பத்ரிநாதர் தரிசனம்
பத்ரிநாதம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கு செல்லவும்
ஸ்ரீஇராமானுஜர்
சின்ன ஜீயர் சுவாமிகளால், இராமானுஜருடைய ஆயிரமாவது வருட ஜெயந்தி மஹோத்சவத்தின் போது பத்ரிநாத்தில் அமைக்கப்பட்ட இராமானுஜரின் திருவுருவச்சிலை.
கருடாழ்வார் சன்னதி ( பூட்டிக்கிடக்கிறது)
பத்ரிநாதரின் சிம்ம துவாரம்
நாரத குண்டம்
பத்ரிநாதத்தில் தப்த குண்டம் மற்றும் நாரத குண்டம் என்று இரண்டு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. புத்தர்கள் எடுத்து வீசிய பத்ரிநாதரின் சிலையை ஆதி சங்கராச்சாரியார் நாரத குண்டத்தில் இருந்து எடுத்து புனர் பிரதிஷ்டை செய்தார்.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவிலிருந்து இருந்து வந்த இக்குழுவினர் மூன்று நாட்கள் பத்ரிநாத்தில் தங்கி தினமும் மாலையில் பஜனைப் பாடல்கள் பாடினர்.
திரு.தனுஷ்கோடி மற்றும் திரு.தேஷ்பாண்டே அவர்கள்
பைரவி சக்கரம்
இமயமலையில், கேதார்கண்டத்தில், அலக்நந்தா நதி தீரத்தில், நர-நாராயண சிகரங்களுக்கிடையில் பைரவி சக்கரத்தின் மேல் பத்ரிநாதர் சேவை சாதிக்கின்றார்.
பத்ரிநாதரை பூசிக்கும் இராவல் அவர்கள்
மின் ஒளியில் சிம்ம துவாரம்
தேவாரப்பாடல் பெற்ற இந்திரநீல பருப்பதம் என்றழைக்கப்படும் நீலகண்ட சிகரம்.
அருகில் உள்ள கிராமத்தார்கள் பத்ரிநாதர் முற்றத்தில் பாடி ஆடும் காட்சி
வன்பெருவானகமுய்யவமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய
துன்பமிகுதுயரகல அயர்வொன்றில்லாச்
சுகம்வளர அகமகிழும்தொண்டர்வாழ
அன்பொடுதென்திசைநோக்கி பள்ளிகொள்ளும்
அணியரங்கன்(பத்ரிநாதன்) திருமுற்றத்து அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்கும் நாளே?
( பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் பாசுரம்)
( பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் பாசுரம்)
பைப் மற்றும் இவர்களின் டோல் வாத்தியம்இசைத்தவாரே ஆடிய அடியார்களின் ஆட்டத்தில், அடியோங்களும் கலந்து கொண்டோம்.
பத்ரிநாத் வருபவர்களின் வருகையை குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு பண்டிட். ஊர், கோத்திரப்பிரகாரம் பல தலைமுறைகளாக இவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வைத்துள்ளனர்.
இரண்டாம் நாள் மாலை இந்தியாவின் கடைசி கிராமமான மானா சென்றோம்.
தந்தத்தை உடைத்து வேத வியாசர் சொல்ல மஹா பாரதத்தை எழுதிய விநாயகர்.
வியாசர் குகை
சரஸ்வதி ஆறு ( வானவில்லைப் பாருங்கள்)
கேசவப்பிரயாகை
அலக்நந்தா சரஸ்வதி சங்கமம்
இவ்வருடம் அடியோங்கள் சென்ற சமயம் பித்ரு பக்ஷம் என்பதால் பித்ரு கடமையை பிரம்ம கபாலத்தில் நிறைவேற்றும் பாக்கியம் கிட்டியது. ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் கொய்ய அத்தலை சிவபெருமானுடைய கையில் ஒட்டிகொண்டது. பல தலங்களுக்கு சென்றும் பிரம்மகபாலம் பெருமானுடைய திருக்கரத்தை விட்டி விலகவில்லை. இறுதியாக பத்ரிநாதத்தில் பிரம்ம கபாலம் ஐயனது கரத்தில் இருந்து விலகியது. எனவே பிரம்மகபாலத்தில் பித்ரு காரியம் செய்வது நல்லது .
பத்ரிநாத்திலிருந்து திரும்பி வரும் வழியில் எத்தலத்தை தரிசித்தோம் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
4 comments:
இந்தியாவின் கடைசி கிராமமான மானாவிற்கு நாங்களும் சென்றோம்.
கடைசி டீ கடையில் டீ குடித்தோம்.
சரஸ்வதி நதிக்கு நீண்ட துரம் போக வேண்டும் என்று எங்கள் குழுவினர் வரவில்லை.
தனியாக நாங்கள் எப்படி போவது என்று போகவில்லை.
வியாசர் குகை பார்த்தோம்.
தொடர்கிறேன்.
மறு முறை சென்றால் அவசியம் சென்று தரியுங்கள் அவ்வளவு கடினமல்ல. தற்போது பாதைகளும் மேம்பட்டு விட்டன. மிக்க நன்றி.
அழகிய படங்களுடன் மிக இனிய தரிசனம் ...அருமை
இனி தொடர்கிறேன் ...
வாருங்கள் அனுபிரேம். மிக்க நன்றி
Post a Comment