Thursday, December 19, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 76



எவ்வித சிரமமும் இல்லாமல் பத்ரிநாத் அடைந்து, பத்ரிநாதரை திவ்யமாக சேவித்து, வழக்கம் போல விஷ்ணு சஹஸ்ரநாமம் சேவித்து, மறு நாள் காலையில் பெருமாளின் திருமஞ்சனம் சேவித்து, மஹாளய புண்ய காலத்தில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து காத்திருப்பார்கள் அச்சமயம் அவர்களுக்கான தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது  என்பதாலும், பத்ரிநாதத்தில் பிரம்ம கபாலத்தில் தர்ப்பணம் கொடுப்பது கயாவில் தர்ப்பணம் செய்வதை விட ஆயிரம் மடங்கு சிறப்பு வாய்ந்தது என்பதாலும்முன்னோருக்கான  கடமையை செய்து மிக்க திருப்தியுடன் திரும்பி வரும் போது லம்பா காம்வ் என்ற கிராமத்தின் அருகே முதல் நாள் பெய்த மழையின் காரணமாக பாதை மிகவும் சேறும் சகதியுமாக இருந்ததால் வண்டிகள் பயணிகளுடன் அனுமதிக்கபடவில்லை, எனவே அனைவரும் வண்டியிலிருந்து  இறங்கி அலக்நந்தா ஆற்றை ஒட்டி இருந்த ஒரு ற்றையடிப் பாதை வழியாக நடந்து அப்பகுதியை கடந்து பின் வண்டியில் ஏறிக்கொண்டோம். அவனது அருளால் இந்த யாத்திரையின் போது இச்சிறு அசௌகரியம் மட்டுமே ஏற்பட்டது. பின்னர் மாலை ஜோஷிர்மட் அடைந்தோம். இவ்விடத்தில் மழைக் காலம் ஆரம்பித்ததில் நிலச்சரிவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.  
அன்பர்களில் 



பாதை சேறும் சகதியுமாக இருந்ததனால் வண்டியில் இருந்து இறங்கி மாற்று வழியில் நடந்து செல்கிறோம்.





அலக்நந்தா நதிக்கரையோரம் 








சிலர் பனி நகரம் (Snow City) என்றழைக்கப்படும் அவுலி செல்லலாம் என்று விருப்பப்பட்டனர் என்பதால்ஜோஷிர்மட்டில்  இறங்கி விசாரித்தோம்அன்றைய தினத்திற்கான  இழுவை வண்டி (Rope car) இயக்கம் நிறுத்தப்பட்டது  மறு நாள் காலைதான் இனி துவங்கும் என்று கூறினர்எனவே அன்றிரவு ஜோஷிர்மட்டில் தங்க முடிவு செய்து GMVN விடுதியில் தங்கினோம்.  அவ்விடுதிக்கு எதிரில் ஆதி சங்கரர் ஞானம் பெற்ற கல்பவிருட்ச மரம் உள்ளது தரிசிக்கலாம் என்று சென்றோம்








ஆதி சங்கரர் இம்மரத்தினடியில் அமர்ந்து தவம் செய்து ஆத்ம  ஞானத்தை ஜோதி வடிவில்  பெற்றார் என்பதால் தனது வடக்கு திசைக்கான மடத்தை ஜோஷிர்மட்டில் நிறுவினார்தனது சீடரான தோடகாச்சாரியாரை  அதர்வண வேதத்திற்குரிய இம்மடத்திற்கு பீடாதிபதியாக்கினார்முதலில் 1200  வருடங்களுக்கு மேற்பட்ட கல்பவிருட்சத்தை  தரிசனம் செய்தோம்ஆதி சங்கரர் ஏற்றி வைத்த அகண்ட ஜோதியை வணங்கினோம்சிவபெருமானை ஆதி ஜோதீஸ்வரராகவும் தரிசனம் செய்தோம்.   இத்தடவை ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த குகையையும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியதுகுகையின் உள்ளே ஆச்சார்யார் அமர்ந்து தவம் செய்யும் சிலை ஒன்றை அமைத்திருக்கின்றனர்அங்கிருந்த குருக்களிடம் ஆதி சங்கரர் திருக்கயிலையில் இருந்து சிவபெருமானிடம் பெற்றுக் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கத்தையும் தரிசிக்க முடியுமாஎன்று வினவிய போதுநானே அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கிறேன் என்று சங்கர மடத்திற்கு அழைத்துச் சென்றார்இம்மதத்தின் முகப்பில் லக்ஷ்மி நாராயணர் ஆலயம் அமைந்துள்ளது பூரி ஜெகந்நாதரையும் தரிசனம் செய்கின்றோம்.


விநாயகர்

v




ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த கற்பக விருட்சம்

2500  வருடங்களுக்கு முற்பட்டது




அடுத்து ஆதி சங்கரரின் சீடர் தோடகாச்சரியர் தவம் செய்த குகைக்கு அழைத்து சென்றார்அங்கு ஆதி சங்கரர் தோடகாச்சாரியாருக்கு உபதேசம் செய்யும் கோலத்தை முதலில் தரிசித்தோம்மின் விளக்குகளை அனைத்து ஸ்படிக லிங்கத்திற்கு தீபாரதனை செய்தனர்மஹா ம்ருத்ஜய மந்திரம் ஜபித்தோம்தீப ஒளியால் ஒளிரும் அண்ணமலையாரானஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியை தரிசனம் செய்தோம்திருக்கயிலை நாதரையே தரிசனம் செய்த உணர்வு பெற்றோம்தோடகாச்சாரியார் தமது குருவின் வேதாந்த அறிவுத்திறன் குறித்து பாடிய தோடகம் என்ற அமைப்பில் பாடிய தோடகாஷ்டகம் பாராயணம் செய்தோம்சிறிது நேரம் அமர்ந்து ஐந்தெழுத்து மந்திரம்  ஜெபித்தோம்.. எங்கள் திட்டப்படி ஜோஷிர்மட்டில் கற்பக விருட்சம் தரிசிப்பது இருக்கவில்லைஆயினும் அவனருளால் ஒரு அருமையான தரிசனம் கிட்டியது.



ஆச்சார்யாள் தவம் செய்த குகையில் அவர் சிலை


லக்ஷ்மி நாராயணர் சன்னதி 



ஆதி சங்கரர் தோடகாச்சாரியாருக்கு உபதேசம் செய்யும்  திருக்கோலம்


தோடகாச்சாரியர் பற்றிய சிறு குறிப்புங்கர விஜயம் எனும் நூலின்படிஒரு முறை ஆதிசங்கரர் சிருங்கேரியில் தங்கியிருந்த போது கிரி என்றழைக்கப்படும் ஆனந்தகிரி என்ற சிறுவனை சந்தித்தார்அச்சிறுவனின் பலன் நோக்காத கடும் உழைப்பை அறிந்துஆனந்தகிரியைத் தனது சீடனாக ஏற்றார்ஆனந்தகிரி தனது  குரு ஆதிசங்கரர் மீது அதிக பக்தி கொண்ட சீடர்கால நேரம் பாராது சங்கரருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததால் சங்கரரின் பிரியமான சீடரானார்ஒரு முறை சங்கரர் தனது சீடர்களுக்கு அத்வைத வேதாந்த பாடங்களை உபதேசிக்க காலதாமதம் ஆவதைக் கண்ட மற்ற சீடர்கள்காலதாமதத்திற்குக் காரணம் கேட்கதுணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தகிரி வந்த பிறகு வகுப்பைத் துவக்கலாம் என்றார் அதற்கு அச்சீடர்கள் அவனுக்கு என்ன புரியப்போகிறது என்று ஏளனமாக பேசினார்கள். தமது சீடர்களின் கர்வத்தை அடக்க முடிவு செய்தார்.  , திருப்பெருந்துறையில்  அன்று குருந்த மரத்தடியில் குரு வடிவில் வந்து மாணிக்கவாசகருக்கு அனைத்து ஞானங்களையும் சிவபெருமான் அருளியது போலஆச்சார்யாள் கிரிக்கு தன் நயன தீக்ஷையால் கிரிக்கு   அனைத்து    ஞானத்தையும் அருளினார்ஆனந்தகிரி பின்னர் தோடக  எனும்  சமஸ்கிருத செய்யுள் அமைப்பில் ஆதிசங்கரரின் வேதாந்த அறிவுத் திறன் குறித்து எட்டு பாடல்கள் பாடினார்அது முதல் ஆனந்தகிரி, தோடகாச்சாரி என்று அழைக்கப்பட்டார்.


திருக்கயிலையிலிருந்து  ஆதி சங்கரர் கொணர்ந்த
 ஸ்படிக லிங்க தரிசனம் 


மஹா மேரு


அருகில் அமைந்துள்ள ஸ்ரீலலிதா மஹா திரிபுர சுந்தரி அம்பாளை அருமையான அலங்காரத்தில் தரிசித்தோம்மேலும் அம்பாள் மஹா மேருவாகவும் எழுந்தருளியுள்ளாள்உடன் யோகினிகளும் எழுந்தருளியிருப்பதை தரிசித்தோம்திரும்பி வரும் வழியில் பவிஷ்ய கேதார்நாத் என்றொரு ஆலயத்தை கவனித்தோம்கேதார்நாத்தில் உள்ளதைப் போலவே இவ்வாலயத்தில் மலை முகடாக சிவபெருமானை தரிசிக்கலாம்.  மறுநாள் அவுலி பயணம் எவ்வாறு இருந்தது  என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.



4 comments:

கோமதி அரசு said...

ஜோஷிர்மட்டில் தங்கினோம், நீங்கள் இந்த பதிவில் சொன்ன இடங்களை தரிசிக்கவில்லை.
இந்த பதிவின் மூலம் நேரில் தரிசனம் செய்த உணர்வு கிடைத்தது.
மகிழ்ச்சி.
தொடர்கிறேன் இனிய யாத்திரையை.

S.Muruganandam said...

மறு முறை சென்றால் சென்று தரிசியுங்கள்.

மிக்க நன்றி.

Anuprem said...

கடினமான நடை பயணம் தான் ஆனாலும் அலக்நந்தா நதிக்கரையோரம் நடக்க பிராப்தம் வேண்டும் ...தங்களுக்கு அது உள்ளது ..

மேலும் பல புதிய இடங்களை தரிசித்துக் கொண்டேன் ...அருமை ஐயா

S.Muruganandam said...

எல்லாம் அவன் செயல். மற்ற எவ்விடத்திலும் எந்த தடங்கலும் ஏற்படவில்லை.