Wednesday, July 15, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 17

ஜனக்பூர் தரிசனம் 


இவர்கள் குழுவில் இருந்து சிலர் விமானம் மூலமாக டெல்லி வந்து பின்னர் சென்னை வந்தடைந்தனர்.  இன்னொரு குழுவினர் காத்மாண்டுவிலிருந்து பேருந்து மூலமாக மஹேந்திர நெடுஞ்சாலை வழியாக  ஜனக்பூருக்கு புறப்பட்டு சென்றனர். ஜனக்பூர் நேபாளத்தில்தான் அமைந்துள்ளது. காத்மாண்டில் இருந்து 135 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  பேருந்தில் சுமார் 7 மணி நேரம் பயணம். இப்பகுதி சமவெளி என்பதால் பசுமையான வயல்களைக் காணலாம். காத்மாண்டுவிலிருந்து சிறு விமானம் மூலமும் ஜனக்பூரை அடைய முடியும். ஜனக்பூரில் இருந்து சிறு புகைவண்டி பாதை (Nattow Gauge)  இந்திய  எல்லையான ஜயநகர் வரை உள்ளது.  


ஜானகி மந்திர்

சீதா சுயம்வரத்தில்  சிவ   தனுசை முறித்து  சீதையை இராமர் திருமணம் செய்து கொண்ட இடம் ஜனக்பூர், எனவே  கார்த்திகை  சுக்லபக்ஷ பஞ்சமி விவாக பஞ்சமி என்று இந்த ஜனக்புரி ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது, மேலும் இராமநவமியும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஹோலி, சாத் பண்டிகை, தீபாவளியும் மிகவும் விசேஷம். 




ஜனக்பூர் மற்றும் சீதாமார்ஹி  தரிசனம் செய்து விட்டு அப்படியே அங்கிருந்து கல்கத்தா சென்று பின்னர் இரயில் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர்.  

விவாஹ மந்திர்

ஜனக்பூர் ஜனக மஹாராஜாவின் தலை நகரம், சீதா இராமர் திருக்கல்யாணம் நடந்த இடம். மேலே உள்ளது கல்யாண மண்டபம்.  சீதா மார்ஹி  ஜனகருக்கு சீதா தேவி கிடைத்த இடம். அதாவது சீதா தேவியின் பிறந்த இடம்.  இது பீகார் மாநிலத்தில் தற்போது அமைந்துள்ளது. 

சீதா இராமர் திருக்கல்யாணக் கோலம் 


ஜனக்புரிலிருந்து சீதாமார்ஹி 60 கி. மீ தூரம் சுமார் 2 மணி நேரத்தில் எல்லையைக் கடந்து வந்து சேரலாம். சீதாமார்ஹியில் இருந்து 4  தொடர்வண்டிகள் கல்கத்தாவிற்கு உள்ளது. இக்குழுவினர்  கொல்கத்தா வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.  இவர்கள்  முக்திநாத் யாத்திரைப் பதிவுகள்  இத்துடன்,  சீதா ராமர் தரிசனத்துடன் நிறைவு பெறுகின்றன  வந்து தரிசனம் பெற்ற அனைவருக்கும் நன்றி.   

Tuesday, July 14, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 16

மனோகாம்னா தேவி தரிசனம் 

போக்ராவிலிருந்து பின்னர் பேருந்து மூலம் காத்மாண்டு செல்லும் மனோகாம்னாவில்  அம்மனை தரிசனம் செய்தனர். இழுவை இரயில் பயணத்தையும் இரசித்தனர்.  அந்த காட்சிகளில் சில தங்கள் பார்வைக்காக. 

                    

இழுவை இரயில் பயணம் 

ஒரு மலை கிராமத்து வீடு

விமானத்தின் அற்புத மர வேலைப்பாடு

கருடன் 



பின்னர் பேருந்து மூலம்  காத்மாண்டு நகரை அடைந்து பசுபதிநாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் புத்த நீலகண்டர் ஆலயம் ( ஜல நாராயணர்)

 சென்று தரிசனம் செய்தனர்.

பசுபதி நாதர் ஆலயம் 

ஆலய முகப்பில் குழுவினர் 

குஹ்யேஸ்வரி   ஆலயம்  

ஜல நாராயணர் ( புத்த நீலகண்டர்)

இனி அவர்கள் எவ்வாறு திரும்பி வந்தனர் என்பதை அடுத்த பதிவில் காணலாம். அத்துடன் இந்த முக்திநாத் யாத்திரை பதிவுகள்    நிறைவு பெறும். 



Monday, July 13, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 15

முக்திநாதர் தரிசனம் 


ஸ்ரீ மூர்த்தி


இவ்வளவு சிரமங்களுக்குப்பின் முக்திநாத்தை அடைந்தாலும் முக்திநாதரின் தரிசனம் திவ்யமாக கிட்டியது.  108  திவ்ய தேசங்களைக் குறிக்கும் 108 தாரைகளில் நீராடி, பின்னர் புண்ணிய - பாவ குளங்களில் மூழ்கி எழுந்து மிகவும் அருமையாக முக்திநாதரை தரிசனம் செய்தனராம். பின்னர் ஜுவலா மாயி எனப்படும் ஜோதியையும் தரிசனம் செய்தனர்.   

