பாண்டுகேஷ்வர் யோக பத்ரி
பாண்டுகேஷ்வர் ஆலய வளாகம்
முதலில் ஜோஷிர்மட் அடைவதற்கு சுமார் 20 கி.மீ முன்னதாக உள்ள பாண்டுகேஷ்வரில் யோக பத்ரிநாதரை சேவித்தோம். முக்கிய பாதையிலிருந்து சுமார் ½ கி.மீ கீழிறங்கி கிராமத்தில் உள்ள இவ்வாலயத்திற்கு செல்ல வேண்டும். பாண்டு ராஜா தனது இறுதி காலத்தை இங்குதான் கழித்தார்.
பாண்டவர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து தான் துவங்கினர். துர்வாச முனிவரின் சாபத்தால் பாண்டு இராஜா மான் ரூபத்தில் இங்கு தவம் செய்ய பெருமாள் தோன்றி சாப விமோசனம் அருளி, தலை சிறந்த புத்திரர்களை பெறுவீர்கள் என்று வரம் கொடுத்தார் என்று தல புராணம் கூறுகின்றது.
மலை இல்லம்
இவ்வாலயம் ASI அதாவது தொல்துறைத்துறையினரின் பாராமரிப்பில் உள்ளதைக்கூறும் பெயர்ப்பலகை.
பக்தியுடன் மூதாட்டி
யோக பத்ரிநாதர் சன்னதி
மிகவும் பழமையான கோயில். இரண்டு சன்னதிகள் உள்ளன. முதலாவதில் பஞ்ச
லோக மூர்த்தியாக அமர்ந்த கோலத்தில் கையில் சங்கு சக்கரம் ஏந்தி சேவை சாதிக்கின்றார் பஞ்ச பாண்டவர்களின் தந்தை பாண்டுவுக்கு வரம் அளித்த யோக பத்ரிநாதர். இவருடன் வரம் பெற்ற பாண்டுவும், அவரது இரண்டாவது மனைவியும் நகுல சகாதேவர்களின் தாயுமான மாத்ரியையும் தரிசனம் செய்கின்றோம். இரண்டாவது சன்னதியில் நின்ற கோலத்தில் வாசுதேவராக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.திருக்கரங்களில் பஞ்சாயுதங்கள் தாங்கியுள்ளார். கோயிலின் கோபுரம் இமயமலையின் ஆலயங்களின் கோபுரங்கள் உருளை
வடிவத்தில் மேல் பகுதி உருண்டை கல் மற்றும் கலசத்துடன் எழிலாக விளங்குகின்றது. சன்னதிக்கு வெளியே சிவலிங்கம் மற்றும் கணேசரும் அருள்
பாலிக்கின்றனர்.
அலக்நந்தாவின் கரையில் ஆலயம்
ஆலய தல புராணம்
பத்மாசனத்தில் திரு.தேஷ்பாண்டே அவர்கள்
ஆலய வளாகத்தின் ஒரு சிறு சன்னதி
அழகிய கல் நந்தி
கோவில் வளாகத்தில் அருமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒருமண்டபம் உள்ளது. இமய மலைகளின் ஆலயங்களைப் போல இவ்வலயத்திலும் ஒரே பிரகாரம்தான் உள்ளது. தானே அழைத்து தரிசனம் தந்த யோக பத்ரிநாதருக்கு மனதார நன்றி தெரிவித்து அடுத்த பத்ரியான பவிஷ்ய பத்ரிக்கு புறப்பட்டோம்.
No comments:
Post a Comment