Showing posts with label ரிஷப வாகனம். Show all posts
Showing posts with label ரிஷப வாகனம். Show all posts

Wednesday, August 15, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 3

அன்பர்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஆகம விதிகளின் படி அம்பாள் தனியாக  மாட வீதிகளில் எழுந்தருளி  அருள் பாலிப்பது ஆடிப்பூர உற்சவத்தின் போதுதான். சிவாலயங்களில் சோமாஸ்கந்த மூர்த்தியுடன் உள்ள அம்பாள் பிரம்மோற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளுவாள்.  இந்த அம்மன் விக்கிரகம் தவிர உள் புறப்பாடு கண்டருளும் அம்மன் விக்கிரகம் ஒன்றும் சிவாலயங்களில் உள்ளது. இவ்வம்பாளை “சுக்கிரவார அம்பாள்“ அல்லது "ஆடிப்பூர அம்பாள்" என்று அழைப்பர்.  

நாக வாகனத்தில் சொர்ணாம்பிகை

வெள்ளித்தேர், தங்கத்தேரில் தினமும் உள்புறப்பாடு, வெள்ளிக்கிழமைகளில் உள்புறப்பாடு, வராத்திரியில் கொலு வீற்றிருப்பது மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின் போது தனியாக மாட வீதிகளில் எழுந்தருளுபவள் இந்த ஆடிப்பூர அம்பாள்தான்.



திருவாரூர் கமலாம்பாள், திருநாகை நீலாயதாக்ஷி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் ஆகிய அம்மன்கள் ஆடிப்பூரத்தின் போது பத்து   நாள் பெருவிழா சிறப்பாக தேரோட்டத்துடன் சிறப்பாக டைபெறுகின்றது.


இவ்வாலயங்களைப் போலவே சென்னை கோடம்பாக்கம் பாரத்வாஜேஸ்வரர் ஆலயத்திலும் சொர்ணாம்பாள் பத்து நாள் ஆடிப்பூர உற்சவம் கண்டருளினாள். அவ்வுற்சவத்தின் அருட்காட்சிகள் இனி வரும் பதிவுகளில் இடம் பெறுகின்றன.

ஐந்தாம் திருநாள் அலங்காரம்


தினமும் காலை யாக சாலை பூஜை, மூலவர் அம்மனுக்கு யாகத்தில் பூசித்த புனித நீரினால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை. இரவு ஆடிப்பூர அம்பாள் மாட வீதி வாகன சேவை தந்தருளினாள். சிறப்பாக சென்ற வருடம் கண்ணாடிப் பல்லக்கு அம்பாளுக்கு சமர்பிக்கப்பட்டது. ஆடிப்பூரத்தன்று அம்பாள் அந்நூதன கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.




பின்னலங்காரம்



ஐந்து குடைகளுடன் புறப்பாடு



கோபுர தரிசனம்





Thursday, April 14, 2016

அதி அற்புத அதிகார நந்தி சேவை -2


சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்
பஞ்ச மூர்த்திகள்


விநாயகப் பெருமான் 




மூஷிக வாகனத்தில் விநாயகர்


கிழக்கிந்திய கம்பெனி சார்பில் சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச் கேம்பெல்லிடம், துபாஷியாக பணியாற்றிய ஆதியப்ப நாயக்கர் 1787ல் இவ்விரண்டு ஆலயங்களை புதுப்பித்துள்ளார். அதனால் இவரது வம்சத்தினரே இன்றும் இவ்வாலயங்களை நிர்வகித்து வருகின்றனர். அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீவரர் கோவிலுக்கு செய்தளித்தவர் பொன்னுசாமி அதிகார நந்தி, காமதேனு வாகனங்களை ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்குச் செய்தளித்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர். இவர் தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தை.கடந்த, 1901ல் அதிகார நந்தியையும், 1929ல் காமதேனுவையும் பொன்னுசாமி செய்தளித்துள்ளார். இந்த இரு வாகனங்களுடன் பூத வாகனமும் சேர்த்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசல் அருகில் உள்ள, மிகப் பெரிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.