ஆலய வளாக முகப்பு வளைவில் கருடன் 


முன் மண்டப முகப்புப் பதாகை 


கதவின் ஒரு அழகிய சிற்பம் 

 புண்ணிய குளம் 


முக்திநாதர் சன்னதி 



முக்திநாத் கிராமம் 

 ஜோம்சமில் இருந்து  போக்ரா திரும்பி வரும் போது விமானம் கிடைத்ததாம். முதலில்  போக்ரா சென்றதால் திரும்பி வரும் போது மனோமாம்னா மற்றும் காத்மாண்டு சென்றனர். அந்த காட்சிகளை வரும் பதிவுகளில் காணலாம். 

 புனித கண்டகி நதி 


இராமானுஜர் 

யாக குண்டம்  

 அணையா ஜோதியுள்ள புத்த விகாரம்



Sunday, July 12, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 14

போக்ராவிலிருந்து ஜோம்சம் ஜீப் பயணம்

போக்ரா விமான நிலையத்தில்  காத்திருக்கின்றனர்

இவர்களுக்கும் வானிலை சரியாக இல்லாததால் விமானம் இரத்தானது. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறு நாளும் விமான போக்குவரத்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியாது என்பதால் இவர்கள் ஜீப் மூலமாக ஜோம்சம் செல்ல முடிவு செய்தனர். 



போக்ரா விமான நிலையத்தில் மலர்ந்திருந்த 
வண்ண வண்ண மலர்கள் 







போக்ராவில் இருந்து ஜோம்சம் விமானப்பயணம் வெறும் 45  நிமிடங்கள் தான் அதுவே ஜீப்பில் அல்லது பேருந்தில்  சென்றால் பாதை மலைப்பாம்பு போல  வளைந்து வளைந்து செல்கின்றது என்பதாலும்  தூரம் சுமார் 250 கி.மீ  என்றாலும் பாதை சரியில்லை வெறும் மண்பாதை என்பதால்  12 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். 



பயணமும் மிகவும் சிரமமானதுதான், குலுக்கி குலுக்கி போடும்,  இடுப்பு  கழன்று விட்டது என்று சொல்வோமே அது போல மிகவும்  சிரமமான பயணமாக இருந்ததாம். விமானம் இரத்தாகி விட்டால் மறு நாள் விமானத்தில் இடம் கிடைப்பதும் கடினம், மேலும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள்  வானிலை சரியாகாமல்  போகலாம் என்பதாலும். வேறு வழியில்லாமல் ஜீப்பில்  அல்லது சிறு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. 

போக்ரா பேருந்து நிலையம் 



நடுவில் சிரமபரிகாரம் செய்து கொள்கின்றனர் 

ஜீப் மூலமாக செல்லும் போது   பெனி, காசா, தாதோபாணி, மர்பா , டுகூசே    அகிய கிராமங்களை கடந்து செல்கின்றனர்.


காலை சூரிய ஒளியில் நீலகண்ட சிகரம்



ஜோம்சமில்  நீலகிரி மலைச்சிகரங்கள்
காலை சூரிய ஒளியில் மின்னும் அழகு

யாத்திரை அழைத்துச்சென்ற இராமானுஜ தாசர் 
 திருமலை நம்பி சுவாமிகள் 





தவுலகிரி மலைத்தொடரின் சில பனி படர்ந்த  மலைச்  சிகரங்கள் 


மிகவும் சிரமப்பட்டு ஜீப்பில் பயணம் செய்து ஜோம்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து  முக்திநாத் ஜீப் மூலம் சென்று நிறைவு ஏற்றத்தை நடந்தே சென்று முக்திநாத் அடைந்தனர்.  இவர்களுக்கு முக்திநாதர் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 13

போக்ரா சுற்றுலா

இவர்கள் முதலில் போக்ரா வந்தடைந்ததால்  இருக்கின்ற சமயத்தில் போக்ராவின் சுற்றுலாவை மேற்கொண்டனர். இப்பதிவில்  பிந்தியாவாசினி ஆலயம் மற்றும் டேவிஸ் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர். 

பிந்தியாவாசினி  கோவில்

விநாயகர்

சிவன் சன்னதி


கோவிலுக்கு நன்கொடை அளித்த அன்பர்கள் 

முதலில் இவர்கள்  சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

பிரம்மாண்ட காண்டா மணிகள் 

பிந்தியாவாசினி அம்மன் சன்னதி


சங்கட மோட்சன் ஹனுமான் 



பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவி. பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது.

மோகன் -  வைத்தியநாதன்


போக்ராவில் இருந்து இவர்கள் ஜோம்சம் எவ்வாறு சென்றார்கள் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.