Saturday, January 30, 2010

தைப்பூசத் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்


பத்து மலை முருகன் தரிசனம்

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவசகதியின் அருமைப் புதல்வன் அழகன் முருகனுக்கு உரிய மிக முக்கிய திருநாள் தைப்பூசம். கடல் கடந்த மலேசியாவில் தைப்பூசம் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு, தைப்பூசம் என்றால் அது பத்துமலை முருகன் கொண்டாட்டம் என்று வான்(உலக)புகழ் கொண்டூ விட்ட இந்த தைப்பூச நன்னாளில் அந்த கந்தப்பெருமானின் வாகனமான மயில் வாகன தரிசனத்தை கண்டு அவன் அருள் பெற்று ஆனந்த அடைவோமாக. அப்படியே பத்து மலை முருகனின் தரிசனமும் பெறலாம்.


32 அடி உயர முருகப்பெருமான் சிலை

முருகன் பின்னழகு

முருகனுக்கு பூசப்பட்டுள்ள வர்ணம் ( பெயிண்ட்) இப்பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு பூசப்படும் சிறப்பு வர்ணம் ஆகும்

பத்து மலையில் உள்ளே குகையில் திருமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. மலைக்கு ஏறி செல்ல உதவும் படிகள்.

குகையின் நுழைவு வாயில்

உள்ளே பல்வேறு திருமுருகன் ஆலயங்கள் மற்றும் முருகனின் திருவிளையாடகள் சுதை சிற்பங்களாக மைத்திருக்கின்றனர்.

தரிசனம் முடித்து திரும்பி வரும் போது காணும் காட்சி.

மீனாக்ஷி திருக்கல்யாண சுதை சிற்பங்கள்




முருகப்பெருமானின் அருளினாலே அவரை தரிசிக்கும் பாக்கியக் கிடைத்தது அப்போது எடுத்த படங்கள் இவை. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.

8 comments:

குமரன் (Kumaran) said...

குகையில் வளரும் குகனின் தரிசனம் நன்று. நன்றி ஐயா.

S.Muruganandam said...

மிக்க நன்றி குமரன் ஐயா.

Test said...

விண்ணை முட்டும் தங்க முருகன் தரிசனத்திற்கு நன்றி

சிங்கையிலும் தைப்பூசத் திருநாள் இனிதே நடந்தேறியது... நண்பர் கிரி அவர்களின் தைப்பூசத் பதிவை பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்...

Test said...

சிவகுடும்பம் முழுவதும் தத் தமது வாகனங்களுடன் எழுந்தேறீய காட்சி தங்கள் தயவால் எங்களுக்கு கிட்டியது, நன்றி ஐயா..

S.Muruganandam said...

Logan ஐயா, கிரி அவர்களின் பதிவு கண்டேன் , பட்டையைக் கிளப்பிட்டாரு. மிக்க நன்றி ஒரு அருமையான பதிவை சுட்டிக்காட்டியதற்கு.

S.Muruganandam said...

// சிவகுடும்பம் முழுவதும் தத் தமது வாகனங்களுடன் எழுந்தேறீய காட்சி தங்கள் தயவால் எங்களுக்கு கிட்டியது, நன்றி ஐயா..//


அடுத்த பதிவிற்கான பின்னூட்டம் இப்பதிவிலேயே வந்து விட்டதோ?

Test said...

:)

S.Muruganandam said...

பரவாயில்லை திருத்தேரோட்டம் கண்டு அருள் பெறுங்கள்.