Friday, July 10, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 11

முக்திநாதர்




முன் பதிவில் கூறியபடி அடியேனின் நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்கள் கோரக்பூர் வழியாக முக்திநாத் சென்று வந்த புகைப்படங்களை கொடுத்துதவினார். ஆகவே அவரின் அனுபவங்களை வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. முடிந்த வரை முன்னர் பதிவிட்ட படங்கள் மறுபடியும் வராதவாறு  பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் ஓரிரு படங்கள் திரும்பி வந்திருக்கும்  மன்னிக்க வேண்டுகிறேன்.  


ஜான்சிக் கோட்டை
   
சென்னையில் இருந்து  உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் என்ற நகரம் நேபாள எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 29 ( NH - 29)  நேபாள எல்லை நகரமான சுநௌலி (Sunauli) வரை செல்கின்றது.   பின்னர் அங்கிருந்து சித்தார்த் ராஜ பாதை வழியாக போக்ரா நகரத்தை அடையலாம்.  ஆகவே விமானம் மூலம் நேபாளம் செல்ல இயலாதவர்கள் இவ்வழியாக  முக்திநாத் யாத்திரை செல்கின்றனர்.



எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி கோவை,  சென்னை, விஜயவாடா வழியாக பரௌணி செல்கின்ற 12522 ரப்தி சாகர்  விரைவு வண்டி நேராக  கோரக்பூருக்கு செல்கின்றது, ஆனால் அது வாரம் ஒரு முறை  ( தற்போது வெள்ளிக்கிழமை) மட்டுமே  கிளம்புகின்றது என்பதால், சென்னையிலிருந்து டெல்லி செல்கின்ற  12621 தமிழ்நாடு விரைவு வண்டி அல்லது  12522  கிராண்ட் ட்ரங் விரைவு வண்டி மூலம் முதலில் ஜான்சி சென்று அங்கிருந்து வேறு புகைவண்டிகள் மூலம் கோரக்பூரை அடையலாம்.   


அடியேனுடைய நண்பர் முதலில் ஜான்சி சென்று பகலில் ஜான்சி கோட்டையை சுற்றிப் பார்த்து விட்டு   அன்றிரவு வேறு புகைவண்டி மூலம் கோரக்பூர் சென்றார். அவர்கள் இரசித்த ஜான்சி கோட்டையின் சில படங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 







ஜான்சி இராணியைப் பற்றிக் கூறும் போது வடநாட்டில் இவ்வாறு கூறுவார்கள்.  ’ கூப் லடி மர்தானி, யோ தோ ஜான்சி வாலி ராணி தீ"    அதாவது . ஒரு ஆண்மகனைப் போல மிகவும் வீரமாக போரிட்டாள் அவள் ஜான்சியின் இராணி   என்று பெருமையாக கூறுவார்கள். 


ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த முதல் இந்திய சுதந்திரப் போரில் வீரமாக அன்னனியரை ஆண் வேடமிட்டு போரிட்ட ஜான்சி இராணியின் கோட்டை இது.  



அடுத்த பதிவில் இனி கோரக்பூரில் கோரக்க நாதரை தரிசனம் செய்யலாம். 

2 comments:

ப.கந்தசாமி said...

என்ன, கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே. தொடர் எண் 5 லிருந்து எப்படி திடீரென்று 11 க்குத் தாவினீர்கள்?

S.Muruganandam said...

ஐயா, அது திருக்கயிலாய யாத்திரை ( www.kailashi.blogspot.com) பதிவாக மறு பதிவுகள். இது தனிப்பதிவு (www.natarajar.blogspot.com). அதிகமான அன்பர்களை அடையட்டும் என்று இவ்வாறு பதிவிடுகின்றேன்.