Saturday, May 25, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -40

பத்ரிநாதர்      தரிசனம்  


வர்ண கலவையில் மின்னும் பத்ரிநாத் சிம்ம துவாரம்

சுற்றிலும் நம்மை மறைத்து விடுவது போல வளர்ந்திருக்கும் மலர் செடிகள், அவற்றில் பூத்து குழுங்கும் வண்ண வண்ண மலர்கள், அவற்றில் தேனை உண்ண ரீங்காரமிட்டு பறக்கும் தேனிகள், பல வண்ண பட்டாம்பூச்சிகள்  வானம் வேறு மப்பும் மந்தாரமுமாய் இருந்ததால்  அப்படியே கிறங்க வைக்கும் அற்புத காட்சி நாங்கள் ஏறி வந்த பக்கம் தவிர மற்ற மூன்று பக்கமும் நெடிதுயர்ந்த மலை முகடுகள் அவற்றிலும் பல வண்ண கம்பளம் போர்த்தியது போல மலர்ப் பாவாடை. அப்படியே சொர்க்க பூமி போல இருந்தது. ஆயிரம் ஆயிரம் மலர்கள், பல மலர்கள் கீழே விழுந்து கிடந்தன, இந்த அற்புத உலகத்திற்குள் சுமார் மூன்று கி.மீ தூரம் நடந்தோம்,  பல மலர்களைப் புகைப்படங்கள் எடுத்து குவித்தோம்.   மலர் வனத்திற்குள் மொத்தம்கி.மீ தூரம் செல்ல முடியும், அன்றே பத்ரிநாத் திரும்பவேண்டும் என்பதால் நாங்கள் பாதி தூரம் சென்று விட்டு  சுமார் 12 மணீயளவில் கீழிறங்கத் தொடங்கினோம்அற்புதமான ஒரு அனுபவத்தை தந்த அன்னை பார்வதிக்கு நன்றி தெரிவித்தோம்.


 மஹா பாரதம் எழுதிய கணேசர் குகை 

மெதுவாக கீழிறங்கி வரும் போது மேலிருந்து கங்காரியா கிராமத்தின் அழகைக் கண்டு இரசித்தோம்வழியில் மழை நின்று விட்டதால் சில மலர் ஆர்வலர்கள் மேலேறி வருவதைக் கண்டோம், ஒரு சீனர் எல்லா மலர்களையும் மிக அருகாமையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கங்காரியாவை டைந்து குருவின் லங்காரில் உணவருந்திவிட்டுஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கோவிந்த் காட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  இறங்கும் போது, அனைத்து வழியோரக் கடைகளிலும் ஹேம்குண்ட சாஹிப்பில் என்ன என்ன செய்யக் கூடாது என்பதைக் கூறும் பல  அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதை கவனித்தோம்முதல் நாள் மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படவில்லைஇன்றைய தினம் சுமார் 15 நிமிட இடைவெளியில் ஹெலிகாப்டர் இயக்கப்படுவதை கவனித்தோம்லக்ஷ்மண் கங்காவின் அழகை இரசித்துக்கொண்டே மலை இறங்கினோம்.  கோவிந்த காட் குருத்வாராவும் பனியை தாங்கும் விதமாக சாய்வு கூரைகளுடன் அமைந்துள்து அதன் பின்னே அனைவரும் தங்கும் விடுதி மூன்று மாடிக் கட்டிடமா உள்துகோவிந்த் காட்டை நெருங்கும் போது குருத்வாராவின் முழு அழகையும் லக்ஷ்மண் கங்காவும் அலக்ந்ந்தாவும் சங்கமமாகும் அழகையும் இரசித்தோம்.

