உ
திருசிற்றம்பலம்
திருவெம்பாவை # 3
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ......(3)
பொருள்:
எழுப்புபவள்: முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன்பாக எழுந்து எங்கள் எதிரே வந்து " என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய். இனியும் படுக்கையில் கிடப்பதேன். எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!
உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமையை பெற்றவர்கள். நானோ புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?
எழுப்புபவள்: உன்னுடைய அன்புடைமை எங்களுக்கு தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம்முடைய சிவபெருமானைப் பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள் எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.
நம்முடைய சித்தம் ஸ்படிகம் போன்றது. அது நமது எண்ணத்தையே பிரதிபலிக்கும் எனவே சித்தத்தை இறைவனை நிறைத்தால் அது உட்கருத்து.
நம்முடைய சித்தம் ஸ்படிகம் போன்றது. அது நமது எண்ணத்தையே பிரதிபலிக்கும் எனவே சித்தத்தை இறைவனை நிறைத்தால் அது உட்கருத்து.
No comments:
Post a Comment