பவிஷ்ய பத்ரிநாதர் தரிசனம் -2
சுயம்பு பவிஷ்ய பத்ரிநாதர்
சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இந்த சுபாயி கிராம சார்பாஞ்ச்( கிராம பஞ்சாயத்து தலைவர்) இல்லத்தில் ஒரு சிறு சிற்றுண்டி விடுதி உள்ளது, நாம் மேலே மலையேறும் போது சொல்லிவிட்டு சென்றால் நாம் பெருமாளை சேவித்து விட்டு வருவதற்குள் உணவு தயார் செய்து விடுகின்றனர். அவர்களாகவே அவரது சிறுவனை வழி காட்டுவதற்காக துணையாகப் அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு அன்றைய தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். மேலே செல்ல பாதையே இல்லை என்று சொல்லலாம் நாம் வயலில் வரப்புகளில் நடந்து செல்வது போல ஆப்பிள் தோட்டங்களின், ராஜ்மா தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளின் இடையே அழைத்து சென்றான்.
கொண்டல்கள் கொஞ்சும் உச்சிப் பகுதியை நெருங்குவதால் பாதை செங்குத்தாகிக்கொண்டே வந்தது மேலே செல்ல செல்ல ஊசியிலை மரங்கள்தான் கண்ணில் பட்டன. நடுவே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மரங்களில் உள்ள ஆப்பிள்களை நம்மூரில் நாம் கல் வீசி மாம்பழம் சாப்பிடுவது போல இங்கு ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டே உச்சியை அடைந்தோம். வழியில் பல வண்ண இமயமலையின் பறவைகளைக் கண்டோம். வழிகாட்டி இல்லாமல் நிச்சயமாக இங்கு வந்திருக்க முடியாது என்பது திண்ணம்.
மலர் வனங்களிடையே மேலே ஏறுகின்றோம்
கொண்டல்கள் கொஞ்சும் உச்சிப் பகுதியை நெருங்குவதால் பாதை செங்குத்தாகிக்கொண்டே வந்தது மேலே செல்ல செல்ல ஊசியிலை மரங்கள்தான் கண்ணில் பட்டன. நடுவே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மரங்களில் உள்ள ஆப்பிள்களை நம்மூரில் நாம் கல் வீசி மாம்பழம் சாப்பிடுவது போல இங்கு ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டே உச்சியை அடைந்தோம். வழியில் பல வண்ண இமயமலையின் பறவைகளைக் கண்டோம். வழிகாட்டி இல்லாமல் நிச்சயமாக இங்கு வந்திருக்க முடியாது என்பது திண்ணம்.
வழியெங்கும் ஆப்பிள் பழசோலைகள்
மஞ்சு கொஞ்சு மலை முகடுகள்
மலை உச்சி சுயம்பு பவிஷ்ய பத்ரிநாதர் ஆலயம்
|
தனியாக ஒரு சிறிய கோயில் என்னும் ஒரு ஒற்றை குடிசையில் துணைக்கு பறவைகள் மட்டுமே இருக்க பவிஷ்ய பத்ரி பெருமாள் சேவை சாதிக்கின்றார். கோபுரமும் கிடையாது. நாங்கள் சென்ற சமயம் சன்னதியின் முன் மண்டபம் மற்றும் மடப்பள்ளி கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குடிசையாகத்தான் இக்கோவில் இருந்தது. சுபாயி கிராம மக்கள் இப்பணியை தற்போது மேற்கொண்டிருக்கின்றனர். அருகில் உள்ள சாஜா என்னும் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தின் ஒரு சாது வந்து விளக்கேற்றி வைத்திருந்தார். பனி இல்லாத போது அவர் வந்து பூஜை செய்து செல்வாராம். பெருமாள் சுயம்பு மூர்த்தி எந்த வித அலங்காரமும் இல்லாமல் சேவை சாதிக்கின்றார் நெற்றியில் திருமண் மட்டும் உள்ளது. இடையில் ஒரு ஆடை அவ்வளவுதான். ஆனாலும் இவரை சேவித்தவுடன் மனதில் ஒரு பெரிய நிம்மதி இவ்வ்வ்வ்வ்வளவு தூரம் மலையேறி வந்த அலுப்பு எல்லாம் போய்விட்டது.
மலை உச்சி என்பதால் ஊசியிலைக் காடுகள்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப்பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவோம்
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போயப்பிழையும் புகுதருவான்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் எனும் திருப்பாவை பாசுரம்தான் மனதில் தோன்றியது. இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வந்த அலுப்பெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. சூரியனைக் கண்டதும் பனி மறைவது போல அனைத்து வலியும் ஒரே கணத்தில் போய் விட்டது. மலையின் சென்னி என்பதால் காற்றிலேயே குளிர் இருந்தது. பறவைகளின் சத்தம் தவிர எந்த இடையூறும் இல்லை தனிமையில் அமர்ந்து அற்புதமாக தியானம் செய்ய ஏற்ற இடம் அப்படியே தியானத்தில் அமர்ந்து பெருமாளை வணங்கினோம். அவர்களிடம் விசாரித்தபோது அதிகமாக யாரும் இங்கு வருவதில்லை எப்போதாவதுதான் உங்களைப் போல சில பகதர்கள் வருகின்றனர் என்று கூறினார்கள்.