ஒரு குதிரைக்காரரர் தனது குதிரையை மிகவும் துன்பப்படுத்தியிருப்பார் போல உள்ளது  அந்த குதிரை  அவரை நன்றாக உதைத்து  விட்டதுஅதற்குப்பின்  அது அவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் கீழே ஓடிக்கொண்டிருந்தது அவர் நொண்டி நொண்டி  அதைப் பிடிக்க அதன் பின்னே ஒடிக்கொண்டிருந்தார்அவரது இரண்டாவது குதிரையும் அதனுடன் ஓடிக்கொண்டிருந்தது.  கீழே செல்லும் வரை அவை இரண்டும் அவர் கையில் சிக்கவில்லை.  குருத்வாராவை அடைந்து குருவிற்கு நன்றி செலுத்திவிட்டு , பின்னிப்பிரசாதம் நண்பர்களுக்காக வாங்கிக்கொண்டு, cloak roomல் வைத்த பொருட்களை சேகரித்துக்சூடாக  அங்கு வைத்திருந்த தேநீரை அருந்தி விட்டு  பத்ரிநாத் செல்லும் பேருந்தை பிடிக்க நடந்து வந்தோம்அப்போது அந்த குதிரைக்காரர் காலில் கட்டுப்போட்டுக்கொண்டு நொண்டி நொண்டி நடந்து செல்வதை பார்த்தோம்பாவம் இனியும் எத்தனை நாட்களுக்கு அவருக்கு வருமானம் போனதோ தெரியவில்லை.

கேசவப் பிரயாகை (அலக்நந்தா மற்றும் சரஸ்வதி நதி கூடல்)

சிறிது நேரம் காத்திருந்த பின் பேருந்து வந்தது ,  கோவிந்காட்டிலிருந்து பத்ரிநாத் சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளதுபத்ரிநாதம் செல்லும் வழியில் மிகவும் அதிகமான நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதை கவனித்தோம்பேருந்து மிகவும்  மெல்லவே சென்றதுஅங்கு சென்ற பின்புதான் தெரிந்தது இந்த ருடம் நிலச்சரிவின் காரணமாக பத்ரிநாத்தில் LPG உருளை ஏற்றிய வாகனங்கள் வரவே இல்லை என்பதால் மண்ணெண்ணெய்யைத்தான் பயன்படுத்துகின்றனர் என்றும்,   மேலும் கங்கோத்ரி செல்லும் வழியில் ஒரு பாலம் சேதமடைந்து விட்டதாகவும் சுமார் ஒரு வாரம் முன்புதான் பின் புதிதாகக் கட்டப்பட்டு யாத்திரை துவங்கியது என்றும் கேள்விப்பட்டோம்.  வருடாவருடம் நிலச்சரிவுகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனஇவ்வாறு சங்கல்பித்துக் கொண்ட இரண்டு பயணங்களை அவன் அருளால் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பத்ரிநாதரின் திருப்பாதக் கமலங்களில் வந்து சரணமடைந்தோம்.

 சுமார் 7 மணியளவில் பத்ரிநாத் அடைந்தோம்சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஆனந்த் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை திருதேஷ்பாண்டே அவர்கள்  செய்திருந்தார்நான்கு பேருக்கும் ரே பெரிய அறை கிடைத்தது.  முதலில் தப்த குண்டத்தில் நீராடி புத்தாடை அணிந்து கொண்டு ஆதிகேதாரீஸ்வரரையும்ஆதி சங்கரரையும் தரிசனம் செய்து விட்டு பத்ரி நாதரை தரிசிக்க சென்றோம்.


மானா கிராம கண்டா கர்ணன் ஆலயம்

பத்ரிநாதருக்கு காலையில் திருமஞ்சனத்திற்கு பிறகு செய்யப்பட்ட அலங்காரம் ளையப்பட்டு  திருமேனி முழுவதும்  சந்தனத்துடன்  முகமண்டலம் மட்டும் தெரியுமாறு கம்பளியால் மூடிக்கொண்டபடி பெருமாளின் அற்புதமான சயனக் கோல  சேவை கிட்டியதுமற்ற மூர்த்திகளும் அதேபோல் கம்பளி மூடிய கோலத்தில் முகமண்டல சேவை சாதிக்கின்றனர்சயன ஆரத்தியும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியதுஇரவு பத்ரிநாதர் ஆலயத்தில் அற்புதமான பஜனை நடந்து கொண்டிருந்தது பக்தர்கள் ஆனந்தத்துடன்
ஸ்ரீமந் நாராயண், நாராயண்  ஹரி ஹரி
லக்ஷ்மி நாராயண், நாராயண்   ஹரி ஹரி
பத்ரி நாராயண், நாராயண்  ஹரி ஹரி
முக்தி நாராயண், நாராயண்   ஹரி ஹரி
ராம் நாராயண், நாராயண்   ஹரி ஹரி
ஷ்யாம் நாராயண், நாராயண்  ஹரி ஹரி
உத்தவ நாராயண், நாராயண்  ஹரி ஹரி
நாரத நாராயண், நாராயண்    ஹரி ஹரி
என்று நாம சங்கீர்த்தனம் செய்து ஆடிப் பாடிக்கொண்டிருந்தனர்.  திரு தேஷ்பாண்டே அவர்கள் தான் கொண்டு வந்திருந்த சந்தன மாலைகளை பத்ரி நாதருக்கும் , மஹா லக்ஷ்மித் தாயாருக்கும் மறு நாள் காலை அலங்காரத்திற்காக  அங்கிருந்த பட்ர்களிடம் அளித்தார்.


