Showing posts with label நாக வாகனம். Show all posts
Showing posts with label நாக வாகனம். Show all posts

Wednesday, August 15, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 3

அன்பர்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஆகம விதிகளின் படி அம்பாள் தனியாக  மாட வீதிகளில் எழுந்தருளி  அருள் பாலிப்பது ஆடிப்பூர உற்சவத்தின் போதுதான். சிவாலயங்களில் சோமாஸ்கந்த மூர்த்தியுடன் உள்ள அம்பாள் பிரம்மோற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளுவாள்.  இந்த அம்மன் விக்கிரகம் தவிர உள் புறப்பாடு கண்டருளும் அம்மன் விக்கிரகம் ஒன்றும் சிவாலயங்களில் உள்ளது. இவ்வம்பாளை “சுக்கிரவார அம்பாள்“ அல்லது "ஆடிப்பூர அம்பாள்" என்று அழைப்பர்.  

நாக வாகனத்தில் சொர்ணாம்பிகை

வெள்ளித்தேர், தங்கத்தேரில் தினமும் உள்புறப்பாடு, வெள்ளிக்கிழமைகளில் உள்புறப்பாடு, வராத்திரியில் கொலு வீற்றிருப்பது மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின் போது தனியாக மாட வீதிகளில் எழுந்தருளுபவள் இந்த ஆடிப்பூர அம்பாள்தான்.



திருவாரூர் கமலாம்பாள், திருநாகை நீலாயதாக்ஷி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் ஆகிய அம்மன்கள் ஆடிப்பூரத்தின் போது பத்து   நாள் பெருவிழா சிறப்பாக தேரோட்டத்துடன் சிறப்பாக டைபெறுகின்றது.


இவ்வாலயங்களைப் போலவே சென்னை கோடம்பாக்கம் பாரத்வாஜேஸ்வரர் ஆலயத்திலும் சொர்ணாம்பாள் பத்து நாள் ஆடிப்பூர உற்சவம் கண்டருளினாள். அவ்வுற்சவத்தின் அருட்காட்சிகள் இனி வரும் பதிவுகளில் இடம் பெறுகின்றன.

ஐந்தாம் திருநாள் அலங்காரம்


தினமும் காலை யாக சாலை பூஜை, மூலவர் அம்மனுக்கு யாகத்தில் பூசித்த புனித நீரினால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை. இரவு ஆடிப்பூர அம்பாள் மாட வீதி வாகன சேவை தந்தருளினாள். சிறப்பாக சென்ற வருடம் கண்ணாடிப் பல்லக்கு அம்பாளுக்கு சமர்பிக்கப்பட்டது. ஆடிப்பூரத்தன்று அம்பாள் அந்நூதன கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.




பின்னலங்காரம்



ஐந்து குடைகளுடன் புறப்பாடு



கோபுர தரிசனம்





Monday, November 7, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -7

அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலய தக்ஷிணாயண பிரம்மோற்சவ புண்ய கால பிரம்மோற்சவ பெருவிழாவின் நான்காம் நாள் காலை சந்திரசேகரர் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் பவனியில் ஐயனும் அம்மையும் நாக வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். அந்த அற்புத காட்சிகளை இப்பதிவில் காணுங்கள் அன்பர்களே.


கணேசர்

இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளைப் பற்றி காண்போமா?

தினமும் உச்சிக் கால பூஜைக்குப்பின் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.

பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகளுக்கு இலவச ஆன்மீக வகுப்பு நடத்தபப்டுகின்றது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு திருவாசகம் தொடர் சொற்பொழிவு முனைவர் திரு. அரங்க. இராமலிங்கம் அவர்களால் நடத்தப்படுகின்றது.


நாக வாகனத்தில் சோமாஸ்கந்தர்

ஐயனின் ஜடாமுடியில் இருந்து ஓடி வரும் கங்கை நதியின் பிரவாகத்தை கண்டீர்களா?





