Showing posts with label முக்திநாத் யாத்திரை. Show all posts
Showing posts with label முக்திநாத் யாத்திரை. Show all posts

Friday, July 10, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 11

முக்திநாதர்




முன் பதிவில் கூறியபடி அடியேனின் நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்கள் கோரக்பூர் வழியாக முக்திநாத் சென்று வந்த புகைப்படங்களை கொடுத்துதவினார். ஆகவே அவரின் அனுபவங்களை வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. முடிந்த வரை முன்னர் பதிவிட்ட படங்கள் மறுபடியும் வராதவாறு  பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் ஓரிரு படங்கள் திரும்பி வந்திருக்கும்  மன்னிக்க வேண்டுகிறேன்.  


ஜான்சிக் கோட்டை
   
சென்னையில் இருந்து  உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் என்ற நகரம் நேபாள எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 29 ( NH - 29)  நேபாள எல்லை நகரமான சுநௌலி (Sunauli) வரை செல்கின்றது.   பின்னர் அங்கிருந்து சித்தார்த் ராஜ பாதை வழியாக போக்ரா நகரத்தை அடையலாம்.  ஆகவே விமானம் மூலம் நேபாளம் செல்ல இயலாதவர்கள் இவ்வழியாக  முக்திநாத் யாத்திரை செல்கின்றனர்.



எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி கோவை,  சென்னை, விஜயவாடா வழியாக பரௌணி செல்கின்ற 12522 ரப்தி சாகர்  விரைவு வண்டி நேராக  கோரக்பூருக்கு செல்கின்றது, ஆனால் அது வாரம் ஒரு முறை  ( தற்போது வெள்ளிக்கிழமை) மட்டுமே  கிளம்புகின்றது என்பதால், சென்னையிலிருந்து டெல்லி செல்கின்ற  12621 தமிழ்நாடு விரைவு வண்டி அல்லது  12522  கிராண்ட் ட்ரங் விரைவு வண்டி மூலம் முதலில் ஜான்சி சென்று அங்கிருந்து வேறு புகைவண்டிகள் மூலம் கோரக்பூரை அடையலாம்.   


அடியேனுடைய நண்பர் முதலில் ஜான்சி சென்று பகலில் ஜான்சி கோட்டையை சுற்றிப் பார்த்து விட்டு   அன்றிரவு வேறு புகைவண்டி மூலம் கோரக்பூர் சென்றார். அவர்கள் இரசித்த ஜான்சி கோட்டையின் சில படங்கள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. 







ஜான்சி இராணியைப் பற்றிக் கூறும் போது வடநாட்டில் இவ்வாறு கூறுவார்கள்.  ’ கூப் லடி மர்தானி, யோ தோ ஜான்சி வாலி ராணி தீ"    அதாவது . ஒரு ஆண்மகனைப் போல மிகவும் வீரமாக போரிட்டாள் அவள் ஜான்சியின் இராணி   என்று பெருமையாக கூறுவார்கள். 


ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த முதல் இந்திய சுதந்திரப் போரில் வீரமாக அன்னனியரை ஆண் வேடமிட்டு போரிட்ட ஜான்சி இராணியின் கோட்டை இது.  



அடுத்த பதிவில் இனி கோரக்பூரில் கோரக்க நாதரை தரிசனம் செய்யலாம். 

Monday, December 23, 2013

புண்ணிய யாத்திரை மேற்கொண்டவர்கள் தமிழக அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தினமலர் நாளிதழில் வந்த செய்தி. 2013- 2014 நிதியாண்டில்  திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்ட  அன்பர்கள்  இந்த மானியத்திற்காக விண்ணப்பம் செய்யலாம்.

செய்தி சுட்டி இதோ:

http://temple.dinamalar.com/news_detail.php?id=25895

செய்தி இதோ:

புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!
டிசம்பர் 20,2013

அ-
+
Temple images
சென்னை: மானசரோவர், முக்திநாத் புனித தலங்களுக்கு சென்று வந்த, யாத்ரீகர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. இதில், பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்கிநாத் புனித தலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும், மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு புனித தலங்களுக்கும் சென்று வந்த, தலா, 250 பேருக்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அவற்றிலிருந்து குலுக்கல் முறையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18க்குள், விண்ணப்பிக்க வேண்டும். www.tnhrc e.org என்ற இணைய முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு ஆணைக்கான சுட்டி இதோ:

http://tnhrce.org/Maanasarovar.pdf


விண்ணப்பப் படிவத்திற்கான சுட்டி இதோ :

http://tnhrce.org/manosarover-tamil.pdf

முக்கிய அம்சங்கள்: 

1. தமிழகத்தை சார்ந்த இந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். வட்டாச்சாரியர் சான்றிதழ் தேவை.


2. 2013-2014 நிதியாண்டில் யாத்திரை செய்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 70 வயதுள்ளவர்கள் தகுதி உடையவர்கள்.

3. ஒரு மாதத்திற்குள்ளாக வேண்டிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. இரு யாத்திரைகளிலும்  250 யாத்திரிகளுக்கு மானியம் வழங்கப்படும்.  திருக்கயிலாய யாத்திரைக்கு ரூ. 40000/- மற்றும் முக்திநாத யாத்திரைக்கு ரூ. 10000/- மானியம் வழங்கப்படும்.

5. வருமானம் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 250 பேருக்கு மேல் இருந்தால் குலுக்கள் நடத்தப்படும்.

6. திருக்கயிலாய யாத்திரையில் அரசு யாத்திரை மூலமாக செல்பவர்களுக்கு முன்னுரிமை, நேபாள் வழியாக சென்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

7. திருக்கயிலாய யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, கட்டண சான்று நகல், கடவு சீட்டு நகல், விசா நகல் மற்றும் பயண அட்டையுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 

8. முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, பயண சீட்டு நகல், புகைப்படங்கள் -3   மற்றும் பயண  திட்ட நகலுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 



தகுதியுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.