ஆதிபுரீஸ்வரர்


சோமாஸ்கந்தர் 



அம்மையப்பர் 


சென்னையின் சுற்றுவட்டாரத்தையே தனது பேரழகில் மயக்கி வைத்திருக்கின்ற  இந்த அதிகார நந்தி வாகனம்  வேலைப்பாடு மிளிரும்  வாகனம் ஆகும்அதிகார நந்தி தேவர்  மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் திருக்கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி உயரம்  தற்போது உள்ளது  இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்ததாகவும், அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் என்பதால், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அது பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாம்.


த்ரிபுரசுந்தரி அம்பாள்



வள்ளி தேவசேனா சமேத முருகர்

கலையழகு மிளிரும் நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார். நேராக இல்லாமல் ஒயிலாக சாய்ந்திருப்பது போல இருப்பதே ஒரு தனி அழகு ஆகும் அவரது மேனி முழுவதும்  ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி  அருமையாக  செதுக்கப்பட்டுள்ளன.  தலையலங்காரமும், தோளில் வாகுவளையங்களும்,  மார்பின் மாலைகளும், கரங்களில் கங்கணமும், காலில் சிலம்பும் மிகவும் கலை நயத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளன. இவரது தாமரை மாலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. 


சண்டிகேஸ்வரர்


ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

இந்த அதிகார நந்தி தேவரின் தனிச்சிறப்பே இவருடன் பொருத்தப்படும் பொம்மைகள் தான். வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. நான்கு பக்கமும் நான்கு துவார பாலகர்கள், கந்தருவி பொம்மைகள் அலங்கரிக்கின்றன, பிரிட்டிஷ் காலத்தில் செய்யப்ப்பட்டதாலோ என்னவோ கந்தருவி பொம்மைகள்  சிறகுகளை விரித்த தேவதைகள் (Angel) போன்று தோன்றுகின்றன.  

*********************

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள் 





அதிகார நந்தி சேவை தொடரும் . . . . . . 



Tuesday, November 8, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -8

சிவமயம்
திருசிற்றம்பலம்

நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காட்சிகளை இப்பதிவில் கண்டு களிக்க உள்ளீர்கள். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு மிகவும் முக்கியமான நாள் ஆகும் ஏனென்றால் அன்று சிவபெருமான் தனக்குரிய தர்ம தேவதையாம் வெள் விடை வாகனத்தில்( வெள்ளை ரிஷப வாகனத்தில்) எழுந்தருளி சம்பவீ தீக்ஷை அருளுகின்றார். மற்ற மூர்த்திகளும் தங்களுடைய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறனர். எனவே அன்ரைய தினம் அலங்காரம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றது அந்த் அழகை கண்டு அருள் பெறுங்கள்.


வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்

இத்திருக்கோவிலில் ஐந்தாம் திருநாள் காலையிலும் ரிஷப வாகனம்தான் ஆமாம் சிறப்பாக வெள்ளி ரிஷப வாகனம். அக்காட்சிகளை முதலில் காண்கின்றீர்கள்.



சந்திரசேகரர் பின்னழகு


இத்திருக்கோவிலில் சுக்கிரவார அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உள்புறப்பாடு செய்யும் பொருட்டு வெள்ளித் திருத்தேர் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரும்பும் அன்பர்கள் இத்திருப்பணியில் கலந்து கொள்ளலாம்.

இத்திருக்கொயில் சார்பாக ஒரு திருமண மண்டபம் உள்ளது . விரும்பும் அன்பர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இனி தாங்கள் காண இருப்பது ஐந்தாம் திருநாளின் இரவு அலங்கார காட்சிகள்.

விக்னங்களை நீக்கும் விநாயகர்
சிறப்பு அலங்காரம்







சிறப்பு அலங்காரத்தில் அகத்தீஸ்வரர்



செங்கோல் தாங்கி ஜகன்னாதனாக காட்சி தரும் அருட்கோலம்




சோமாஸ்கந்தர் முழு அலங்காரம்


அன்னை அகிலாண்டீஸ்வரி சிறப்பு அலங்காரம்



அழகன் முருகன் சிறப்பு அலங்காரம்


சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..