அப்போது அங்கு வந்த சாஜா கிராம ஆசிரம சாது வேறு ஒரு குறுக்கு வழியில் எங்களை கீழே அழைத்து சென்றார். அவர் நடுவில் உள்ள அவர்களது ஆசிரமத்தில் யோகா பயிற்சி அளிக்கின்றார்களாம். அவருடைய குருநாதர் லால் பாபா சென்ற வருடம் வைகுண்டப் பதவி அடைந்தாராம். வெயில் காலத்தில் வந்து யோகா கற்று செல்லலாம் தங்கும் வசதிகளும் உள்ளன என்றனர்.
அப்போது அங்கு வந்த சாஜா கிராம ஆசிரம சாது வேறு ஒரு குறுக்கு வழியில் எங்களை கீழே அழைத்து சென்றார். அவர் நடுவில் உள்ள அவர்களது ஆசிரமத்தில் யோகா பயிற்சி அளிக்கின்றார்களாம். அவருடைய குருநாதர் லால் பாபா சென்ற வருடம் வைகுண்டப் பதவி அடைந்தாராம். வெயில் காலத்தில் வந்து யோகா கற்று செல்லலாம் தங்கும் வசதிகளும் உள்ளன என்றனர்.
மஞ்சள்நிற கடுகுப்பூக்கள் ரோஜா நிற
கோதுமைப்பூக்களுடன் வயல்கள்
புல் மேயும் கால்நடைகள்
குறிஞ்சி நிலமான மலை வாழ் மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது அருமையாக இன்று புரிந்தது. இறங்கும் போது மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும் கடுகு தோட்டத்தையும் ரோஜா நிற கோதுமை (buck wheat) தோட்டத்தையும் அருகருகில் கண்டு இயற்கையன்னையின் அற்புதங்களைக் கண்டு வியந்தோம். வரும் வழியில் மலையில் இருந்து ஓடி வரும் நீரினால் இயங்கும் மாவரைக்கும் இயந்திரங்களை கண்டு அதிசயித்தோம். சுபாயி கிராமத்தின் சார்பாஞ்சுக்கு சொந்தமான மாவரைக்கும் இயந்திரங்களாம் அவை. அரைத்த மாவின் ஒரு பகுதியை கூலியாக எடுத்துக்கொள்வார்களாம். மேலே உள்ள ஆப்பிள் தோட்டங்கள் எல்லாம் இவர்களுக்கு சொந்தமானவைதானாம்.
சாஜா கிராம லால் பாபா யோகா ஆசிரமம்
கிராமத்தை அடைந்து உணவருந்தினோம். காலையில் இருந்து மலையேறிய களைப்பினால், நல்ல பசி உணவு தேவார்மிர்தமாக இருந்து. பச்சை ராஜ்மா குழம்பு, சப்பாத்தி(ரொட்டி), ஆப்பிள் ஊறுகாய், பாஸ்மதி அரிசி அன்னம் என்ற அந்த உணவு அருமையாக தயார் செய்திருந்தனர். இவ்வாறு எதிர்கால பத்ரிநாதர்களை அவர்களின் அருளால் இன்றே சேவித்த மன நிறைவுடன் கீழே இறங்கினோம்.
இறங்கும் போது யாரும் துணைக்கு வராததால் வழி மாறி சென்று விட்டோம், வழியில் ஓர் கிராமத்தில் விசாரித்த போது தபோவனத்தில் சுமார் ½ கி.மீ தூரம் தாண்டி சென்று இந்தப்பாதை முடியும் எனவே கவலைப்பட வேண்டாம், கீழே பாதையை அடைந்தவுடன் போன் மூலம் உங்கள் வண்டியை அழைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். இவ்வாறு எங்கள் வண்டி ஓட்டுனர் காலையில் கூறியது போல மாலை 4 மணி அளவில் திரும்ப தபோவனை அடைந்தோம். பின்னர் ஜோஷிர்மட் அடைந்து தேநீர் அருந்திவிட்டு விருத்த பத்ரிக்காக புறப்பட்டோம்.
எங்களது குட்டி வழிகாட்டி
இவர்கள் ஆப்பிளை துண்டு துண்டாக நறுக்கி காய வைத்து ஊறுகாய் செய்து குளிர் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்கின்றனர். நாங்கள் சென்ற சமயம் பல வீடுகளில் ஆப்பிள் மற்றும் ராஜ்மா காய வைத்திருப்பதைப் பார்த்தோம்.
No comments:
Post a Comment