Monday, December 30, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 78

பத்ரிநாதரை தரிசித்த பின்னர் இவ்வாண்டு ஜோஷிர்மடத்தில் கற்பக விருட்ச மற்றும் ஸ்படிக லிங்க தரிசனம் பெற்று, கேபிள் காரில் குளிர் கால விளையாட்டிற்கு புகழ் பெற்ற அவுலி சென்று திரும்பி ஹரித்வார் வந்து மத்வாஸ்ரமத்தில் தங்கினோம். அதிகாலை எழுந்து அருகில் உள்ள படித்துறைக்கு சென்று கங்கையில் நீராடினோம். மத்வாச்ரமத்தினரால் கட்டபட்டுள்ள உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் சென்று கிருஷ்ணரையும், மத்வாச்சாரியாரையும் சேவித்தோம்.



ஹரித்வார் மத்வாஸ்ரமம்




கங்கையில் நீராடிய படித்துறை


புனித கங்கை


உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்


மத்வாச்சாரியார் சரிதம்


கருடன்

காலை உணவிற்குப்பின்  முதலில் ரிஷிகேசம் தரிசிக்க சென்றோம்அன்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் நேராக லக்ஷ்மண்ஜூலா சாலையில்
 அமைந்துள்ள  திருமலை-திருப்பதி   தேவஸ்தான   வேங்கடேசர் ஆலயம் சென்றோம்திருவேங்கடவனையும்அலர்மேல்  மங்கைத்தாயாரையும் சேவித்தோம்விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்அருகில் அமைந்துள்ள கங்கா கௌரி சமேத சந்திரமௌலீஸ்வரரையும் தரிசித்து அருள்   பெற்றோம்இவ்விரண்டு ஆலயங்களும் நமது தென்னாட்டு இராஜகோபுரத்துடன்    அமைந்துள்ளனபூசைகளும் நமது முறைப்படி நடைபெறுகின்றதுஅடுத்து

 இராம்ஜூலா வரை     ஆட்டோவில் சென்று கங்கைக் கரையில் லக்ஷ்மண்ஜூலா வரை நடந்து வந்து
 வழியில்   உள்ள சில ஆலயங்களை தரிசித்தோம்இவ்வாறு ரிஷிகேசத்தை சுற்றிப் பார்த்துவிட்டு    ஹரித்வார் வந்தடைந்தோம்.


ரிஷிகேஷ் வெங்கடேசர் ஆலயம்



பெருமாள் - தாயார் விமானங்கள்





சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் 




இராம் ஜூலா பாலம்







ரிஷிகேசத்தில் கங்கை நதி





ஹரித்வாரத்தில் கங்கை அம்மன் ஆலயம் 


புது வர்ணத்தில் மணிக்கூண்டு




ஹரித்வார் புகைவண்டி நிலையம்


பழைய டெல்லி புகைவண்டி நிலையம்



அடியோங்களை இந்த யாத்திரைக்கு அழைத்து சென்ற திரு.தேஷ்பாண்டே அவர்கள்யோகாதியானம் முறையாக செய்பவர் என்பதால் பாபா ராம்தேவ் அவர்களின் மருத்துமனைக்கு அழைத்து சென்றார்அங்கு ஒரு அன்பர் யோகாசனங்களைப் பற்றி விளக்கினார்யோகாசனத்தால் எவ்வாறு பல்வேறு வியாதிகள் குணமாகின்றன என்றும் விவரித்தார்அங்கிருந்து ஹரி-ஹா- பௌரி வந்து கங்கா ஆரத்தி தரிசித்தோம்.
 கங்கையின் புனித நீரை சேகரித்தோம்கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினோம்ஹரித்வாரிலிருந்து இரவு கிளம்பும் முசோரி விரைவு வண்டியில் பயணம் செய்து    டெல்லி வந்தடைந்தோம்அங்கு வசந்த்குஞ்ச்சில் உள்ள மத்வாஸ்ரமத்தில் தங்கினோம்மாலை பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தோம்இவ்வாறு அவன்    அருளால் அவன் தாள் வணங்க முடிந்ததுஎவ்வித சிரமமும் இல்லாமல்  திட்டமிட்டதை விட   அதிகமாக தரிசனம் கிட்டியதும் அவனருள்தான்இவ்வாறு இவ்வருட யாத்திரை மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றதுஇத்துடன் இத்தொடரின் பதிவுகள் நிறைவடைகின்றன.   வந்து தரிசித்து ஊக்கமும் அளித்து சென்ற அனைவருக்கும் நன்றிஅனைவரும்  
வாழ்க வளமுடன்.    

சுபம்

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான யாத்திரை - இனிதே முடிந்த யாத்திரை.

தொடரட்டும் பயணங்கள்.

கோமதி அரசு said...

//அவன் அருளால் அவன் தாள் வணங்க முடிந்தது. எவ்வித சிரமமும் இல்லாமல் திட்டமிட்டதை விட அதிகமாக தரிசனம் கிட்டியதும் அவனருள்தான். இவ்வாறு இவ்வருட யாத்திரை மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது. இத்துடன் இத்தொடரின் பதிவுகள் நிறைவடைகின்றன.//

இனிய யாத்திரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அருமையான பதிவு.
படங்கள் எல்லாம் அழகு. மணிகூண்டு புதிய வண்ணத்தில் அழகு.

நாங்களும் உங்களுடன் தொடர்ந்து பயணித்த அனுபவம் கிட்டியது.
நன்றி.

S.Muruganandam said...

இன்னொரு பயண அனுபவத்துடன் விரைவில் சந்திக்கின்றேன் வெங்கட் ஐயா. தொடர்ந்து வந்ததற்கு மிக்க நன்றி.

S.Muruganandam said...

இறைவன் அருளால் இன்னும் பல யாத்திரைகளை பதிவிட வேண்டியுள்ளது. விரைவில் மற்றொரு தொடருடன் வருகின்றேன். மிக்க நன்றி கோமதி அம்மா.