகு
இந்த வருடம்
தமிழ் வருடப்பிறப்பன்று (14-04-2016) அதாவது
இன்று காலை பூத வாகன புறப்பாடு முடிந்தது. இரவு அதி அற்புத அதிகார நந்தி சேவை இரவு
நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் நேரில் சென்று தரிசிக்கவும் முடியாதவர்கள் சென்ற வருட
அதிகார நந்தி சேவையைக் இங்கு கண்டு களிக்கவும்.
இப்பதிவில் அதி அற்புத அதிகார நந்தியின் அழகை தரிசித்தோம். வரும் பதிவுகளில் பஞ்ச மூர்த்திகளின் அலங்கார தரிசனத்தையும் பின்னர் வாகன சேவைகளையும் தரிசிக்கலாம்.
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
இப்பதிவில் அதி அற்புத அதிகார நந்தியின் அழகை தரிசித்தோம். வரும் பதிவுகளில் பஞ்ச மூர்த்திகளின் அலங்கார தரிசனத்தையும் பின்னர் வாகன சேவைகளையும் தரிசிக்கலாம்.
*******************
இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
அதிகார நந்தி சேவை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment