Tuesday, May 28, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -42

பவிஷ்ய பத்ரிநாதர் தரிசனம் -1

பவிஷ்ய பத்ரிநாதர் (சுபாயி கிராமம்)


ஜோஷிர்மட்டிலிருந்து மலாரி செல்லும் பாதையில் உள்ள தபோவன் என்னும் இடத்திலிருந்து பவிஷ் பத்ரிக்கு 3 கி.மீ நடைப்பயணம் செய்து அடைய வேண்டும் மற்ற பத்ரிகளுக்கு நாம் வண்டியில் சென்றே சேவித்து விடலாம் இந்த ஒரு பத்ரிக்குத்தான் நடைப்பயணம் அவசியம்நாங்கள் சுமார் 10 மணி அளவில் ஜோஷிர்மட்டிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ள  தபோவன்   என்னும் ஊரை  அடைந்தோம்தபோவனத்திற்கு சற்று முன்னர் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது நாங்கள் சென்ற சமயம் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது  ஆயினும் கந்தக பூமியிலிருந்து சுடு தண்ணீர் நீராவியுடன் வந்து கொண்டிருந்ததுஎங்கள் வண்டி ஓட்டுநர் தாங்கள் தரிசனம் செய்து விட்டு வருவதற்கு மாலை சுமார் 4  மணி ஆகிவிடும் என்று கூறினார்மூன்று கிமீதூரத்திற்கு இவ்வளவு நேரமா ஆகப்போகின்றது என்று அலட்சியமாக கூறிவிட்டு மலையேற சென்றோம்மலையேறும் சமயம் கொறிப்பதற்காக  பிஸ்கட்,  காரம் முதலியன அங்குள்ள ஒரு கடையில் வாங்கிய போது பவிஷ்ய பத்ரி செல்லும்  இருவரை சந்தித்தோம்வழித்துணையாக அவர்களும் வந்தார்கள்.


தபோவன் சுடுநீர் ஊற்று


ஒற்றையடிப்பாதைதான் இரு பக்கமும் பசுமையான மரங்கள் நிழல் கொடுத்துக்கொண்டிருக்க மலையேறுவது சிறிது கடினமாகத்தான் இருந்ததுகற்களைகொண்டு சில இடங்களில் படி போல அமைத்துள்ளனர்முன்னர் பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த செங்குத்தான மலையில் தலையிலோமுதுகிலோ சுமையை சுமந்து கொண்டு எப்படி பயம் இல்லாமல் செல்கின்றார்கள் என்று வியந்திருக்கின்றோம்அதற்கு இன்று விடை கிடைத்ததுபிறந்ததில் இருந்து இதே வழியில் செல்வதாலும்நமக்கு சமவெளியில் உள்ள ஒற்றையடிப்பாதை போல இவர்களுக்கு இந்த பாதை என்ற இரகசியம் புரிந்தது.  நடு நடுவே பாதை  மழையின் காரணமாகவும்சிறு ஆறுகள் ஓடுவதாலும் ஈரமாகி வழுக்கலாக இருந்தது மெல்ல மெல்ல அஷ்டாக்ஷர மந்திரம் ஜெபித்துக் கொண்டே மலை  ஏறினோம்.  சுற்றிலும் மஞ்சு கொஞ்சும் மலைத் தொடர்களநெடிய மரங்கள்கீழே பாம்பு போல வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருக்கும் அலக்நந்தா ஆறு அதன் கரையோரமாகவே செல்லும்  கருவண்ண பாதை, , பச்சைப் பசேல் என்று இயற்கை அன்னை ஜொலித்துக்கொண்டிருக்கஅருமையான தூய காற்றை சுவாசித்துக்கொண்டே மலையேறினோம்.  அதிகமான ஜன நடமாட்டம் இல்லை நாங்கள் மட்டும்தான்பறவைகள் மற்றும் வண்டுகளின் ரீங்காரம்  மலையேறுவதே ஒரு அற்புதமான அனுபவமாகத்தான் இருந்தது

                       
வழியெங்கும் மலர்கள்

பவிஷ்யபத்ரிநாதரை பூஜிக்கும் பட்டருடன் தினேஷ்

எங்களுடன் வந்த இருவர் சுபாயீ என்னும் கிராமத்தை சார்ந்தவர்கள்கீழே தபோவன் வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அந்த சுமைகளை தங்கள் தோளில்  சுமந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்அவற்றுள் ஒருவர்  சுபாயி கிராமத்தின் பவிஷ் பத்ரிநாதர் ஆலய பட்டர்ஆதி சங்கரருடன் கர்னாடகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களாம்தற்போது இங்கேயே தங்கி விட்டோமென்றார்இக்கோவிலின் மூர்த்தி  ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட மூர்த்தி என்று பெருமையாக   கூறினார்இதுவல்லாமல் மலை உச்சியில் ஒரு கோவில் உள்ளது  அதில் ஒரு கற்சிலையில் சுயம்பு பத்ரிநாதர் தோன்றியுள்ளதாகவும் அதையும் பவிஷ்ய பத்ரி என்று கருதுகின்றனர் என்றார்.



 சுபாயி கிராமம் செல்லும் வழியில்

தற்போது நாங்கள் ஏறும் வழி தவிர,   பொருட்களை கொண்டு செல்லத்தக்க  குதிரை செல்லத்தக்க இனியொரு பாதை தபோவனில் இருந்து உள்ளது  குளிர் காலத்தில் பொருட்களை கொண்டு செல்லவும் ப்பாதையை உபயோகப்படுத்துகின்றோம் என்று கூறினார்கள்பனி காலத்தில் என்ன செய்கின்றீர்கள்இங்கேயே வசிக்கின்றீர்களா அல்லது வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்கின்றீர்களாஎன்று கேட்டோம்என்ன செய்ய முடியும் முழங்கால் அளவு பனியிலும் இங்கேதான் வசிக்கின்றோம்பனிக்காலத்திற்கு வேண்டிய ஆப்பிள் ஊறுகாய்ராஜ்மாபருப்புகோதுமைஅரிசி முதலிய உணவுப் பொருட்களை   முதலிலேயே சேகரித்து வைத்துக்கொள்கின்றோம்அச்சமயம் அதிகம் வெளியே செல்வதில்லை இங்கேயேதான் வசிக்கின்றோம் என்றார்பனியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவே இங்குள்ள வீடுகள் எல்லாம் இரண்டடுக்களாக கட்டப்பட்டுள்னபனிக் காலத்தில் மேல் மாடியில் வசிக்கின்றோம் வெயில் காலத்தில் கீழே வந்து விடுகின்றோம் என்றார்.  குழந்தைகளின் படிப்பு என்னவாகும் என்று கேட்டதற்கு  கீழே தபோவனில் உள்ள பள்ளிகளில் சேர்த்து விடுகின்றோம் விடுதியில் தங்கி படிக்கின்றனர் என்று கூறினார்கள்எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் இவர்கள் வசிக்கின்றனர் என்று புரிந்தது.

                                                          
                        
ஒரு மலை இல்லம் 

 சத்யபால் மஹராஜ் என்னும் உத்த்ரகாண்ட் மாநில எம்.பி ஒருவர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இங்கு  வாங்கி போட்டுள்ளாராம்நம்மூரில் நிலத்திற்கு விலை ஏறுவது போலத்தான் இங்கும் நிலத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது என்று கூறினார்கள்எதிரே தெரியும் நகரம்தான் அவுலி எனப்படும் நகரம் இங்கு பனிக்காலத்தில் பனி சறுக்கு விளையாட்டுக்கள் நடைபெறுகின்றது அங்கு செல்ல இழுவை வண்டிகளும்(Rope way)  உள்ளனமலாரி தான் நமது இந்திய மற்றும் திபெத்திய எல்லைக் கிராமம் என்று பலவித தகவல்களை அளித்தனர்இவ்வாறு  அவர்களுடன் அளவாளவிக் கொண்டே நடு நடுவே கட்டப்பட்டுள்ள தங்கு மடங்களில் சிறிது நேரம் அமர்ந்து  இளைப்பாறிக் கொண்டு , கிராமங்களில் முதியவர்கள் கம்பளி விரிப்புகளை நெய்யும் அழகையும் கண்டு இரசித்துக்கொன்டேஇடை இடையே நீர் அருந்திக் கொண்டு  மெல்ல மெல்ல மலையேறி இரண்டு மூன்று கிராமங்களைக் கடந்து சுபாயி கிராமத்தை அடைந்தோம்.


பவிஷ்ய பத்ரிநாதர் ஆலயம்(சுபாயி கிராமம்)

மேலே செல்ல செல்ல ஆப்பிள் தோட்டங்கள், ராஜ்மா என்னும் கடலை  முதலியன பயிரிடப்பட்டிருந்த வயல்களைக் கண்டோம். கிராமங்களின் இல்லங்களில் பல வண்ண அரிய மலர்கள் எழிலாக பூத்திருந்தன.   சுபாயி கிராமத்தின் முதலில் ஆதி சங்கரரால் பூஜிக்கப்பெற்ற பத்ரிநாதரை சேவித்தோம்எங்களுடன் வந்த பட்டர் அவர்கள் அற்புதமாக சேவை பண்ணி வைத்தார்.   சுவாமி சாளக்கிராம மூர்த்தம், நின்ற கோலத்தில் , பட்டூப்பீதாம்பரம் உடுத்தி திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி தங்க மகுடத்தில் மயிற்பீலி விளங்க எண்ணற்ற சாளக்கிராமங்கள்  மார்பிலிலங்க சர்வாபரண பூஷிதராய், ஷேத்ர  தேவர்களுடன் அற்புதமாகச் சேவை சாதிக்கின்றார் பவிஷ்ய பத்ரிநாதர். சிறிய கோயில்தான் முழுதும் மலர்ச்செடிகள் நிறைந்துள்ளன. ஒரே பிரகாரம், இமயமலையின் கோயில்களைப் போன்ற கோபுரம்தான்  ஆனால் சற்று சிறிது உயரம் குறைவாக உள்ளது




முன் மண்டபத்தில் அமர்ந்து அருமையாக மனதார பெருமாளை சேவித்தோம். எந்த பிறவிலேயோ வந்து சேவிக்க வேண்டிய பெருமாளை இந்தப் பிறவியிலேயே தரிசனம் செய்யும் வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்தினோம் இனி பிறவி வேண்டாம் என்று வேண்டினோம். இந்த வருட யாத்திரையை துவக்கும் போது கூட பஞ்ச பத்ரி செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கவில்லை  இருந்தும் தானே அழைத்து அருமையாக சேவை தந்தருளியது அவரின் அளவில்லா கருணையாகும்,    கற்பூர ஆரத்தி சேவைக்குப்பின்  பின்னர் பிரசாதமாக பெருமாளுக்கு சார்த்திய வஸ்திரமும், திலகமும் அளித்தார் பட்டர் அவர்கள். சிறிது நேரம் அந்த ஆராவமுதனை அற்புதமாக தரிசித்துவிட்டு  பஜனை பாடல்கள் பாடி ஆராதித்து விட்டு பிரகார வலம் வந்தோம் பிரகாரத்தில் விநாயகருக்கும், ஷேத்ரபாலகருக்கும், லக்ஷ்மி நாராயணருக்கும் மற்றும் (9 தலை) ஆதிசேனுக்கும் தனி சிறிய சன்னதிகள் உள்ளன. மிகவும் அற்புத தரிசனம் தந்த பாற்கடல் நாதனுக்கு  அநேக கோடி தண்டனிட்டு இவ்வளவு தூரம் மலையேறி வந்த விட்டோம், இனி எப்போது இப்பக்கம் வருவதற்கு வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை என்று மலை மேல் உள்ள சுயம்பு   பவிஷ்ய பத்ரிநாதரையும் தரிசனம் செய்து விடலாம்  என்று புறப்பட்டோம்.


 ஆலயத்தின் பெரிய கலை அம்சம் நிறைந்த ணி 

அடியோங்களுக்கு வழி காட்டிய பட்டர்

2 comments:

துளசி கோபால் said...

உங்க புண்ணியத்தில் நானும் பெருமாளை சேவிச்சுட்டேன்.

ஆமாம்.... திரும்பி வண்டிக்குப்போய்ச் சேர்ந்தபோது மணி என்ன? நாலா?

S.Muruganandam said...

ஆமாம் துளசியம்மா, வண்டி ஓட்டுநர் கூறியது சரியாகத் தான் இருந்தது.

அடுத்த பதிவில் மலை உச்சி சுயம்பு பத்ரிநாதரையும் வந்து சேவியுங்கள் துளசியம்மா.