ஸ்வர்க்காரோஹணி செல்லும் பாதை

 மறு நாள் அதிகாலை பெருமாளுக்கு நடக்கும் அற்புதமான திருமஞ்சனமும்அலங்கார தரிசனமும் இரண்டாம் முறையா திவ்யமாக சேவித்தோம்கர்ப்பகிரகத்தின் சுவர்கள் தங்க கவசம் பூண்டுள்ளன அவற்றில் பல மலர்கள். கதவுகளின் வெள்ளி கவசத்தில் சங்கு சக்கரம், கவரி வீசும் வைணவர்கள், மாலை அணிவிக்கும் தேவதைகள் என்று அருமையான வேலைப்பாடு. பெருமாளும் தாயாரும் தேஷ்பாண்டே அவர்களின் சந்தன மலைகளை ஏற்றுக்கொண்டு அளித்த தரிசனம் கண்டு மகிழ்ந்தோம்.  இந்த வருடம் குபேரன் காசு  தங்க முலாம் பூசப்பட்ட காசாக கிடைக்கின்றதுஇதன் ஒரு புறம் யோக கோலத்தில் அம்ர்ந்திருக்கும் பத்ரி நாதர் கோலமும் மறுபுறம் கேதாரீஸ்வரரின் சுயம்பு கோலமும் உள்ளதுஅந்த காசுகளை வாங்கி குபேரன் முன்பு வைத்து பூசை செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தருவதற்காக வைத்துக் கொண்டோம்இராவல் அவர்களை தரிசனம் செய்து பத்ரிநாதரின் சந்தன பிரசாதமும்துளசியும்,சுவாமிக்கு சார்த்திய வஸ்திரமும் பெற்று மகிழ்ந்தோம்.


பாமினி  கிராமம்

இந்த வருடம் சன்னதிக்கு பின் புறம் இருந்த நரநாராயணர் சன்னதி தற்போது ஹனுமன் மற்றும் கண்டா கர்ணன் சன்னதியருகே மாற்றப்பட்டுள்ளதை கவனித்தோம்இந்த சன்னதியில் ஊர்வசியின் சிலைகளும் உள்ளதை கவனித்தோம்அனுமனின் கையில் உள்ள சஞ்சிவீ மலையில் அருமையான சிவாலயம் செதுக்கியுள்ளதை கவனித்தோம்ஆலயத்தின் பின்புறம்  உள்ள நரசிம்மர் ஆலயம் சென்று தரிசித்தோம்வரும் வழியில் உள்ள அருட்காட்சியகத்திற்கு சென்று அங்கு பார்வைக்கு வைத்துள்ள பழைய நகைகளையும்பத்ரிநாத் ஆலயத்தின் முந்தைய ரூபங்களையும் கண்டு களித்தோம்.

