கர்ண ப்ரயாகை - ஆதி பத்ரி தரிசனம்
கர்ண ப்ரயாகை
மறுநாள் 07.09.2012 அன்று அதிகாலை எழுந்து சூரியன் தனது ஆயிரம் கிரணங்களால் சங்கமத்தை தழுவும் அழகை கண்டோம் சங்கமத்தில் நீர்த்திவலைகள் பனி மூட்டம் போல மேலெழும்ப அதில் அதிகாலை சூரிய கதிரின் ஆரஞ்சு நிறக் கதிர்கள் பிரகாசிக்க,
வேறு வேறு வர்ணங்களைக்
கொண்ட இரு நதியும்
சங்கமமாகி ஒரே நிறமாக
பாயும் அருமையான காட்சியை கண்டு
களித்தோம். பிண்டார் நதியும்
அலக்நந்தாவும் இங்கு சங்கமம் ஆகின்றது.
கர்ண ப்ரயாகைப் பாலம்
ஆதி பத்ரிநாதர் சன்னதி
அதிகாலை எழுந்து சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தோம், பின்னர் சங்கமத்தில் புனித நீராடினோம். பின்னர் ஆதி பத்ரிக்கு புறப்பட்டோம் கர்ணப்ரயாகையில் இருந்து இராணிகேத் செல்லும் பேருந்துகள் எல்லாம் இவ்வழியாக செல்கின்றன. மேலும் வாடகை ஜீப்புகளும் செல்கின்றன. நாங்கள் செல்லும் போது ஜீப்பில் சென்றோம்.
ஆதி பத்ரி கோவில் வளாகம்
சுமார் ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் ஆதிபத்ரியை அடைந்தோம். இக்கோவில் ஒரு வளாகம் மொத்தம் பதினாறு ஆலயங்கள் இருந்திருக்கின்றன, ஒரு சமயம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சில சன்னதிகள் விழுந்துவிட்டன. தற்போது கூட சில சன்னதிகளில் சிலைகள் இல்லை திருட்டுப்போய்விட்டதாம் தற்போது தொல் பொருள் ஆராய்ச்சி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது நடு நாயகமாக உயரமான கோபுரத்துடனும் முன் மண்டபத்துடனும் ஆதி பத்ரிநாதர் சன்னதி உள்ளது. பட்டர் சேவை செய்து வைத்து பிரசாதம் அளித்தார். காலை மற்றும் மாலை பூஜா காலங்களில் மட்டும்தான் கற்பூர ஆரத்தி காட்டுவார்களாம். நின்ற கோலத்தில் சாளக்கிராம மூர்த்தி, சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் , கதை தாங்கிய கோலத்தில் பெருமாள் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். மேலும் கருடன், சத்ய நாராயணர், கணேசர், லக்ஷ்மி நாராயணர், இராமர், ஜானகி தேவி, சிவலிங்கம் , மஹிசாசுர மர்த்தனி, என்று பல்வேறு சன்னதிகள், பல் வேறு அளவுகளில் உள்ளன. லக்ஷ்மி நாராயணர் பெரிய பிராட்டியாரை தொடையில் அமர்த்திய அமர்ந்த கோலம், சத்ய நாராயணர் நின்ற கோலம், அன்ன பூரணி அதிசயமாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றாள். ஹனுமன் மற்றும் கௌரி சங்கர் சிலைகள் திருடப்பட்டு விட்டதாம். பொறுமையாக ஒவ்வொரு சன்னதியாக தரிசனம் செய்தோம் எவ்வளவு கலை நேர்த்தியடன் ஒவ்வொரு சன்னதியையும் அமைத்திருக்கின்றனர் என்று வியந்தோம். ஆனால் இன்று நாம் அவற்றை சரியாக பாதுகாக்காமல் அழித்து வருகின்றோம்.
மற்ற சில சன்னதிகள்
பின்னர் திரும்பி இராணிகேத் திரும்பி வந்து சங்கமக்கரையில் அமைந்துள்ள உமாதேவி கோவிலுக்கு சென்று அன்னையை வணங்கினோம். முற்பிறவியின் தட்சனின் புத்ரியான தாக்ஷாயணி என்னும் சதி, கல்யாணக்கோலத்தில் சிவபெருமானுடன் மலையரசன் பொற்பாவை கௌரி,
சிம்ம வாகினி
துர்கா மற்றும் ஸ்ரீ சக்ர ரூபம் என்று நான்கு கோலங்களில் சேவை
சாதிக்கின்றாள் அன்னை பார்வதி.
மேலும் விநாயகர் கர்ணனுக்கு பாண்டவர்கள் சிரார்த்தம் செய்த தலம் என்பதல் கர்ண மஹாராஜா என்று எல்லா தெய்வ மூர்த்தங்களும் வரிசையாக உள்ளன. சன்னதிக்கு வெளியே
மகிஷாசுர மர்த்தினிக்கு தனி சன்னதி உள்ளது. கோவில் வளாகத்தில் ஒர் பள்ளி உள்ளது. மேலிருந்து
ப்ரயாகை இன்னும் அழகாக காட்சி அளிக்கின்றது. .
உமாதேவி ஆலயம் - கர்ண ப்ரயாகை
இன்றைய தினம் எங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டியது. தெரியாமல் நம்மூரில் உள்ள
டவுன் வண்டி போல எல்லா இடங்களில் நிற்கும் வண்டியில் ஏறி விட்டோம். எங்கு யார் கை நீட்டினாலும் வண்டியை நிறுத்தினார்கள், ஆனால் தண்ணீர்
குடிக்கவோ, உணவருந்தவோ
சமயம் தரவில்லை.
காலை 11 மணிக்கு கர்ணப்ரயாகையில் கிளம்பிய வண்டி இரவு எட்டு மணிக்கு ரிஷிகேஷ் வந்து சேர்ந்தது. மிகவும் சோர்ந்து
போய் மத்வாசிரமம் வந்து
சேர்ந்தோம்.
வரும் வழியில் ஒரு தொங்கு பாலம்
2 comments:
கோவிலின் விளக்கங்கள் அருமை... தொடர்கிறேன்...
மிக்க நன்றி, தொடருங்கள் ஐயா.
Post a Comment