Friday, December 13, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 74

யோக பத்ரி - பாண்டுகேஷ்வர்

 ஜோஷிர்மட்டில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் பாண்டுகேஷ்வரில்  யோக  பத்ரிநாதரை சேவித்தோம்முக்கிய
 பாதையிலிருந்து    சுமார் ½ கி.மீ கீழிறங்கி கிராமத்தில்
 உள்ள இவ்வாலயத்திற்கு  செல்ல வேண்டும்பாண்டு ராஜா தனது இறுதி காலத்தை இங்குதான் கழித்தார். இவ்வாலயம் பஞ்ச பத்ரிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

பாண்டுகேஷ்வர் கிராமம்


இவ்வாலயம் ASI அதாவது தொல்துறைத்துறையினரின் பாராமரிப்பில் உள்ளதைக்கூறும் பெயர்ப்பலகை.


யோகபத்ரிநாதர் - வாசுதேவர் சன்னதிகள்

 பாண்டவர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து தான் துவங்கினர். துர்வாச முனிவரின் சாபத்தால் பாண்டு இராஜா மான் ரூபத்தில் இங்கு தவம் செய்ய பெருமாள் தோன்றி சாப விமோசனம் அருளி, தலை சிறந்த புத்திரர்களை பெறுவீர்கள் என்று வரம் கொடுத்தார் என்று தல புராணம் கூறுகின்றது.  


மிகவும் பழமையான கோயில் இரண்டு சன்னதிகள் உள்ளனமுதலாவதில்  பஞ்ச லோக மூர்த்தியாக அமர்ந்த கோலத்தில் கையில் சங்கு சக்கரம் ஏந்தி  சேவை சாதிக்கின்றார் பஞ்ச பாண்டவர்களின் தந்தை பாண்டுவுக்கு வரம் அளித்த யோக பத்ரிநாதர்இவருடன் வரம் பெற்ற  பாண்டுவும்அவரது  இரண்டாவது மனைவியும் நகுல சகாதேவர்களின் தாயுமான  மாத்ரியையும் தரிசனம்  செய்கின்றோம். ஜோஷிர்மட்டில் எவ்வாறு அதிகாலை திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறுகின்றதோ அது போலவே  இவ்வாலயத்திலும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. 

 இரண்டாவது சன்னதியில் நின்ற கோலத்தில் வாசுதேவராக சேவை 
சாதிக்கின்றார் பெருமாள்.திருக்கரங்களில் பஞ்சாயுதங்கள் தாங்கியுள்ளார். கோயிலின் கோபுரம் இமயமலையின் ஆலயங்களின் கோபுரங்கள்  உருளை வடிவத்தில் மேல் பகுதி உருண்டை கல் மற்றும் கலசத்துடன் எழிலாக விளங்குகின்றதுசன்னதிக்கு வெளியே சிவலிங்கம் ற்றும் ணேசரும் அருள் பாலிக்கின்றனர்


கோவில் வளாகத்தில் அருமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஒருமண்டம் உள்ளதுஇமய மலைகளின் ஆலயங்களைப் போல இவ்வலயத்திலும் ஒரே பிரகாரம்தான் உள்ளது. கிராமத்தில் உள்ள வீடுகளில் பல வண்ண வண்ண மலர்கள் பூத்திருந்தன. அவற்றில் சிலவற்றை கீழே காண்கின்றீர்கள்.


குளிர்காலத்தில் பத்ரிநாதர் ஜோஷிர்மட் எழுந்தருளும் போது, உத்தவரும் குபேரனும் யோகபத்ரி தலத்திற்கு எழுந்தருளுகின்றனர். தியான கோலத்தில் பத்ரிநாதர், கிரீடம் அற்புதமான வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தியும் தியான கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். லக்ஷ்மி நாராயணரும் அருள் பாலிக்கின்றார்.  


யோக பத்ரியில் குழுவினர்







பத்ரிநாத் செல்லும் வழியில் இருந்த நிலச்சரிவு


செல்லும் போது வழியில் பல இடங்களில் நிலச்சரிவின் வடுக்களை காண முடிந்தது மற்றும் பாதையும் மோசமாக இருந்தது. ஆயினும் பயணம் தடைப்படவில்லை. 


ஹனுமான் சட்டி

பீமன் சௌகந்திக மலரைப் பறிக்க வந்த போது ஹனுமன் ஒரு கிழக்குரங்கின் வடிவை எடுத்து அமர்ந்திருந்தார். அவரது வால் பீமன் செல்லும் வழியில் இருந்ததால், பீமன் கர்வத்துடன், குரங்கே வலைக் சுருக்கிக்கொள் என்று கூறுகின்றான். பீமனின் கர்வத்தை அடக்க ஹனுமன் வாலை நகர்த்திவிட்டு நீ உன் வழியில் செல் என்கிறார். பீமன் எவ்வளவு முயன்றும் வாலை அசைக்கக்கூட முடியவில்லை. களைத்து நின்ற பீமன் கர்வம் அடங்கிய பின், ஹனுமன் தனது சுய ரூபத்தைக் காட்டி பீமனை வாழ்த்தி அனுப்பினார்.  ஹனுமன், பீமன் இருவருமே வாயு அம்சம் அல்லவா. 
இந்நிகழ்வு இங்கு ஹனுமன்சட்டியில் நடந்ததாக நம்பிக்கை. 

யாரையும் துச்சமாக மதிக்க வேண்டாம், யாரையும் அவமதிக்க வேண்டாம்,  யாரையும் வெறுக்க வேண்டாம் நமக்கு உணர்த்தும் தலம் என்று மேலே உள்ள பலகையில் எழுதியுள்ளனர்.


ஓம் ஹம் ஹனுமதே நம:

ஹனுமன் ஆலயம்


ஆப்பிள் மரங்கள்

எந்தவித  தடங்கலும் இல்லாமல் பத்ரிநாத் வந்தடைந்தோம். பத்ரிநாத்தில் தரிசனம் எவ்வாறு இருந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

யாத்திரை தொடரும் . . . . .

2 comments:

கோமதி அரசு said...

//யாரையும் துச்சமாக மதிக்க வேண்டாம், யாரையும் அவமதிக்க வேண்டாம், யாரையும் வெறுக்க வேண்டாம் நமக்கு உணர்த்தும் தலம் என்று மேலே உள்ள பலகையில் எழுதியுள்ளனர்.//

அருமையான வாசகம்.
பத்ரிநாதர் தரிசனம் எப்படி இருந்தது என்று படிக்க ஆவல்.
படங்கள் எல்லாம் அழகு.
பூக்கள் அழகு.

S.Muruganandam said...

பத்ரிநாதரின் தரிசனமும் அருமையாகவே அமைந்தது, விரைவில் பதிவிடுகிறேன்.