நாகவாகனத்தில் பத்மாசனியாக அகிலாண்டேஸ்வரி





முருகப்பெருமான்

சண்டிகேஸ்வரர்

சோமாஸ்கந்தர் ஓவியம்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Friday, January 29, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 5

முத்துக்குமார சுவாமி நாகவாகன தரிசனம்



பூவே மணமே சரணம் சரணம்

பொருளே அருளே சரணம் சரணம்

கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்

தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்

காவே தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்



நாள் தோறும் நான்கு கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் வார உற்சவமாக வெள்ளிக்கிழமையும், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஸ்கந்த , சஷ்டிபுத்தாண்டு, தைப்பூசம், மாசி மகம், மஹா சிவராத்திரி, ஆடிக் கிருத்திகை ஆகியநாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சைவத்தலமானதால் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் முருகனுக்கும் உரிய அனைத்து பண்டிகைகளும்கொண்டாடப்படுகின்றன இத்தலத்தில் , சைவ குரவர்கள் நால்வருக்கும், அருணகிரி நாதருக்கும், வள்ளலாருக்கும், வண்ண சரபம் தண்டபாணிசுவாமிகளுக்கும் பத்து நாள் உற்சவம் நடைபெறுகின்றது. நடராஜ பெருமாளுக்குஆறு கால அபிஷேகம், மீனாக்ஷஅம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும்சுக்கிரவார உற்சவம். வைகாசியில் வஸந்தோற்சவம் கல்யாண மண்டபத்தில்உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் முத்து குமாரசுவாமி, சுற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில்எம்பெருமான் எழுந்தருளி சேவை தரும் அந்த அழகை வர்ணிக்க வார்ட்தைகளேஇல்லை. வஸந்தோற்சவத்தின் 19 நாள் உற்சவர் சந்தன காப்பு அலங்காரத்தில்சேவை சாதிக்கின்றார். கடைசி நாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அடுத்தநாள் விடையாற்றி உற்சவத்தின் முதல் நாள் புஷ்பநாக ஊஞ்சல் சேவை. ஆடிப்பூரத்தை ஒட்டி பத்து நாள் உற்சவம் , ஆடிப்பூரத்தன்று மீனாக்ஷதிருக்கல்யாணம். புரட்டாசியில் நவராத்திரியின் போது எழிலாக கொலு தரிசனம்தருகின்றாள் அன்னை விஜய தசமியன்று பாரி வேட்டை நடைபெறுகின்றது. ஐப்பசியில் கந்தர் ஷஷ்டி திருவிழா, கார்த்திகை மாத சோம வாரத்தன்றுஅபிஷேகம், செவ்வாயன்று அர்த்த சாமத்தில் பைரவர் பூஜை. மார்கழி மாதத்தில்தனுர் மாத பூஜை, தையில் பிரம்மோற்சவம். பங்குனியில் பங்குனி உற்சவம் எனவருடம் முழுவதும் திருவிழாதான்.சிறப்பு நாட்களில் வெள்ளி ரதத்தில்எழுந்தருளி அருள் பாலிக்கிறார் முத்து குமார சுவாமி.


இவற்றுள் ஸ்கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் உஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்ட்பத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது. அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்ப நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நுற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை. கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளுகிறார். கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு, மஹா ஸ்கந்த ஷஷ்டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி. இரண்டம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் பிரணவ உபதேச திருகோலம்,


மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை, நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம், ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம், மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம். அன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்ப நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்ப நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா. முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்­ணிலடங்கர்.






வடிவேல் அரசே சரணம் சரணம்

கோலக் குறமான் தலைவா சரணம்

ஞாலத்துயர் நீர் நலனே சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் என்று வள்ளலார் பாடிய முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடை பெறுகின்றது. இந்த தைப்பூச பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை நாக வாகன தரிச்னத்தின் காட்சிகளை இப்பதிவில் காண்கிறீர்கள். தைப்பூச பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடரும்.