மின் ஒளியில் மிளிரும் சிம்ம துவாரம்

பின்னர் மானா மற்றும் பாமினி கிராமத்திற்கு சென்றோம்இத்தடவை மானா கிராமம் சென்ற தடவை இருந்ததை விட செழிப்பாக இருந்ததாக தோன்றியதுபத்ரிநாத் வரும் பக்தர்கள் பெரும்பாலோர் தற்போது  மானா கிராமம் வருவது அதிகமாகி உள்ளதாக தெரிந்ததுநமது அரசு இப்போது சீன(திபெத்எல்லை வரை பாதை அமைக்கும் பணியை துவங்கியுள்ளது அனால் சீனர்கள் 25  வருடங்களுக்கு முன்னரே இந்தப்பணியை முடித்து விட்டனர்இந்த முறையும் கேசவ பிரயாகை மற்றும் பீமனின் பாலம் வரை சென்றோம்


புத்தக வடிவில் வியாசர் குகை


இத்தடவை ஒரு தாரை மானசரோவர் தாரா என்று சரஸ்வதி நதியில்  விழுவதைப் பார்த்தோம்அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது  திருக்கயிலாயம் மானசரோவர்  இங்கிருந்தும் செல்ல முடியும் ஆனால் மிகவும் கடினமான பாதை என்பதால்  பக்தர்கள் இவ்வழியாக செல்வதில்லை என்று  கூறினார்கள் . இங்கும் ஒரு ஹாத்தி பஹாட் (யானை பர்வதம்) உள்ளது. பனி படர்ந்த நர நாராயண சிகரங்களை கண்டு களித்தோம். கம்பளித் தொப்பிகள், அமரும் கம்பளி விரிப்புகள், ஸ்வெட்டர்கள் வாங்கினோம் மானா கிராமத்தில் கண்டா கர்ணன் ஆலயத்தையும் தரிசனம் செய்தோம்.

 பின்னர் பாமினி   கிராமம் சென்று நந்தா தேவி ஆலயத்தையும் ஊர்வசி ஆலயத்தையும் தரிசித்து வந்தோம்.  பாமினி கிராமம் செல்லும் வழியில் சிறு நீர் மின் நிலையம் உள்ளதைப் பார்த்தோம். இங்கு அநேகமாக  எல்லா கிராமங்களிலும் நந்தா தேவிக்கு ஆலயம் உள்ளதுபெருமாளுக்கு சாற்றும் துளசி மாலைகளும்பித்ரு பூல் மாலைகளும் இந்த பாமினி கிராம மக்கள் தங்கள் இல்லங்களில் சிரத்தையுடன் கட்டும் அழகைக் கண்டு களித்தோம்இக்கிராமத்தில் ஆப்பிள் தோட்டங்களும் உள்ளனஒரு ஆப்பிள் தோட்டத்தில் பழம் பறித்துக்கொள்ள அனுமதி தந்தனர்.



பெரியவர் சாந்தகுமார் தேஷ்பாண்டே

பின்னர் மாலை நடைபெறும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்து கொண்டு பெருமாளின் திருமுன்னர் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமமும்ஸ்தோத்திரமும் சேவித்தோம்இரவு பெருமாளுக்கு  தாயாருக்கும் நடைபெறும்  போக் (நைவேத்தியபூஜையையும்சயன கோல சேவையையும்சயன ஆரத்தியையும்  சேவித்தோம்இன்றும் பஜனை நடைபெற்றது மற்றும் அருமையான பிரசங்கம் ந்து கொண்டிருந்தது அவர் உத்தவரின் பெருமைகளை விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.  இவ்வாறு அவரின் அருளினால், அதிகாலையிலிருந்து பெருமாள் உறங்கச்செல்லும் நேரம் வரையிலான அனைத்து சேவைகளையும் மூன்று ஆண்டுகளில் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.
.
 மின் விளக்குகளின் ஒளியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள் சங்கு சக்கரங்களுடன் சிம்மதுவாரம் மிளிரும் அழகை கண்டு களித்தோம்.  அங்கேயே தங்கியிருக்கும் பெரியவர்  திருசாந்த குமார் தேஷ்பாண்டே அவர்கள் வந்து ஆசி ங்கினார்மறு நாள் மற்ற நான்கு பத்ரிநாதர்களையும் தரிசனம் செய்ய ஏதுவாக சீருந்து வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதிகாலை தப்த குண்டத்தில் புனித நீராடி,  பத்ரிநாதரை  மீண்டும் ஒரு தடவை சேவித்துவிட்டு மற்ற பத்ரிநாதர்களை சேவிக்கப்  புறப்பட்டோம்.

No comments: