பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவே தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
நாள் தோறும் நான்கு கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் வார உற்சவமாக வெள்ளிக்கிழமையும், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஸ்கந்த , சஷ்டிபுத்தாண்டு, தைப்பூசம், மாசி மகம், மஹா சிவராத்திரி, ஆடிக் கிருத்திகை ஆகியநாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சைவத்தலமானதால் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் முருகனுக்கும் உரிய அனைத்து பண்டிகைகளும்கொண்டாடப்படுகின்றன இத்தலத்தில் , சைவ குரவர்கள் நால்வருக்கும், அருணகிரி நாதருக்கும், வள்ளலாருக்கும், வண்ண சரபம் தண்டபாணிசுவாமிகளுக்கும் பத்து நாள் உற்சவம் நடைபெறுகின்றது. நடராஜ பெருமாளுக்குஆறு கால அபிஷேகம், மீனாக்ஷ’ அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும்சுக்கிரவார உற்சவம். வைகாசியில் வஸந்தோற்சவம் கல்யாண மண்டபத்தில்உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் முத்து குமாரசுவாமி, சுற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில்எம்பெருமான் எழுந்தருளி சேவை தரும் அந்த அழகை வர்ணிக்க வார்ட்தைகளேஇல்லை. வஸந்தோற்சவத்தின் 19 நாள் உற்சவர் சந்தன காப்பு அலங்காரத்தில்சேவை சாதிக்கின்றார். கடைசி நாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அடுத்தநாள் விடையாற்றி உற்சவத்தின் முதல் நாள் புஷ்பநாக ஊஞ்சல் சேவை. ஆடிப்பூரத்தை ஒட்டி பத்து நாள் உற்சவம் , ஆடிப்பூரத்தன்று மீனாக்ஷ’ திருக்கல்யாணம். புரட்டாசியில் நவராத்திரியின் போது எழிலாக கொலு தரிசனம்தருகின்றாள் அன்னை விஜய தசமியன்று பாரி வேட்டை நடைபெறுகின்றது. ஐப்பசியில் கந்தர் ஷஷ்டி திருவிழா, கார்த்திகை மாத சோம வாரத்தன்றுஅபிஷேகம், செவ்வாயன்று அர்த்த சாமத்தில் பைரவர் பூஜை. மார்கழி மாதத்தில்தனுர் மாத பூஜை, தையில் பிரம்மோற்சவம். பங்குனியில் பங்குனி உற்சவம் எனவருடம் முழுவதும் திருவிழாதான்.சிறப்பு நாட்களில் வெள்ளி ரதத்தில்எழுந்தருளி அருள் பாலிக்கிறார் முத்து குமார சுவாமி.
இவற்றுள் ஸ்கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் உஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்ட்பத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது. அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்ப ‘க நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நு‘ற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை. கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளுகிறார். கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு, மஹா ஸ்கந்த ஷஷ்டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி. இரண்டம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் பிரணவ உபதேச திருகோலம்,
மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை, நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம், ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம், மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம். அன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்ப ‘க நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்ப ‘க நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா. முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்ணிலடங்கர்.
வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் தலைவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் என்று வள்ளலார் பாடிய முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடை பெறுகின்றது. இந்த தைப்பூச பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை நாக வாகன தரிச்னத்தின் காட்சிகளை இப்பதிவில் காண்கிறீர்கள். தைப்பூச பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடரும்.
5 comments:
அருள்நிறை அழகரின் அற்புதப் படங்களுக்கு மிக்க நன்றி.
ஐயா வருடம் முழுவதும் நடைபெறும் விழாவினை அழகாக விவரித்துள்ளீர்கள்,
நாக வாகனத்தில் கந்தர் அழகாக காட்சி அளிக்கிறார்...
ஆறாம் நாள் கந்தகோட்டத்தில் ஹெரான் ராமஸ்வாமி குழுவினர் நடத்தும் சூரசம்ஹாரத்தை ஒருமுறை பார்த்துள்ளேன்.
//ஆறாம் நாள் கந்தகோட்டத்தில் ஹெரான் ராமஸ்வாமி குழுவினர் நடத்தும் சூரசம்ஹாரத்தை ஒருமுறை பார்த்துள்ளேன்//
சிவப்பு பட்டாடை உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் அருணன் போன்று ஒளிப்பிழம்பாக கையில் சக்தி வேலுடன் முருகன் வரும் அழகே அழகு. அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது.
நன்றி Tamil Home REcipes ஐயா.
நன்றி பெயர் சொல்ல விரும்பாத அன்பரே. முருகனருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
Post a Comment